வணக்கம்.

தலைப்பைப் பார்த்ததும் ஈர்க்கக் கூடிய ஒரு பாடல். சென்ற ஆண்டின் (2012) மிகப்பெரிய வெற்றிப் பாடல்களுள் ஒன்று. பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் இன்னும் கொள்ளை அழகு. தமிழில் இசையமைப்பாளரின் முதல் படம்.  பாடல்களில் வித்தியாசமான ஒலிகளை எழுப்ப மிகவும் முயற்சித்திருக்கிறார். அத்தனை அழகாக இசையும் பாடல் வரிகளோடு இணைந்து வசீகரிக்கும்படி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

karkyபாடலாசிரியர் கார்க்கியின் (மதன் கார்க்கி) பாடல் ஒன்று இசைப்பா-வில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. இவர் கவிஞர் வைரமுத்து அவர்களின் மகன் என்பது தெரிந்த ஒன்று. தமிழ் பாடலாசிரியர்களில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் பாடல் எழுதுவது இவர் ஒருவர்தான். இதே காரணத்தால் இதுவரை தமிழ் திரையில் பயன்படுத்தாத வார்த்தைகள் யாவும் இவர் பாடல்களில் விழுகின்றன. குவியம்,வளைகோடு, etc உதாரணங்கள்.

180பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்-கிலேயே ஈர்க்கத் தொடங்கிடும் இப்பாடல் அளவில் சிறியதாக இருக்கிறது. இருபொருள் தொனிக்கும் வகையில் புதிராக-புதிருக்கு விடையாக வரிகள் அமைந்துள்ளன. பாடலின் காட்சியமைப்பு அத்தனை குளிர்ச்சியாக, அழகியலோடு இருக்கும்.

  இசைப்பா +

180 தான்  HD காமிரா-வில்  (டிஜிட்டல் முறையில்) எடுக்கப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம்.

பாடல்: நீ கோரினால்
படம்: 180
பாடலாசிரியர்: கார்க்கி
இசை: ஷரத்
பாடியவர்கள்: கார்த்திக்,ஸ்வேதா

நீ கோரினால்
வானம் மாறாதா! – தினம்
தீராமலே
மேகம் தூறாதா!

தீயே இன்றியே – நீ
என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே!

ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகியே!

கண்டும் தீண்டிடா- நான்
போதிச் சாதியா
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே.

போதை ஊறும்
இதழின் ஓரம் பருக வா.

பாடல் குறித்த உங்கள் கருத்துகள், திருத்தங்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் மனம் கவர்ந்த பாடல் இங்கு இடம் பெற விரும்பினால் மறுமொழி இடுங்கள். பங்களிக்க ஆர்வமாய் இருப்பவர்களையும் வரவேற்க தயாராக உள்ளோம்.

Advertisements

2 thoughts on “நீ கோரினால் வானம் மாறாதா!

  1. பாடல் நன்றாக இருக்கிறது, தமிழ்! பாடல் வரிகள், இசை எல்லாமே ஒன்றுடன் ஒன்று இயைந்து நல்ல சங்கீதமாக உருவெடுத்திருக்கிறது.
    பாராட்டுக்கள்!

  2. மெட்டுக்கேற்ப பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் ” தீ இன்றியே ” அல்லது ” தீயே இன்றி” என்றுதான் இலக்கணப்படி வரவேண்டும். மற்றபடி திரைக்கு ஏற்றவாறு பாடல் ரசிக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள். அன்புடன் ஆ.மீ. ஜவகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s