காதலை எந்த விதத்திலும் சொல்ல/காண்பிக்க முடியும்…… என்பதற்கு இந்த பாடல் சான்று.

கண்ணீர், வருத்தத்தில் தான் வருமோ ?
தாயின் கர்ப்பம் தாண்டி, மறு முறை உயிர் கொள்ள முடியுமோ ?
முடியும் என்றல், உன் இசை கேட்டு அது சாத்தியமாகும் !
சலங்கைகள் பேச, மௌனம் பாடல் பாட,
மொழி உண்மை ஆனது !
கண்ணீர் உரையாடியது !
கவிதை பாடல் அரங்கேறியது !

பயணத்தில் பிரிந்து செல்லப் போகும் இருவரின் உள்ளத் துடிப்புகள், எப்படி இருக்கும் என சொல்கிறார் வைரமுத்து. மாட்டு வண்டி, கார் சகிதம் கிராம சாலைகளில் அழகா எடுக்கப்பட்டு இருக்கும் பாடல். பொருத்தமான குரல்கள். ஒரு கலவை இசை என, விரியுது உணர்வுகள்.

சங்கமம்
சங்கமம்

பாடல் பாடியது : ஸ்ரீனிவாஸ், சுஜாதா
பாடல் வரிகள் : வைரமுத்து
இசை :ஏ. ஆர். ரகுமான்
படம் : சங்கமம்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்.
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்.
எந்தன் தாயின், கர்ப்பம் தாண்டி,
மறுமுறை உயிர் கொண்டேன்.
உன்னால், இருமுறை உயிர் கொண்டேன்.

(முதல்முறை…)

முதல் முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் – ஏன் ?
கண்ணீருண்டு சோகமில்லை,
ஆமாம் மழையுண்டு மேகமில்லை !

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி,
அன்பே, என் மனசுக்குள் கட்டியதென்ன ?

சலங்கைகள் அணிந்தும்,
சத்தங்களை மறைத்தாய் – பெண்ணே
உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன ?

விதையொன்று உயிர் கொள்ள,
வெப்பக்காற்று ஈரம் வேண்டும்.
காதல் வந்து உயிர் கொள்ள,
காலம் கூட வேண்டும்.

ஒரு விதை உயிர் கொண்டது – ஆனால்
இரு நெஞ்சில் வேர் கொண்டது !

சலங்கையே கொஞ்சம் பேசு,
மௌனமே பாடல் பாடு,
மொழியெல்லாம் ஊமையானால்,
கண்ணீர் உரையாடும் – அதில்
கவிதை அரங்கேறும் !

பாதையும் தூரம்,
நான் ஒரு பாரம்,
என்னை உன் எல்லை வரை,
கொண்டு செல்வாயா ?
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா ?
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா ?

தந்தை தந்த உயிர் தந்தேன்.
தாய் தந்த உடல் தந்தேன்.
உறவுகள் எல்லாம் சேர்த்து,
உன்னிடம் கண்டேன்………

மொத்தத்தையும் நீ கொடுத்தாய் – ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்த்தாய் !

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்.
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்.
எந்தன் தாயின், கர்ப்பம் தாண்டி,
மறுமுறை உயிர் கொண்டேன்.
உன்னால், இருமுறை உயிர் கொண்டேன்.

(முதல்முறை…)

முதல் முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் – ஏன் ?
கண்ணீருண்டு சோகமில்லை,
ஆமாம் மழையுண்டு மேகமில்லை !

இசைப்பா குழுவிடமிருந்து :

என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை 2013ஆம் வருடம் இசைப்பாவிற்கு மிகவும் இனிப்பாக உள்ளது. எல்லாம் எந்த இசை தான் காரணம்.நொடிப்பொழுதில், காந்தம் போல பலரை கட்டி இழுத்து விடுகிறது.புதிதாக பல பேர், எங்களுடன் பங்காளிக்க, இசையை பகரிந்து பருக சேர்ந்து உள்ளார். அனைவரும் நல்வரவு மற்றும் நன்றிகள்.

இந்த பாடலை எழுதியது தோழி அனந்தலக்ஷ்மி அவர்கள்.  அவரது தளம், ட்விட்டர் . வாழ்த்துகள்.

நீங்கள் எப்பொழுது சேர்வதாய் உத்தேசம் ? சீக்கிரம் சொல்லவும். அப்பறம், என் பாடலுக்கு ஏன் இன்னும் நாள் ஒதுக்கவில்லை என்று எல்லாம் கேட்கப்பிடாது. பாடல்களையும், உங்கள் (வாசகர்) விருப்பதை மட்டுமே கேட்கலாம்.

இசை வாழ்க ! இன்பம் பெருக !

Advertisements

5 thoughts on “முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்.

 1. இன்றைய வலைச்சரத்தில் நமது இசைப்பா வலைத்தளம் அறிமுகம் ஆகியிருக்கிறதே, பார்த்தீர்களா?

  சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டேன்.

  http://blogintamil.blogspot.in/2013/01/2521.html

  நம் எல்லோருடைய சார்பிலும் நன்றி சொல்லி இருக்கிறேன்.

  பாராட்டுக்கள்.
  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s