”வாழ்க்கை இன்னிக்கு இயந்திரத்தனமா, அவசரமா ஓடிகிட்டிருக்கு. நின்னு மனசு ஒன்றி ரெண்டு நிமிசம் சாமி கும்பிட நேரமில்லாம, வண்டி ஓட்டிக்கிட்டே கடவுளுக்கு ஹலோ சொல்றோம். டாய்லெட்ல உட்கார்ந்துக்கிட்டே எஸ்.எம்.எஸ் அனுப்புறோம். கல்யாணத்து அன்னைக்கு கூட செல்ஃபோன் ஹேண்ட்ஸ்ஃப்ரீ-ய கழட்ட முடியல.”

“திரும்பிப் பாத்தா முதல் காதல், முதல் முத்தம், முதல் வெற்றி-னு இப்படி முப்பது வருஷ வாழ்க்கைல மொத்தமா முப்பது நிமிசங்கள மட்டும்தான் வாழ்ந்ததா சொல்லலாம். அதுல முக்கியமான நிமிசம். தந்தையாகவோ, தாயாகவோ மாறுகிற தருணம்.”

என்று தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் பாடலுக்கு கொடுக்கிற முன்னுரையே தனிரகம்.

abhiyum naanumசின்ன சின்ன அடிகளுடன் தன் குழந்தையின் பாதத்தையும் வாழ்க்கைத் தடத்தையும் வரவேற்கும் தந்தை. வாழ்வின் முழுமையாக குழந்தைகளைக் கருதும் பெற்றோர்கள் குழந்தையின் ஒவ்வொரு செயலையும் பெரும் சாதனைகளாக பிரமிப்புடன் ரசிக்கின்றனர். பெண் பிள்ளைகள் செய்யும் சின்ன குறும்புகளையும் ரசிக்கும் ரசிகர்களாகி விடுகின்றனர் பெற்றோர்.

“தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே”

ஒவ்வொரு தந்தையும் தாயாகவே மாறும் அழகிய உணர்வை ஆழமாகவே எடுத்துரைக்கும் வரி.

“பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே 

ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்”

வளரும் நேரங்களில் தங்களை விட்டு சற்று விலகுவதையும் எண்ணி கவலையுடனே பெற்றோர்கள் பக்குவநிலையை வளர்த்து கொள்கின்றனர்.

பாடலின் இயல்பான வரிகளும், பக்கபலமான இசையும் பெரும்பலம். அதென்னவோ இசையமைப்பாளர் வித்யாசாகருக்கும், மது பாலகிருஷ்ணனுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை. சிறப்பான பாடல்கள் தொடர்ந்து அமைகின்றன. பாடலைப் படமாக்கிய விதமும் சிறப்பாக இருக்கும். அதிலும் பெண்பிள்ளையின் வளர்ச்சியைக் காட்ட இயக்குனர் கையாண்ட முறை அருமை!

பிரகாஷ்ராஜ் தொடர்கிறார்..

”பிறந்த குழந்தைய முதன்முதலா கைல ஏந்தின அந்த நிமிசம் இதுவா என் குழந்தைனு நம்ப முடியாம பாத்த அந்த நிமிசம். கல்யாணம் ஆகாதவங்க, உங்க அப்பா, அம்மாகிட்ட உங்கள கையில ஏந்துன நிமிசத்துல அவங்களுக்குள்ள ஒளிந்த சிலிர்ப்பு எப்படியிருந்துச்சுனு கேட்டுப் பாருங்களேன்… வார்த்தை கிடைக்காம அல்லாடுவாங்க!
இந்தப் பாட்ட போட்டு காட்டுங்க! … ஆகா! இப்படிதான்…இப்படிதான் -னு சிலிர்ப்பாங்க! துக்கத்துல தொண்டை அடைக்கும் -னு கேள்விப்பட்ருப்பீங்க. சந்தோஷத்துலயும் அடைக்கும்!
பாட்டக் கேட்டுப் பாருங்க..”

படம்: அபியும் நானும்
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணிக் கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கணக் கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை

தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மீசையில்லாத மகள் என்று சொன்னேன்

பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…?

இசைப்பா +

அபியும் நானும் திரைப்படம் மூன்று (மாநில அரசு) விருதுகளைப் பெற்றது.

மற்றுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைகிறோம்.

Advertisements

2 thoughts on “வா வா என் தேவதையே!

    1. ஆமாம் அழகான வரிகள்.
      புத்தாண்டு வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s