கவியரசர் கண்ணதாசன்  மறைந்து 32 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் அவர் எழுதிய ‘மானிடர் ஆன்மா மரணமெய்தாது; மறுபடிப் பிறந்திருக்கும்’ என்பதை போலவே அவரது ஆன்மா அவரது பாடல்களில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கிறது என்று சொல்லலாம்.

இன்று இசைப்பா மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல் எனக்குப் பிடித்த  ‘அத்திக்காய், காய் காய்’.

இந்தப் பாடல் பலே பாண்டியா படத்தில் வருவது. நான்கு சிவாஜி, நான்கு எம்.ஆர். ராதா என்று குழப்பமோ குழப்பம். நடிகவேளின் நடிப்பு ரொம்பவும் ரசிக்க வைக்கும். நான்கு சிவாஜிகளுக்கு நான்கு கதாநாயகிகள் என்று நம்மைப் படுத்தாமல் விட்ட இயக்குனருக்கு நன்றி!

இன்னொரு பாடலும் இந்தப் படத்தில் சூப்பர் ஹிட்: சிவாஜியும், நடிகவேளும் பாடும் மாமா, மாப்ளே பாடல்!

இந்தப் பாடலை இதன் வரிகளுக்காக எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப்பாடலை இரண்டு ஜோடிகள் பாடுவதால் (சிவாஜி, தேவிகா/பாலாஜி, வசந்தி) டி.எம்.எஸ். சுசீலா, பி.பி.எஸ். ஜமுனா ராணி என்று நால்வர் பாடியிருப்பார்கள்.

ஒவ்வொரு வரியிலும் ‘காய்’ என்ற சொல் வேறு வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

பாடல்: அத்திக்காய் காய் காய்

திரைப்படம்: பலே பாண்டியா  (1962)

இந்த பாடலில் நடித்திருப்பவர்கள் : சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி.

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா,

                              பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
          இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ? 

‌ஆ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
         இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
         என்னுயிரும் நீயல்லவோ?
        அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.. 

பெ : ஓஓஓ..ஓஓஓ..


பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
          கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

ஆ :  மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெ : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ? 

பெ : ஓ.. ஓ… ஓ.. ஆஹா.. ஆஹா.. 

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
         இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு :அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
           ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
         என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
             இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
        உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா 

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

மெல்லிசை மன்னர்கள் விச்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையமைப்பில் நால்வர் பாட பாடல் ஆஹா! ஓஹோ! தான்.

kannadasanஇந்தப் பாடல்தான் இசைப்பாவில் வெளிவரும் கவியரசரின் முதல் பாடல்.  ஒன்று தெரியுமா? கவியரசர் பிறந்த நாளன்றுதான் மெல்லிசை மன்னரும் பிறந்தார். பாடல்வரிகளும் இசையும் ஒன்றாக ஒரே நாளில் பிறந்திருக்கின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமா பாடல்களில் மாபெரும் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்ததன் காரணம் இப்போது புரிகிறது, இல்லையா?
இசைப்பா +

கண்ணதாசன் என்றால் அழகிய கண்களை வர்ணிப்பவன் என்று பொருள்

பின் குறிப்பு: இப்பாடல் முன்னரே வெளி வந்திருக்க வேண்டிய பாடல். பெருந்தவறுக்கு வருந்துகிறோம். உங்கள் கருத்துகளும், திருத்தங்களுக்கும் காத்திருக்கிறோம். நன்றி 

Advertisements

8 thoughts on “அத்திக்காய் காய் காய்

 1. கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அல்லவா பொருள்?
  நீங்கள் சொல்லியிருக்கும் பொருளும் நன்றாகத்தான் இருக்கிறது!

  1. அவ்ளோ detailலா தெரியல, ஆனால் ‘கண்ணதாசன்’ பெயர் கரணாம் இது தான் என்று படித்த ஞாபகம் ! தவறாக இருந்தால் நீக்கி விடலாம்…

   1. கண்ணதாசன் 70களில் விவித பாரதி வானொலியின் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் இந்த பாடலுக்கு விளக்கம் சொன்னதை நான் கேட்டேன் . இது நிலா விடு தூது வகை பாடல். பாமரகளுக்கு எழுதப்பட்ட பாடல்களுக்கு இடையில் படித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள எழுதப்பட்ட பாடல். பொருள் ஈட்ட தொலை தூரம் சென்றிருக்கும் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் நிலவை தூது விட்டு பாடும் பாடல்.

    அத்திக்காய் காய் காய் – என் கணவர் இருக்கும் அந்த திக்கிலே காய்வாயாக.
    ஆலங்காய் வெண்ணிலவே – விஷம் போல் காய்கின்ற வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ – நான் இருக்கும் இந்த திக்கிலே காயாதே, நீ என்னை போல ஒரு பெண் தானே

    -உமாசங்கர்

 2. காய் என்ற ஒரு வார்த்தையோடு கவிதையாட கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே முடியும் அருமையான பாடல் இந்த பாடல் வந்த புதில் நான் கூட இதை நேயர் விருப்பத்தில் எழுதிப்போட்டு கேட்டேன்

 3. //நான்கு சிவாஜி, நான்கு எம்.ஆர். ராதா என்று குழப்பமோ குழப்பம்//

  மூன்று சிவாஜி, இரண்டு எம்.ஆர். ராதா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s