தமிழ் என்னும் பதத்துக்கு பல அர்த்தங்கள் உள்ளன. அதில் அழகு , முருகன் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த பொருள். தமிழ் கடவுள் முருகப் பெருமான். இவர் தமிழ் மக்களின் மனத்தை கவர்ந்தவர், காப்பவர் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  இசை என்பது மொழியுடன் சேர்ந்த வளர்கிறது! முதல் பாடலாக கல்கி ரா.கிருஷ்ணமுர்த்தி எழுதிய முருகன் கவி உங்களுக்கு, குறிப்பாக உங்கள் உள்ளத்துக்கும் செவிக்கும் தூய தமிழ் இசை விருந்தி .

வருணனை:

முருகனைச் சிறப்பித்து கவிஞர் எழுதியிருக்கிறார். எளிய வரிகள்தாம். ஆனாலும் பாடலின் ஒலிநயம் பாடுதற்கேற்ற தன்மையைத் தந்துள்ளது.

பூங்குயில் – மாமயில்

பொன் முகம் – இன்னமுது – மின்னல்

னிமலர் – வானில் – தேனிசை – தனிமை

வருவான் – மறவான்

பேரருளாளன் – பெருமிதத்தால்.

முதற்பாடலாக எந்த பாடல் வருவது என்பது பற்றி பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு இந்த பாடலைக் கொண்டு வந்துள்ளோம். உங்கள்  கருத்துகள் தேவை.

கண் கவர் கந்தன்

 

பா – 1 

பாடலாசிரியர் : கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
பாடியவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
இசையமைப்பு : (தெரியவில்லை)

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்.

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன இன்மொழி பகர்ந்தொரு
மின்னலைப் போலே மறைந்தான்.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்….

பனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில் இனிமை கண்டேன்

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்….

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னை மறவான்
பேரருளாளன் எனக்கருள்வான் எனும்
பெருமிதத்தால் மெய்மறந்தேன்.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்
பேரருளாளன் எனக்கருள்வான் எனும்
பெருமிதத்தால் மெய்மறந்தேன்.

கந்தன் கவர்ந்த கல்கி

செவிக்கும் உணவு :

http://gaana.com/song/poonkuyilkoovum

ஒரிஜினல் -> டி கே பட்டம்மாள் பாடியது

அடுத்த அடுத்த பாடல்கள் விரைவில் வெளி வரும்! உங்கள் விருப்பங்களையும் கருத்துகளையும் கமெண்ட் செய்யுங்க. தளம் இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளது!!!

Advertisements

4 thoughts on “பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்…

 1. பாட்டின் வரிகளும் இசையும், நித்யஸ்ரீ-யின் குரலும் ரசிக்க வைக்கிறது.

  பாராட்டுக்கள்!

  கல்கியின் இன்னொரு பாடல் :’மாலைப்பொழுதினிலே -ஒரு நாள் ‘
  எம்.எஸ் அவர்கள் பாடிய பாடல். முடிந்தால் தேடித் பிடித்துப் போடுங்களேன்.

  நேயர் விருப்பம்!

  1. ஓ, என்னிடம் அதுவும் உள்ளது, அடுத்த வாரம் கல்கி வரிகள் மற்றும் எம் .எஸ் அம்மா இசையில் அப்-பா வெளி வரும். இன்னும் பல பல கல்கி – எம்.எஸ் பாடல்களும் வரும், அடிக்கடி இது போல உங்கள் ஆதரவை கொடுங்கள், விருப்பதை சொல்லுங்ள் !

 2. அற்புதமான பாடல்.. அருமையான சந்தம் அமைந்த பாடல் 😉
  தமிழ் இசைன்னாலே எனக்கு நியாபகம் வரும் பாடல்..மிக விருப்பமான பாடல்.. சிலப்பதிகார பாடல், வடவரையை மத்தாக்கி.. எம். எஸ் குரலில் கேட்க காதுகள் கோடி வேண்டும் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s