உலக இசை தினம் 2013 இன்று (21 ஜூன்).  மனம் கனிந்த வாழ்த்துகள். இசை என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் ஒரே தேவன் தான் : ராக தேவன் ராஜா. அவரின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றை, இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். சுவாசம் போல நேசம், இசை எல்லா(ம்) தேசம்  !

இளைய ராஜாவின் பிறந்த நாள் வாரத்திலேயே வந்திருக்க வேண்டிய பாடல் இது. தாமதமாகிவிட்டது. ஆனால் இசைஞானியின் பிறந்த நாள் அன்று மட்டுமில்லை என்றைக்கும் கேட்டு மகிழக் கூடிய பாடல் இது.

ரஜினியும் ஷோபனாவும் பாடும் பாடல் இது. போர்க்களக் காட்சியாக உருவகம் செய்திருப்பார்கள். காதலன் போருக்குப் போயிருப்பான். அவன் வருகைக்காக காத்திருக்கும் காதலி. பேலூர், ஹளேபீடூ ஆகிய இடங்களில் படமாக்கப் பட்டிருக்கும் காட்சி.

தளபதி படப் பாடல்; எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி குரலில் உள்ளத்தையும், உணர்வுகளையும் குளிர வைக்கும் பாடல். பாடலின் வரிகளும், இசையும் போட்டிபோடும் இந்தப் பாடலில். வரிகள் ஒவ்வொன்றும் காதலின் உண்மை பேசும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதை வருடும்.

(ராஜா அவர்கள், இந்த பாடலை, வாலி எழுதிய விதத்தை  பற்றி, எல்லா மேடைகளிளும் சொல்லி உள்ளார், எனவே அதை இங்கு சேர்க்க வில்லை…;))

படம் : தளபதி
பாடியவர்கள் : எஸ். பி. பி; எஸ். ஜானகி
இசை: இளைய ராஜா
பாடலாசிரியர் : வாலி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?

என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!

நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!

சுந்தரி…
என்னையே…

வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?

வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம் !
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்

தேன் நிலவு நான் வாழ
ஏன் இந்த சோதனை?

வான் நிலவை நீ கேளு!
கூறும் என் வேதனை!

எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நினைத்தாயோ?
என்னையே தந்தேன்…
சுந்தரி…

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால் !
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால் !

மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ?
நீ எனை தீண்டினால்

காயங்களும் ஆறாதோ?
நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்!
வருவேன் அந்நாள் வரக்கூடும் !
சுந்தரி…

இந்தப் பாடலைப் பற்றி ஒருமுறை எஸ்.பி.பி நினைவு கூர்ந்த விஷயம்:

Raja and Vali
இளைய ராஜ வாலி

‘இந்தப் பாடல் மும்பையில் பதிவாகியது. ஆர்.டி. பரமன் அவர்களின் ஸ்டூடியோவில் அவரது இசைக்குழுவில் இருக்கும் இசைக் கலைஞர்கள் இந்தப் பாடலுக்கு இசைக் கருவிகள் இசைத்தனர். இளையராஜா குறிப்புகளைக் கொடுத்ததும் இசைக்கத் தொடங்கினர். ஒவ்வொருமுறை இசைத்து முடித்தவுடனேயும் எழுந்து நின்று கைதட்டினர். இது கூட ஒன்றும் வியப்பானது இல்லை. பாடலின் பதிவு முடிந்தவுடன் ஒரு இசைக் கலைஞர் வந்து, ‘இவரை சென்னையிலேயே இருக்க சொல்லுங்கள். இவர் கம்போஸ் செய்வதை எல்லாம் வாசிப்பது ரொம்பவும் கஷ்டம். பாம்பே வர வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்றார்.’

இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் என் பிள்ளை ‘இங்கு ஒரே ஒரு புல்லாங்குழல் வரது, கவனித்துக் கேள்’, ‘இப்போ எல்லா இசையும் ஒண்ணா வரும் கேளு’ என்று சொல்லிக் கொண்டே இருப்பான். இந்தப் பாட்டை ரசிக்கவும் ஒரு தனி திறமை வேண்டும் என்று தோன்றும் எனக்கு.

பட இயக்குனர், காட்சி அமைப்பாளர், நடனம் அமைத்தவர், இசை அமைத்தவர், பாடலை எழுதியவர், பாடியவர்கள், நடிகர், நடிகை என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து செய்திருப்பார்கள்.

இன்றளவும் இந்த பாடலைப் பற்றி ட்விட்டர், facebookகில் பேசாத இசை ரசிகர்களே இல்லை

தனியாக இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு முழுமையாக இந்தப் பாட்டில் ஒன்றிப்போய் கேளுங்கள். அது ஒரு ஆனந்த அனுபவமாக நிச்சயம் இருக்கும்!

Advertisements

7 thoughts on “சுந்தரி கண்ணால் ஒரு சேதி….

  1. எல்லோருக்கும் உலக இசை தின நல்வாழ்த்துக்கள் ரொம்பவும் அருமையான பாடல் இதை ஹம் செய்யாதவரிகளோ முணுமுணுக்காதவரிகளோ இருக்கவே முடியாது பலரது கைபேசியின் ஓசையே இதுவாகத்தான் இருக்கும் இளயராஜாவிற்கு நன்றி

  2. //(ராஜா அவர்கள், இந்த பாடலை, வாலி எழுதிய விதத்தை பற்றி, எல்லா மேடைகளிளும் சொல்லி உள்ளார், எனவே அதை இங்கு சேர்க்க வில்லை…;))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…என்னக்கு தெரியலையே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s