மிகுந்த மகிழ்ச்சியோடு வணக்கம்.

இன்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்தநாள். அவருடைய பிறந்த தினத்தை இசைப்பாவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது. எனவே அவருடைய சிறப்பான இசையில் வெளிவந்த எண்ணற்ற பாடல்களில் இருந்து ஒன்றே ஒன்று இங்கே! நிச்சயம் அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பாடலாக இது இருந்திருக்கும் என நம்புகிறோம்.

நாயகனின் அறிமுகப் பாடலை இப்படியும் அமைக்கலாம் என்று எப்படி யோசித்தார்களோ தெரியவில்லை. பாடலின் காட்சியமைப்புகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவே அமைந்திருக்கும்.

வரிகளுக்கேற்ற வகையிலே குளிர்ச்சியான இசையும் ரஹ்மானிடமிருந்து கிடைத்ததுதான் பாடலின் வெற்றிக்கும் காரணமாகிறது.

கவிஞர் பெண்ணையும், நீரையும் ஒப்பிடுகிறார். எளிய வார்த்தைகளில் இனிய ஒப்பீடுகள். பாடலுள் நீந்திப் பயனடையுங்கள்.

இசை + வரி = இன்பம்

இசை + வரி = இன்பம்
இசை + வரி = இன்பம்


பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான் 

பாடிவர்கள் : உன்னி மேனன் 
படம் : ரிதம் 

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே!
ஒன்றா, இரண்டா காரணம் நூறு. கேட்டால் சொல்வேனே!
நீ கேட்டால் சொல்வேனே!

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு!
எழுந்தால் அருவி!
நின்றால் கடலல்லோ!
சமைந்தால் குமரி!
மணந்தால் மனைவி!
பெற்றால் தாயல்லோ!

சிறு நதிகளே!  நதியிடும் கரைகளே! கரைதொடும் நுரைகளே! நுரைகளில் இவள் முகமே!
சிறு நதிகளே! நதியிடும் கரைகளே! கரைதொடும் நுரைகளே! நுரைகளில் இவள் முகமே!

தினம் மோதும் கரை தோறும் அட! ஆறும் இசை பாடும்.
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே!
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ! (2)

காதலி அருமை பிரிவில்.
மனைவியின் அருமை மறைவில்.
நீரின் அருமை அறிவாய் கோடையிலே.
வெட்கம் வந்தால் உறையும்.
விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாழையிலே!

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ!
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ!
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ!
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ!

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே!
வட்டமிடும் நதியே!
வளைவுகள் அழகு.
உங்கள் வளைவுகள் அழகு. ஹோ!
மெல்லிசைகள் படித்தல்.
மேடு பள்ளம் மறைத்தல்.
நதிகளின் குணமே!
அது நங்கையின் குணமே!

சிறு நதிகளே!
நதியிடும் கரைகளே! கரைதொடும் நுரைகளே! நுரைகளில் இவள் முகமே!
நதியிடும் கரைகளே! கரைதொடும் நுரைகளே! நுரைகளில் இவள் முகமே!

தினம் மோதும். கரை தோறும். அட! ஆறும் இசை பாடும்.
…………………………………….
கங்கை வரும். யமுனை வரும். வைகை வரும். பொருணை வரும்.
…………………………………….

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாறாகி, பூக்களிலே தேனாகி, பசுவினிலே பாலாகும் நீரே!
தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகே தாயாகும் பெண்ணே!
பூங்குயிலே, பூங்குயிலே!  பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்.
நீர் நினைத்தால், பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்.

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே!
ஒன்றா, இரண்டா காரணம் நூறு. கேட்டால் சொல்வேனே!
நீ கேட்டால் சொல்வேனே!

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

இசைப்பா குழுவிடமிருந்து :

இந்த பாடல் புதிய வாசகர் ஒருவரால் எழுதப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறோம்.

பவானி என்கிற தோழி இசைப்பாவிற்காக இன்றைய தினம் எழுதி தந்துள்ளார்.

அவரின் தளத்தைக் காண.

தொடர்ந்து ஆர்வமிருக்கிற வாசகர்கள், தோழர்கள் தோள் கொடுத்தால் இசைப்பா வரவேற்கும் என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

முன்னர் வெளியிட்ட விஸ்வரூபம் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து இயங்க ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

இசைப்பா வாழ்த்துகள் !
இசைப்பா வாழ்த்துகள் !
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s