இசையின் இன்ப வணக்கம்.

சென்ற மாதம் இசைப்பாவிற்கு சிறப்பாக கழிந்தது. புதிய பங்களிப்பாளர்கள், விஸ்வரூபம் பாடல்கள்…. என நிறையவே சொல்லலாம். இந்த பிப்ரவரி மாதமும் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு இசைப்பா தயாராகத் திட்டமிட்டுள்ளது.

இந்த மாதம் முழுக்க அன்பு, காதல் முதலான மென் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களை வரிசையாக வெளியிடத் திட்டம்.

முதல் பாடல் இதுதான் என்று நேற்றுதான் தீர்மானித்தோம். காரணம் கவிஞர் அறிவுமதி அவர்கள் ட்விட்டர் தளத்தில் நேற்று இணைந்துள்ளார். சொடுக்கவும் -> @Poet_Arivumathi. ஆனால் பலருக்கும் அவர் யாரோ ஒரு கவிஞர் என்பதைப் போல குறிப்பிட்டிருந்தனர். அதற்குவிடை சொல்லும் வகையில் இன்று அவரை இசைப்பாவில் அறிமுகம் செய்கிறோம். அவர் அதிகமான திரைப்பாடல்கள் எழுதவில்லையென்றாலும் எழுதியவையெல்லாமே சிறப்பாகவே எழுதி உள்ளார். இப்போது ஆதிபகவன், அன்னக்கொடியும் கொடிவீரனும் உள்ளிட்ட புதிய திரைப்படங்களிலும் எழுதியுள்ளார்.

இவருடன் சேர்ந்து இன்னும் ஒரு புதிய இசையமைப்பாளர் அறிமுகம் : வித்யாசாகர், சில படங்களே செய்து இருந்தாலும் சிறந்த இசை.

இப்பாடல் பலரது காதுகளிலும் இனிமையாக ஒலித்திருக்கும் என நம்புகிறோம். இல்லையென்றாலும் இனி ஒலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

காதலியை காதலன் வர்ணிக்கிறான். அவள் குணநலன்களைப் பாடுகிறான். அவள் மேல் குதூகலம் கொள்கிறான்……இன்னும், இன்னும்…..

அறிவும் இசையும் !
அறிவும் இசையும் !

பாடலாசிரியர் : அறிவுமதி
பாடியவர் : ஹரிஹரன், சாதனா சர்கம்
இசை : வித்யாசாகர்
படம் : ரன்

பொய் சொல்லக் கூடாது காதலி,
பொய் சொன்னாலும் நீயே என் காதலி !

(பொய்…)

கண்களால் கண்களில் தாயமாடினாய்,
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் !
பொய் ஒன்றை ஒப்பித்தாய்,
ஐஐயோ தப்பித்தாய்,
கண் மூடி தேட தான்,
கனவெங்கும் தித்தித்தாய் !

(பொய்…)

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேனே,
ரசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டேனே !
கண்டவுடன் என்னையே தின்றதடி விழியே,
என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே !

அடி சுட்டும் விழி சுடரே,
நட்சத்திர பயிரே,
ரெக்கை கட்டி வா நிலவே !

(பொய் ஒன்றி…)
(பொய்…)

ஒரு மழை என்பது, ஒரு துளிதானா, கண்ணே !
நீ ஒற்றை துளியா, கோடி கடலா,
உண்மை சொல்லடி பெண்ணே !

கண்ணுகுளி நடுவே,
சிக்கிக்கொண்டேன் அழகே !
நெற்றி முடி வழியே,
தப்பி வந்தேன் விழியே !

அடி பொத்தி வைத்த புயலே,
தத்தளிக்கும் திமிரே,
வெட்கம் விட்டு வா வெளியே !

நில்லென்று தண்டித்தாய்,
உள் சென்று கண்டித்தாய் !
சொல்லென்று கெஞ்சத்தான்,
சொல்லாமல் வஞ்சித்தாய் !

(பொய்…)

உங்கள் இசை விருப்பங்கள், மறு மொழிகள், பாராட்டுகள், பரிந்துரைகள், பங்களிப்பு என்று அனைத்தும் எங்களுக்கு தேவை. இசை மூலம் அன்பும், இன்பமும் ஒருசேர வளரட்டும் !

Advertisements

8 thoughts on “பொய் சொல்லக் கூடாது காதலி !

 1. நல்லதொரு பாடல்.
  ‘நில்லென்று கண்டித்தாய்,
  உள் சென்று தண்டித்தாய்’
  என்று இருக்க வேண்டும்.

  நேயர் விருப்பம்: மலரே! மௌனமா?

  1. மாமி,

   நீங்கள் சொல்லிப் போடாமலா….
   இந்த மாத காதல் பாடல்களில் இதுவும் ஒன்றாக வரும் 🙂

 2. அறிவுமதி வீடூ புது பாடகர் எல்லோருக்கும் புகலிடம்.. இளம் பாடகர்களை கேட்டால் எல்லோரும் அறிவு மதியைப்பற்றி புகழந்து .பேசி அவரால் தான் சினிமாதுறைக்கு வந்ததாய் சொல்வார்கள்..

  //இந்த மாதம் முழுக்க அன்பு, காதல் முதலான மென் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களை வரிசையாக வெளியிடத் திட்டம்.//

  அருமையான திட்டம் தொடருங்கள் தொடர்கிறேன்.
  வாழ்த்துக்கள். இன்றைய பாடல் அருமை.

  1. திருமதி கோமதி அரசி,
   நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, அவர் தான் எல்லா திரையுலக பாடகர்களின் அன்பு அண்ணன். அதே போல ஆங்கிலமே கலக்கமால் தமிழ் பேசுவதில் வல்லவர் கவிஞர்.

   இந்த மாதம் காதலை சிறப்பிக்கும் வகையில் பல பாடல்கள் வர உள்ளன. தொடர்ந்து உங்கள் ஆதரவுக்கு நன்றி ! விரைவில் நீங்களும் பங்களியுங்கள் 🙂

 3. அருமையான பாடல்: அற்புதமான வரிகள். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.. உங்கள் நற்பணி தொடரட்டும்.

 4. இந்தப் பாடலும் மிகச் சிறப்பாக இருக்கும். முடிந்தால் பகிருங்கள் :

  “பூமாலை ஆகாமல் பூக்கள் இங்கு வேகுதே..”

  படம் : ”ராசி” என நினைக்கிறேன்.

  ”என் வாழ்க்கைக் கோப்பைக்குள் விஷம் ஊற்றிக் கொண்டேனா…” அற்புதமான வரி..

 5. அருமையான பாடல் நான் நடிகர் மாதவனின் பெரிய ரசிகை நான் அடிக்கடி முணுமுணூக்கும் பாட்டில் இதுவும் ஒன்று

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s