இசையின் இன்ப வணக்கங்கள்.

இன்று ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பிறந்தநாள். எனவே இந்த சிறப்பு பதிவு. மனதை கவரும் பாடல்கள் பலவற்றை அவர் தந்துள்ளார். அதில் இருந்து ஒரு மிக அழகான பெண்மையான மென்மையான பாடல். இந்த பாடலில் சம்பந்த பட்டவர்கள் அனைவரையும் பற்றி சொல்லியே ஆகா வேண்டும்.

முதலில் தாமரை. எனக்கு தெரிந்து பெண் கவிஞர்களில், இவர் ஒரு தனித்துவம் வாய்ந்த ‘தாமரை’. அருமையான தமிழ் வளம். அடுத்து பாடலை பாடிய கார்த்திக். துள்ளும் குரல். அழகுக்கு அழகு சேர்க்கும் நளினம்.கௌதம் மேனன், ஜோதிகா. பாடல் வரிக்கு மேலும் பலம் சேர்க்கும் வீடியோ. சம்பவங்களை அழகாக அடுக்கியிருப்பார். நாயகியின் அறிமுக பாடல் இதற்கும் மேலும் சிறப்பாக அமைய முடியாதென்று, அடித்து சொல்லாம்.

படம் – காக்க காக்க
பாடலாசிரியர் – தாமரை
இசையமைப்பாளர் – ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் – கார்த்திக் மற்றும் குழுவினர்

She is a fantasy !
She has a harmony !
No one knows, she is a mystery !
She fills your heart, with ectasy !

ஒரு ஊரில் அழகே உருவாய்,
ஒருத்தி இருந்தாளே !
அழகுக்கு இலக்கணம் எழுத,
அவளும் பிறந்தாளே !

அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே,
பல வருடம் பரிச்சயம் போல் இருக்கும்,
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்,
முதலாம் பார்வையிலே, மனதை ஈர்ப்பாளே !

(முதலாம்…)
(ஒரு ஊரில்…)

மரகத சோம்பல், முறிப்பாளே !
புல் வெளிப் போல, சிரிப்பாளே !
விரல்களை ஆட்டி ஆட்டி, பேசும் போதிலே,
காற்றிலும் வீணை உண்டு, என்று தோணுமே !

அவள் கன்னத்தின் குழியில்,
சிறு செடிகளும் நடலாம் !
அவள் கன்னத்தின் குழியில் – அழகழகாய்,
சிறு செடிகளும் நடலாம் – வித விதமாய் !

ஏதோ ஏதோ தனித்துவம்,
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே !

(ஒரு ஊரில்…)

மகரந்தம் தாங்கும், மலர் போலே,
தனி ஒரு வாசம், அவள் மேலே !
புடவையின் தேர்ந்த மடிப்பில், விசிறி வாழைகள் !
தோள்களில் ஆடும் கூந்தல், கரிசல் காடுகள் !

அவள் கடந்திடும் போது,
தலை அனிச்சையாய் திரும்பும் !
அவள் கடந்திடும் போது – நிச்சயமாய்,
தலை அனிச்சையாய் திரும்பும் – அவள் புறமாய் !

என்ன சொல்ல ?
என்ன சொல்ல ?
இன்னும் சொல்ல,
மொழியிலும் வழி
இல்லையே !

அவள் பழகும் விதத்தை பார்கையிலே,
பல வருடம் பரிச்சயம் போல் இருக்கும் !
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்,
முதலாம் பார்வையிலே, மனதை ஈர்ப்பாளே !
முதல் முதல் பார்வையிலே, மனதை ஈர்ப்பாளே !

(ஒரு ஊரில்…)

Triple Treat !
Triple Treat !

பாடலை கண்டு கேட்டு மகிழ :

இசைப்பா பொறுத்த வரை, இருவருமே புதியவர்கள் – ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தாமரை. ஆனாலும் நம் மனதில் பல பாடல்களை பதித்தவர்கள்.  இவர்கள் கூட்டணியில் பல சிறந்து பாடல்கள் வந்துள்ளன. இங்கும் விரைவில் வரும்.

இசை மீது எங்களை போல ஆர்வம் உள்ளவர்கள், பாடல்களை எழுதி பங்கு பெறலாம். வாசகர் விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆண்டு தொடங்கி வீறு நாடிப் போடுகிறது இசைப்பா, விஸ்வரூபம் பதிவு மட்டும் 100+ பார்வைகளை தாண்டி உள்ளது. நன்றி. இசை என்னும் இன்பம் எட்டு திக்கெங்கும் பரவட்டும்.

Advertisements

One thought on “ஒரு ஊரில் அழகே உருவாய்,

  1. நாயகியின் அறிமுகப் பாடல் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். நாயகன் பாடும் பாடல் என்றே இதுநாள் வரை நினைத்தேன்.

    ஒரு பெண்ணின் கவிதை வரிகள் என்பது கவிஞர் தாமரையின் வரிகள் நிரூபிக்கும்.

    மிகவும் ரசித்து ரசித்துக் கேட்டேன். ஜோதிகாவும் அந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் என்பது இந்தப் பாடலுக்கு ஓர் தனி அந்தஸ்தை கொடுக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s