வணக்கம்.

நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது மூன்றாம் பாடல்.

காதல் சோகப் பாடல்கள் வர ஆரம்பிக்கையில் ஆண்களுக்கான சோகப் பாடல்களே அதிகம். ஆயினும் அவ்வப்போது பெண்களுக்கான காதல் சோகப் பாடல்களும் வந்து கவன்ம் ஈர்க்கும். அந்த வரிசையில் இதுவும் ஒரு இனிய பாடல். பாடலின் முதல் பலம் பாடகியின் வன்மையான குரல். அடுத்தது விடாமல் மிரட்டும் வயலின். கடைசியாக வரிகள்.

raaja-nepபாடலுக்கேற்ற மற்றொரு இனிய தேர்வு சுனிதி சௌகானின் குரல். வரிகளில் உள்ள அழுத்தம் முழுமையும் அப்படியே இசையோடு கலந்து உங்கள் செவிகளுள் இறங்குவதை இவரது கணீர் குரல் உறுதி செய்துவிடும்.

பாடலில் வயலினுக்கு சிற்சில நொடிகள் மாத்திரமே ஓய்வு கொடுத்து மிரட்டியிருக்கிறார் ராஜா. பொதுவாகவே ராஜாவின் வயலின் குழு பெரிது. இது ஆங்கிலோ-இந்தியன் குழு என்றாலும் வயலினுக்கு பஞ்சமில்லாமல் இசை மழை பொழியும். இந்த பாடலின் பதிவை நேரடியாகப் பார்த்தால் உணரலாம். (இசை வெளியீட்டு விழா காணொளியில் காணலாம்.) அல்லது உங்கள் கண்களை நிதானமாக மூடிக்கொண்டு, இசையை ரசிக்க முடிந்தால் எளிதே உணரலாம். ஆல்பத்தின் மற்ற பாடல்களோடு ஒப்பிட்டால், இது சிறிய பாடல். நேரே இசையைத் தழுவுங்கள்.

இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: சுனிதி சௌகான்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்

மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்

வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?

நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்

(முதல் முறை)

நீந்தி வரும் நிலாவினிலே, ஓராயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே, நூறாயிரம் தீயலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்கு என் பதிலென பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்  இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்  அங்கு போனது உன் தடமில்லையே

காதலென்றால் வெறும் காயங்களா? – அது
காதலுக்கு அடையாளங்களா?
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?

 நீ தானே என் பொன்வசந்தம் வசந்தம், வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்

மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்

வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?

நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்

பாடல்:

இசைப்பா+

இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். அதில் சிந்து பைரவி மட்டுமே தமிழ் திரைப்படம்.

திருத்தங்கள், ஆலோசனைகள் வழக்கம்போல் வரவேற்கப்படுகின்றன.

Advertisements

One thought on “முதல்முறை பார்த்த ஞாபகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s