இசையால் இதயம் தொட்ட வணக்கம்.
தொடர்ந்து பிப்ரவரி மாதப்பாடல்கள் பலரையும் ஈர்த்து வருகிறதை அறிகிறபோது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சி இன்றும் தொடரட்டும்.

இந்த பாட்டு அன்பின் வெளிப்பாடு. மழலைகளின் மீதான காதலின்,அன்பின் வெளிப்பாடு. வஸந்த் அவர்கள் இயக்கிய சத்தம் போடாதே என்கிற படத்தில் இடம்பெற்ற நாயகன் அறிமுகப்பாடல். படத்திற்குப் படம் பாடல்களைப் படமாக்குவதில் புதுமை செய்யும் இயக்குனர் இதில் ரொம்பவே மெனக்கட்டு அழகியலைக் கொண்டுவந்திருக்கிறார்.

முற்றிலும் 3-4 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாடல் நெடுக வெவ்வேறு உணர்ச்சிகளை அவர்கள் முகங்களின் வாயிலாக அழகாகப் பதிவு செய்திருப்பது உண்மையிலேயே மனதிற்கு நெருக்கமான ஒரு காட்சியமைப்பு.

நா. முத்துக்குமார்-யுவன் கூட்டணியில் வஸந்த்தின் இயக்கத்தில் உங்கள் மனதையும் கொள்ளை கொள்ள ஒரு பாடல் ஷங்கர் மகாதேவனின் மயக்கும் குரலில்.

எந்த   நேரம் உன்னை  பார்த்தாலும் உன் பொன் சிரிப்பு மனதை கொள்ளை கொள்ளும் !!!
மலரின் சிரிப்பு கூட வாடி விடும்!  உன் பொன் சிரிப்பு -வாடி இருக்கும் என் மனதையும் கடத்தி செல்கிறதே …!!!
உன் தீண்டலில் என் வலி மறக்கிறேன் !
உனது அழுகை கூட இனிமையே..!!!
எந்தவித கவலையும் இன்றி இருக்கிறாயே!!! எனக்கும் உன்னைப் போல் இருக்க ஆசை !!!
நீ யோசிக்கிறாயோ? அமைதியாக இருக்கிறாய் ..
எந்த மொழியில் இருக்கும் உன் யோசனை ?????
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டுகிறாயே சின்னக் கண்ணனே …புன்னகை  மன்னனே !!!
உன் சிரிப்பில் விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்!

முத்து யுவன் !
முத்து யுவன் !

பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்.
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

அழகு குட்டிச் செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி?

அழகு குட்டிச் செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை?
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை?
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண..!!

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரசித்திருப்பீர்கள் என் நம்புகிறோம். உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும், விருப்பங்களையும் வரவேற்கிறோம்.

Advertisements

3 thoughts on “அழகு குட்டிச் செல்லம் !!

 1. அழகு குட்டிச் செல்லம்
  உன்னை அள்ளி தூக்கும் போது
  உன் பிஞ்சு விரல்கள் மோதி
  நான் நெஞ்சம் உடைந்து போனேன்

  ஆளை கடத்திப் போகும்
  உன் கன்னக்குழியின் சிரிப்பில்
  விரும்பி மாட்டிக்கொண்டேன்
  நான் திரும்பி போக மாட்டேன்//

  பாடல் வரிகளும்,, பாடலும்,, கள்ளமில்லா குழந்தைகளும் பார்க்க, கேட்க ஆனந்தம்.

  பாடல் பகிர்வுக்கு மிக் மிக நன்றி.
  மிகவும் ரசித்தேன் பாடலை.
  உங்களுக்கு நன்றி அருமையான பாடலை கேட்க தந்ததற்கு.

 2. மிகவும் பிடித்த பாடல்… அடிக்கடி பாடும் பாடலும் கூட…

  எனது பதிவுகளில் மனதில் தோன்றும் பாடல்களை இணைப்பதும், பாடல் வரிகளை எழுதுவதும் வழக்கம்… இந்த பாடலை எப்படியாவது சந்தர்ப்பம் வந்த போது இணைக்க வேண்டும் என்று நினைத்த போது… சந்தோசமாக ஒரு பதிவு வாய்த்தது : (http://dindiguldhanabalan.blogspot.com/2012/11/GOSSIP.html)

  எங்கள் வீட்டுக் குழந்தைகளின் புகைப்படங்களை வீடியோவாக மாற்றி பின்னணி இசையில் சேர்க்கும் முதல் பாடலும் இதுவே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s