இன்று எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள்.பலருக்கும் தெரிந்திருக்கும்.இசைப்பா மூலமாக அவருக்கு நினைவுகூற விருப்பம்.

எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களில் எதை இங்கு தருவது என்பதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது.இறுதியாக இம்முறை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் திரு.டி.எம்.சௌந்தரராஜன் ஆகியோரை இசைப்பாவில் அறிமுகப்படுத்த எண்ணி இப்பாடலை தேர்வு செய்தோம்.

கவிஞர் வாலிக்கு இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல். ஏன் எம்.ஜி.ஆர்-க்கும் நமக்குமே பிடித்த பாடல்தானே!

வாழும் வாத்தியார் !

வாழும் வாத்தியார் !

பாடலாசிரியர் : வாலி 
பாடியவர் : டீ.எம்.சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
படம் : எங்கள் வீட்டு பிள்ளை

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்.
உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை.
அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.

ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்!
உடல் உழைக்க சொல்வேன்!
அதில் பிழைக்க சொல்வேன்!
அவர் உரிமை பொருள்களை தொட மாட்டேன்!

சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!
அவர் எப்போதும் வால் பிடிப்பார்!

எதிர்காலம் வரும்!
என் கடமை வரும் !
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்!
பொது நீதியிலே, புது பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன்.

இங்கு ஊமைகள் ஏங்கவும்,
உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன் ?
ஒரு கடவுள் உண்டு!
அவன் கொள்கை உண்டு!
அதை எப்போதும் காத்திருப்பேன்.

முன்பு ஏசு வந்தார்!
பின்பு காந்தி வந்தார்!
இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார்.
இவர் திருந்தவில்லை!
மனம் வருந்தவில்லை!
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்.

வாலிப மெல்இசை

தொடர்ந்து இசைப்பா வெற்றிகரமாக இயங்க உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. பங்களிக்கவோ, குறைகளை சுட்டவோ, பாராட்டவோ மறுமொழியலாம்.

Advertisements