வணக்கம்.

நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது ஆறாம் பாடல்.

Raajaஆல்பத்தில் வெளிவந்த அனைத்து பாடல்களிலும், பெரும்பாலானோரைக் கவர்ந்த இனிய பாடலென்று இதைச் சொல்லிவிடலாம். இந்த பாடலைச் சிலாகித்து எக்கச்சக்க பதிவுகள் தமிழ் வலையுலகில் இருக்கும். பாடல்கள் வெளிவரும் முன்பே இந்த பாடலின் prelude-ம் முதல் இரு வரிகளுமாய் சேர்த்து வெளிவந்த படத்தின் டீஸர் யூட்யூபில் ட்ரெண்ட் ஆனது தனிக்கதை.  காதலர்களுக்கான மெலடிப் பாடல். அதிலும் பாடல் தொடங்கியதிலிருந்து முடியும்வரை உங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை கொண்ட பாடல். வயலினுக்குள் இப்படி உற்சாகத்தைப் புதைத்த வேறெந்த பாடலாவது இருக்கிறதா? அது தவிர 2-ம் இடையிசையின் ஒலிநயம் அட்டகாசம்! பாடலை காலாகாலத்திற்கும் கொண்டாடும்படி படைத்திருப்பது ராஜாவின் திறமை. பழைய பாடல்களைப் போல அமைந்திருப்பதாயும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனாலும் இதன் வசீகரத்தன்மை மற்றவற்றைக் காட்டிலும் அலாதியானது. இதே ஆல்பத்தில் பாடகர் கார்த்திக் பாடிய இன்னொரு பாடல் இது.

பாடலின்று சில துளிகள்:

காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்னச் சின்னத் தலைக்கனமே
காதலதை பொறுக்கணுமே
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கனுமே

 படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: கார்த்திக்

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் |
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

செல்ல சண்டை போடுகின்றாய்
தள்ளி நின்று தேடுகின்றாய்
அஹ்ஹஹ்ஹா
அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி நீ சாய்வது
என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவது போல நடிப்பது
எந்தன் குரல் கேட்கதானடி

இன்னும் என்ன சந்தேகம்
என்னை இனி எந்நாளும்
தீயாக பார்க்காதடி

சின்னப் பிள்ளை போல நீ
அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களை எல்லாம்
எண்ணி சொல்லிக் கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்

என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்

காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்னச் சின்னத் தலைக்கனமே!
காதலதை பொறுக்கணுமே
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே!

உன்னுடைய கையாலே தண்டனையே
தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே!

கன்னத்தில் அடிக்கும் அடி
முத்தத்தால் வேணுமடி!
மற்றதெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி

எந்த தேசம் போன பின்பும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே!

(என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்…)

திரையில்

பாடல் வரிகள் ஆங்கிலத்தில்

இசைப்பா+

 முதன் முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா”  திரைப்படத்திற்கு இசையமைத்தார் இளையராஜா.

இன்னும் கொஞ்சம்….

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s