வணக்கம்.

Vaaliகவிஞர் வாலி அவர்களின் மறைவின் நினைவாக இசைப்பா தளத்தின் சார்பாக ஒரு அஞ்சலியாக தொடர்ச்சியாக பாடல்கள் தருவதாக சொல்லியிருந்தோம். அதன்படி இதோ 1990 களின் பிற்பகுதியில் இந்தியாவையே ஆட்டம் போட வைத்த இசைப்புயலின் இசைத்தாண்டவத்தில் நாடிநரம்புகளைச் சுண்டி இழுத்த பாடல்.

டிஜிட்டலில் அதிர வைத்த இசைக்குப் பொருத்தமான வரிகளைக் கொண்டு வாலி எழுதிய இப்பாடல் தமிழுக்கு சற்றே புதுசு. புரியாத வார்த்தைகளை இசையின் பொருட்டு இணைக்கலாம் என்று உணரவைத்ததும் அவர்தான். (லாலாக்கு டோல் டப்பிமா?) முக்காலா தெரியும். அதென்ன முக்காபுலா? என எத்தனை பேர் சுற்றினார்களோ?

வாலியால் எந்தமாதிரியும் எழுத முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இது தவிர ரஹ்மான் அவர்களுக்கும், வாலி அவர்களுக்கும் ஒரு இராசி இருக்கிறது. ’ம’கர வருக்கத்தில் நிறைய ஹிட் கொடுத்திருக்கிறார்கள். அதன் தொடக்கம் இப்பாடலாகத்தான் இருக்கக் கூடும்.

ஜுராஸிக் பார்க், டெக்ஸாஸ், பிகாஸோ, ஜாஸ் என இவர் சொல்லாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பாடலை ரசிக்கலாமே!

இப்பாடல் மூலம் இசைப்பாவுக்குள் பாடகர் மனோ அவர்களும், மறைந்த பாடகி ஸ்வர்ணலதா அவர்களும் அறிமுகம் ஆகிறார்கள்.

படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
வரிகள்: வாலி

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா
லவ்வுக்கு காவலா?
பதில் நீ சொல்லு காதலா!
பொல்லாத காவலா?
செந்தூரப்பூவிலா?
வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா!

ஜூராஸிக் பார்க்கிலிருந்து சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
பிகாசோ ஓவியந்தான் பிரியாமல் என்னோடு
டெக்ஸாசில் ஆடி வருது
கௌபாயின் கண் பட்டதும்
ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸானது
ஒன்றாக மிக்ஸானது
ஜாஸ் பெண்ணானது
ஸ்ட்ராபெர்ரி கண்ணானது
லவ் ஸ்டோரி கொண்டாடுது
கிக்கேறி தள்ளாடுது
நம் காதல் யாருமே எழுதாத பாடலா?
(முக்காலா..)

துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா?
செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை கொண்டு வீசினால்
விண்மீன்கள் கையில் வருமா?
பூகம்பம் வந்தாலென்ன? பூலோகம் ரெண்டாலென்ன?
ஆகாயம் துண்டாகுமா? எந்நாளும் ரெண்டாகுமா?
வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி
செய்வோம் நம் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி
சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா?

(முக்காலா..)

இசைப்பா+

நாலாயிரம் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) பயிலாமல்
ஒருவன் நாக்கு நற்றமிழ் வங்கியாகாது
என்பது கவிஞர் வாக்கு

இன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
இசைப்பா குழுவினர்

மேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540

Advertisements

2 thoughts on “முக்காலா முக்காபுலா

  1. ரொம்ப நல்ல பதிவு. அருமையான பாடல் தேர்வு! இவர் டெல்லியே பார்த்ததில்லை என்றால் நம்ப முடிகிறதா? என்னவெல்லாம் கம்பேர் பண்ணி எழுதிருக்கிறார் பாருங்கள் 🙂

    amas32

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s