இசை வணக்கம்.

காதலியை சந்திக்கும் நொடியில், மயங்கி அவள் வசம் விழுகிறோம். ஆனாலும் காதலை, வாரத்தைகள் மூலம் சொல்லாமல், விழி மொழிகளில் மட்டுமே வழி மொழிகிறோம். இத்தகு தருணத்தில் ஏற்படும் பிரிவு….. இல்லை இல்லை சொல்லவைத்தாலும், இன்னும் இன்னும் பேச வைத்தாலும், காதலை உறுதிப்படுத்த, இதமான இதயமும், இடர்படுகிறது.

வெளியூருக்கு வரும் நாயகன், எதேச்சையாக இவளை சந்திக்க, காதல் கனிகிறது. ஆனாலும் பேச்சு ஒன்றும் இல்லை, பார்வைகள் மட்டும் தான், பார்க்கா பரவசங்கள் நெஞ்சில் குடிகொள்கிறது. பிரியும் தருணம் வரும் பொழுது, இருவரும் சந்திக்க, காதலை சொல்ல சொல்லும் நாயகனின் வரிகளை, வலிகளை,  வைரமான எழுத்துகளில் வைரமுத்து வருடியுள்ளார். மிகவும் அழகான பல உவமைகள் பாடலில் உள்ளது.

இல்லை இல்லை.... இசைக்கு ஒரு உச்சம் இந்த பாடல், படத்தின் பல இடங்களில் இது தான், BGM (Back Ground Music), கிளைமாக்ஸ் காட்சிகளில் கூட வலு சேர்க்கும் இசைக் கோர்வை. ரஹ்மான் + வைரமுத்து + ஷங்கர் மகாதேவன் கவிமிகு கூட்டணியின் சுவைமிகு பாடல்.

சில பாடல் காட்சிகள் மட்டுமே, இசைக்கும், பாடலுக்கும், குரலுக்கும் பெருமை சேர்க்கும். இப்பாடல் அத்தகு ஒரு ஓவியம். பாலைவனத்தில், எகிப்து பிரமிடுகள்- என நேர்த்தியுடன், ஒரு கான்செப்ட் வைத்து, எடுத்த இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள். அஜித் மற்றும் தபுவின் முக உணர்வுகளை, என்ன வென்று சொல்வது…. சோக ரசம் என்றால் இது தான்.

கடைசி சந்திப்பு

நாயகன் : உங்க மௌனத்துல கவித இருக்கு
புன்னகைல ஓவியம் இருக்கு
அமைதில பாட்டு இருக்கு
அது தான் உங்க அழகே !

நாயகி : இல்ல இல்ல பிளீஸ்…

மென்மையாக பாடல் ஆரம்பமாகிறது….
இல்லை இல்லை சொல்ல….

separator-notes

பாடல் : சந்தனத் தென்றலை 
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடலாசிரியர் :  வைரமுத்து
இசை: எ.ஆர்.ரஹ்மான்
பாடியவர் : ஷங்கர் மகாதேவன்

இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை எனும்  சொல்லை
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் ?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள்
தண்டித்தல் நியாயமா ?
காதலின் கேள்விக்கு கண்களின்
பதில் என்ன மௌனமா ?

அன்பே எந்தன் காதல் சொல்ல
நொடி ஒன்று போதுமே !
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே
ஒரு ஆயுள் வேண்டுமே !

(இல்லை இல்லை சொல்ல…)
(சந்தனத் தென்றலை…)

இதயம் ஒரு கண்ணாடி,
உனது பிம்பம் விழுந்தடி !
இது தான் உன் சொந்தம்,
இதயம் சொன்னதடி !

கண்ணாடி பிம்பம் கட்ட
கயிறு ஒன்றும் இல்லையடி.
கண்ணாடி ஊஞ்சல்
பிம்பம் ஆடுதடி !

நீ ஒன்று சொல்லடி பெண்ணே,
இல்லை நின்று கொல்லடி கண்ணே !

எந்தன் வாழ்க்கையே
உந்தன் விழி விளிம்பில்
என்னை துரத்துதே,
உயிர் கரை ஏறுதே…

இல்லை இல்லை சொல்ல…

விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது ?
பூ வாசம் வீசும்
உந்தன் கூந்தலடி…

இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது ?
கதிர் வந்து பாயும்
உந்தன் கண்களடி…

பல உலக அழகிகள் கூடி
உன் பாதம்
கழுவலாம் வாடி.
என் தளிர் மலரே,
இன்னும் தயக்கம் என்ன ?
என்னை புரியாதா ?
இது வாழ்வா சாவா ?

(இல்லை இல்லை…)

இசைப்பா+
இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய மின்சாரக்கனவு திரைப்படம் இசை,நடனம், பின்னணிப்பாடகர்கள் என நான்கு பிரிவுகளில் தேசிய விருது பெற்றது

உங்கள், கருத்துகள், விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisements

4 thoughts on “சந்தனத் தென்றலை…!

 1. நல்ல பாடல்! வயதான தபுவுக்கு இளைமையான அஜீத்!
  வயதான மம்முட்டிக்கு உலக அழகி ஐஸ்வர்யா!
  அபத்தமான படத்தில் சில நல்ல பாடல்கள். அதில் இதுவும் ஒன்று.
  தவறாக நினைக்க வேண்டாம்.

  1. நன்றி.
   இசைப்பாவில் நிறைய பாடல்களின் காட்சியமைப்பும், கதையோட்டமும், படத்தின் கதையும் கூட அபத்தமாக இருக்கலாம். ஆனால் பாடல் என்பது ஏதேனும் ஒரு அளவில் ஈர்ப்புள்ளதாக, ஏற்புள்ளதாக இருக்க வேண்டும் என்பதே இசைப்பாவின் சிறு விருப்பம். மேற்கண்ட திரைப்படம் ரஹ்மானின் சிறந்த ஆல்பங்களுள் ஒன்று. இப்போது ரஹ்மானே நினைத்தாலும் இப்படியொரு ஹிட் ஆல்பம் மீண்டும் தர முடியுமா என்பது சந்தேகமே. அவரவர்க்கு அவரவர் அபிப்ராயம் உண்டு.

   மீண்டும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s