வணக்கம்.

நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது எட்டாம் பாடல் (இறுதிப் பாடல்).

NEPபாடலின் துவக்கமே இப்படி இருந்ததாலோ என்னவோ, எனக்கு முதலில் இந்த பாடல் கேட்ட மாத்திரத்தில் பிடிக்கவில்லை. இந்தப் பாடலை இசையமைக்க இளையராஜா எதற்கு? என்றெல்லாம் கூட சிலர் என்னிடம் கூறினர். எனக்கும் அப்படியே பட்டது. முழுதாகப் பொறுமையாகப் பாடலைக் கேட்டேன். பாதியிலேயே உற்சாகம் மேலிடத் துவங்கியது. அதுதான் ராஜா! பாடல் திடீரென இரண்டாகப் பிரிந்து வேறொரு இசையில் வசீகரிக்கும். உற்சாகமூட்டும். முதல் பாதி சூரஜ் ஜகன் மற்றும் குழுவினர் பாடியது. அதில் ஒன்றும் (எனக்கு) புதிதாகப்படவில்லை. ஆனால் இரண்டாம் பாதிக்கு எங்கிருந்து அந்த உற்சாகம் வந்ததோ தெரியவில்லை. அதிலும் நம்ம ஊர் வாத்தியங்கள் ஏதும் இல்லாமல், அந்த beat வந்திருக்கும். வரிகளும், இசையும் கைப்பிடித்து நடக்கும் இப்பாடலின் இரண்டாம் பாதிக்காகவே பாடலை ரசிக்கலாம். அதிலும் வாத்தியங்கள் மூலமே குறும்பு தெறிக்கும் இசை உங்களையும் எழ வைக்கும். மொத்த பாடலும் முடிந்தபின் வயலினில் ஒரு இசை தெறிக்கும்… வாவ்! எப்படி வேண்டுமானாலும் பாடலை படமாக்கியிருக்கலாம். எனவே அதெல்லாம் தவிர்த்து இப்பாடல் பலருக்கும் விருப்பமில்லாத ஒன்றாகிப் போனதில் ஆச்சர்யங்கள் இல்லை. அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளின் பிரயோகம் உள்ளது. சிலவற்றை அப்படியே தந்துள்ளோம். பாடல் ஒருவேளை புதிதாகக் கேட்கப்போகிறவர்களுக்குப் பிடிக்கலாம். பிடித்தவர்கள் ரசிக்கலாம்.

 படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: சூரஜ் ஜெகன், கார்த்திக் மற்றும் குழுவினர் 

புடிக்கல மாமே! படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொறத்துது நாலேஜ்
அறுக்குது புக்ஸு அலறுது டீன் ஏஜ்
சீக்கிரம் வந்திடும் நமக்கு ஓல்ட் ஏஜ்

சிங்க குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் புக்ஸ்ச எடைக்கு போடுடா லாபம்

நான் tension ஆகிட்டேன் bucketடு bucketடு

tourக்கு எடுங்கடா ticketடு ticketடு

ஹே……………………………………………

புடிக்கல மாமே!

என் வார்த்த நீ கேட்டு
வெட்டு வெட்டு கல்வெட்டு
ஏயே….

எங்கேயும் chilloutடு இல்லையினா getoutடு
ஹே ஹே….

girlsசு நாம்ம classசில் இல்ல
என்ற போதும் தப்பில்ல !
singleலான boyசுக்குத்தான்
workout ஆகும் மாப்பிள்ள!

நான் எறிஞ்ச ball எல்லாம் wicketடு wicketடு
எறங்கி கலக்குடா bucketடு bucketடு
ஹே ஹே……….

(புடிக்கல மாமே!)

உடம்பில் சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குறும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிக்கும் ஆட்டம்
ஆதிவாசி போல இருக்கட்டும்

அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே

College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே

மச்சி கடலு மீனுக்கு
கொளத்து தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே

இந்த lifeவ நீயும் அனுபவிக்க
வயசு பத்தாதே

அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே

College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே!

தடக்கு தடக்கு ரயில
போல வருஷம் ஓடுமடா
நீ படுத்து படுத்து எழுந்துபாரு
நிமிஷம் ஓடுமடா

தடக்கு…..

எடக்கு மடக்கு இல்லையிநா
எளமை எதுக்குடா
நீ குறுக்கு நெடுக்கு மடக்கலைனா
உடம்பு எதுக்குடா
படிக்குற பாடம் போதாதடா
தெருவில் இறங்கி நீ படிடா
கனவில் எதையும் ஓட்டாதடா
ஜெயிக்கும் இடத்த புடிடா

நம்ம திசையில பார்த்து
சுத்து அடிக்குது காத்து
ஹே உலுக்கி உலுக்கி
முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்கடா

அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே

அட வீதி பத்தாதே|
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே

College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே

அதே குறும்போடு வரிகள் மட்டும்!

இசைப்பா+

இளையராஜா அவர்களின் முதல் ஆல்பம் “How to name it” .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s