நீண்ட நாட்களாகி விட்டது. இனிமேல் இந்த வருடத்தில் தொடர்ச்சியாக இயங்க முடிவு செய்துள்ளோம். முன்னமே இதைப் போல சில Promo முயற்சிகள் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சூழ்நிலை காரணமாக சில திட்டங்கள் நிறைவேறாமல் போய்விட்டன.

புது வருடத்தை சிறப்பாக துவங்க எண்ணி தற்போது விஸ்வரூபம் படப் பாடல்களை முழுவதுமாய் கொண்டு வர முயற்சித்தோம்.அதன் விளைவுதான்  இந்தப் பதிவு.

விஸ்வரூபம் படப் பாடல்கள் முழுதும், ஒரே பதிவில், அதுவும் தமிழில் வருவது இதுவே இணையத்தில் முதல் முறை என நம்புகிறோம்.

படம் – விஸ்வரூபம்
இசை – ஷங்கர் இஷான் லாய்

பாடல் 1
பாடலாசிரியர் – வைரமுத்து
பாடியவர்(கள்) – சுராஜ் ஜகன்

எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்

நெருப்புக்கு பிறந்தான்,
நித்தம் நித்தம் மலர்ந்தான்.
வேளை வந்து சேரும் போது,
வெளிப்படும் சுய ரூபம்

யார் என்று புரிகிறதா ?
இவன் தீயென்று தெரிகிறதா ?
தடைகளை வென்றே,
சரித்திரம் படைத்தவன்,
ஞாபகம் வருகிறதா ?

யாருக்கும் அடிமை இல்லை,
இவன் யாருக்கும் அரசன் இல்லை.
காலங்கள் தாண்டி கடக்கிற பொழுதும்,
காற்றுக்கு காயம் இல்லை.

எவன்…

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுப்படும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்
என்ன ரூபம் எடுப்பான், எவனுக்கு தெரியும்,
சொந்த ரூபம், மாற்றி மாற்றி, எடுப்பான் விஸ்வரூபம்

யார் என்று…

ரீமிக்ஸ் பாடல் :  

separator-notes

பாடல் 2
பாடலாசிரியர் – கமல்ஹாசன் 
பாடியவர்(கள்) – ஷங்கர் மஹாதேவன், கமல்ஹாசன்

தக தக தக
தின தின தின
நக நக நக

திகிட தான தான தான
திகிட திகிட தாக்கின தான
தாக்குட தான
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தான தானகின்
தடானு தான தானகின்
தலானு தான தானகின்
தலானு

அதி நவநீதா, அபிநய ராஜா,
கோகுல பாலா, கோடி பிரகாஷா,
விரக, நரக, ஸ்ரீ ரக்க்ஷகமலா,
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன் ?
இத்தவணை என்னை ஆட்கொள்வாயா,
சூடிய வாடலை சூடியவா,
களவாடிய சிந்தினையை திரும்பத்தா,
பூதனையாக பணித்திடுவாயா ?
பாவை விரகம் பருகிடுவாயா ?
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!!
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!!
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா வா !!!

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
கிருஷ்ணா……

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனாகூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே….

உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
கமபத நிஸ பம கம ரிகரிஸ

உன்னை காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே

நளின மோக, ஷ்யாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ, ஸ்ரூதிலயகங்கா
க்டதகதின் தீம் தின்னா
சரிவர தூங்காது வாடும்
அனுதினமுனக்காக ஏங்கும்,
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

க்ருடுதா க்ருடுதீம்
க்ருடுதா க்ருடுதீம்
ததகிட தக தா
ததகிட தக தா
ததகிட தக
ததகிட தக
ததகிட தக
தாக தாக
க்டுதா

அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன்.
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் ,
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன்
எதிர்பாராமலே அவன்………..
எதிர்பாராமலே அவன்……. ஓ
பின் இருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் – எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று
ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறைந்தாளடி

உடல் அணிந்த ஆடை போல்
என்னை நீ அணிந்து கொள்வாயா, இனி நீ
இனி நீ – கண்ணா
தூங்காத என் கண்ணில்
துயில் உரித்த கண்ணன் தான் -இனி நீ
இனி நீ

இது நேராமலே நான் –
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
…………………….
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி
வாழ்வேனடா

தின தக தக தின
தக தக தின
தக தக தின
தக தக தின
தக தின
தக தின
தோம்ன தோம்ன தகிட
தோம்ன தகதிலான துமுதகிட
தக தரி கிட தக
தக தரி கிட தக
தக தரி கிட தக
தக தரி கிட தக
நக நக நக

நேயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!

separator-notes

பாடல் 3
பாடலாசிரியர் – வைரமுத்து
பாடியவர்(கள்) – பென்னி தயாள், கமல்ஹாசன்

On the ground,
in the dirt,
in the heat,
sense of dead and
total blind,
when u wer born,
on yur mind…..

