இசை வணக்கங்கள் !

சென்னை நகரம், வறுமையில் இருந்து வந்த வாலிபன்,  நகரத்தில் ஒரு நரகத்தில் வந்து வாழ்கிறான். அவனுக்கு மட்டும் மகிழ்ச்சி தரும் தேவதையாக ஒரு சக தொழிலாளி. இருவரும் பரஸ்பரத்தில் அன்பு கொள்கின்றனர். காதல் என்னும் செடி வளர்கிறது. இரவில் உறங்கும் முன் அவளையே நினைத்துப் பார்க்கிறான் நாயகன். அவளிடம் என்ன உண்டு ? என்ன இல்லை ? அதில் என்னை கவர்ந்தவை எவை, எவை? வசன நடையில் கவிதை, ஆனாலும் இனிமை! அதுதானே நமக்கும் தேவை!

நிதர்சனத்தை ஒட்டி வரும் சூழ்நிலைகள் மற்றும் பாடல்கள், திரையில் மிக குறைவு. அதில் இந்த பாடல் ஒரு நேர்த்தி . அனைத்து வடிவங்களிலும். சராசரியாக உள்ள எந்த காதலனுக்கும் பொருந்தும் வரிகள்….. அலட்டிக் கொள்ளாத குரல், வரிகளை கெடுக்காமல் மெல்லிய இசை, இயல்பான சம்பவங்களின் காட்சிகள் என பாடலுக்கு பலங்கள் அதிகம்.

இசைப்பாவில் விஜய் ஆண்டனி அவர்களின் அறிமுகம் இந்தப் பாடல். இந்த பாடலை எழுதியது நா.முத்துக்குமார் என்பது இப்பொழுது தான் தெரிய வந்தது. (அதில் ஒரு மகிழ்ச்சி!) கடந்த சில வருடங்களாக பல நல்ல பாடல்களை எழுதி உள்ளார். எனவே தான் வரிசையாக இவர் பாடல்களாக வருகின்றது.

விஜய் முத்து  !
விஜய் முத்து !

படம்: அங்காடி தெரு.
இசை: விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்.
பாடியவர்: ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி அய்யர்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் எப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை
அவளை படித்தேன். முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை
இருந்தும் கவனிக்க மறப்பதில்லை

அவள் அப்படி…

அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுப்பதில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்குவதில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
அவள் கைபிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தமன்றி வேறு எதுவும் இல்லை
வேறு எதுவும் இல்லை

அவள் அப்படி…

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை
அவர் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் அன்றி வேறு எதுவும் இல்லை
சொந்தம் அன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி…

இது போல உங்களுக்கு பிடித்த பாடல் இங்கு இடம்பெற, கமெண்ட் இடுங்கள் அல்லது பாடலை எழுதி அனுப்புங்கள். வலைச்சரத்தின் அறிமுகத்துக்கு பின், தினம் தினம் நூறுக்கும் மேற்பட்ட பார்வைகள் வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறோம் ! இசை வாழ்க ! இன்பம் வளர 🙂

Advertisements

2 thoughts on “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s