வணக்கம்.

வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பாடலோடு இசைப்பாவில் இணைகிறோம். இன்றைய தேதிக்கு பொருத்தமான ஒரு பாடல் இது என நம்புகிறோம். இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் இணைந்த மற்றுமொரு இனிய பாடல். தோனி படத்தில் இடம்பெற்ற பாடல்.  நா.முத்துக்குமாரும், இளையராஜாவும் இணைந்த முதல் படம் என நினைக்கிறேன்.

இளையராஜாநடுத்தர மக்களின் வாழ்வியலை யதார்த்தமான வரிகளுடனும், துள்ளல் இசையோடுமாக கூறும் பாடல்.

 இருப்பதுதான் போதும் என்பவன் ஒருத்தன் உண்டாடா!

எனும் ஒற்றை வரியே பாடலின் தன்மையை புரியவைத்துவிடும். தபேலா அத்தனை கச்சிதமாக பாடலுக்குள் இயைந்து பரவசப்படுத்துகிறது. பார்த்தும்,  கேட்டும்தான் ரசியுங்களேன்!

படம்: தோனி
இசை: இளையராஜா 
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்ல…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்ல…
எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்ல…
கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை…
வாடக வீட்டுல வீசுற காதுக்கு கட்டணம் உண்டாடா!
இருப்பதுதான் போதும் என்பவன் ஒருத்தன் உண்டாடா!
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா

வாங்கும் பணத்துக்கும்

அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்
இந்த அன்னாடங்காச்சி வாழ்க்கை
கனவில்தானே நமக்கு பல அரண்மனைகள் இருக்கு
தண்ணிக்கும் தரைக்கும் அலையும்
ஒரு வாத்த போல வாழ்க்க
மனசில் சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா ?
சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு
எண்ணி எண்ணி பாரு அது வெள்ளி பணம் நமக்கு ..
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்..

வாங்கும் பணத்துக்கும்

கும்முடு போட்டு போட்டே நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்
கூனும் விழுகல மனம் கூறி போச்சுடா
உறவு நெறைய இருக்கு, அது செலவுதானே நமக்கு
சேத்து வெச்ச சொத்து அது நட்புதானடா
தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல
சோகத்திலும் சிரிப்போம் சோதனையில் முளைப்போம்
அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்

வாங்கும் பணத்துக்கும்

இசைப்பா +

லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றனர்.  ஆசிய கண்டத்தின் முதல் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தான்.

இன்னுமொரு இனிய பாடலில் விரைவில் இணையலாம். கருத்துக்கள், திருத்தங்களைக் குறிப்பிடலாம். நன்றி.

Advertisements

One thought on “வாங்கும் பணத்துக்கும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s