Hear the bronze of battle, beating in yur head !
Am the only soul, in singing, is the song all the day !
I am not a man, but a shot waiting to explode !
On my shoulders, got a burning novel load !

துப்பாக்கி எங்கள் தோளிலே
துர்பாக்கியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
எப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள் தேர்ந்தேடுக்கவில்லை
போர்தான் எம்மை தேர்ந்தேடுக்கொண்டது
எங்கள் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது

ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சம கர்வம் கிடையாது
நீதி காணாமல் போர்கள் ஓயாது

துர்பாக்கியங்கள் தோழனே
தோள் கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையில்,
தேநீரும் பருகும் மரணமே

With the life full in your hand
Its down to match the man
To live you gotta let die
N there is an eye for an eye
U cant afford to fail
Gotta a fighting truth in vain
Got to live by the warriors code
Cannot afford to look back down the road

பூமியை தாங்க கொஞ்சம் நேரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க ஒரு  நுரையீரல் கேட்கின்றோம்
எஃகு தசைகளாய் ஒரு இதயம் கேட்கின்றோம்
இருநூறாண்டு இளமை கேட்கின்றோம்

துப்பகியும் தலையணை தூங்கி திரிகின்றோம்
தோளோடு எம்மரணத்தை தூக்கி திரிகின்றோம்
ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சம கர்வம் கிடையாது !

நீதி காணாமல் போர்கள் ஓயாது !

separator-notes

பாடல் 4
பாடலாசிரியர் – கமல்ஹாசன்
பாடியவர்(கள்) – கமல்ஹாசன், நிக்ஹில் டி’சௌசா

There is a place far away
I wanna to be there some day
(There…)

அணு விதைத்த பூமியிலே
அறுவடைக்கும் அணு கதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால்
தங்கும் இடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில்
இன்று வரை இல்லை

பார் சொல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்
பாரடா

கருவைறையும் வீடல்ல
கடல சூழ் உலகம் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இல்லை
நம் நோக்கி அன்பன்றி வேறு மருந்தில்லை
(பார்…)

There is a place far away
I wanna to go there some day
(There…)

separator-notes

முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் DTH மூலம் வெளி வர உள்ளது. அதுவும் தியேட்டருக்கு வரும் முன். பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும், இந்த விஸ்வரூபத்தை. ஆனாலும் இது ஒரு உலகத்தரம் வாய்ந்த படம் என்றே சொல்லலாம் !

மேலும் இது போல பல நல்ல பாடல்கள் இசைப்பாவை அலங்கரிக்கும். உங்கள் வாசகர் விருப்பங்களை அனுப்புங்கள். இங்கே இதற்கு முன் வந்த பழைய பாடல்களை ரசியுங்கள். மறக்காமல் பகிருங்கள். இசை என்றால் இன்பம் !

Advertisements

11 thoughts on “விஸ்வரூபம் பாடல்கள் !

   1. அணு விதைத்த பூமியிலே
    அறுவடைக்கும் அணுக் கதிர் தான்
    பேராசை கடல் பொங்கி விட்டால்
    தங்கும் இடம் இல்லை
    புது வீடெதுவும் பால் வெளியில்
    இன்று வரை இல்லை
    பார் சொல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
    நம்மில் யார் இறந்தாலும்
    ஒரு தாய் அழுவாள்
    பாரடா…
    கருவைறையும் வீடல்ல
    கடல் சூழ் உலகம் உனதல்ல
    நிரந்தரமாய் நமதென்று
    சொல்லும் இடம் இல்லை
    நம் நோய்க்கு அன்பன்றி
    வேறு மருந்தில்லை

    பார் சொல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
    நம்மில் யார் இறந்தாலும்
    ஒரு தாய் அழுவாள்
    பாரடா…

 1. ‘உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே’ பாடல் பிடித்திருக்கிறது. கமலின் ஜதி சொல்லும் திறன் வியக்க வைக்கிறது.
  பன்முகக் கலைஞன் வாழ்க!

 2. ரொம்ப நல்ல முயற்சி. நன்றி. பாடலுக்கான படங்களுடன், பாடலாசிரியர் பெயர் இடம் பெற்றிருப்பது சிறப்பு 🙂

  amas32

 3. பாடல் வெளியீட்டு விழா அன்றே மதுரையில் கேட்டோம். உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே’ பாடலை கமல்ஹாசனும், சங்கர் மகாதேவனும் இணைந்து பாடினர். இந்தாண்டின் சிறந்த பாடலென்று இப்போதே சொல்லிவிடலாம். அவ்வளவு இனிமையான பாடல். மற்ற பாடல்களும் அருமை.

  1. நன்றி, திருத்தி விட்டேன். இந்த பாடல் நம்மை மிகவும் கவர்ந்ததன் கரணம், இது ஒரு குறிபிட்ட,பழைய ஹிந்தி பாடலின் ராகத்தில் அமைந்துள்ளது ! விஜய் டிவியின் Vishwaroopam Makingல கமலே சொன்னார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s