வணக்கம்.
மீண்டும் அறிமுகப் படலம். இசை ராட்சசன் என்று சொல்லப்படுகிற அனிருத் தின் பாடல் முதல்முறையாக இசைப்பாவில். முதல் படத்தில் ஏதோ ஒரு மூலையில் பேரை போட்டார்கள். இரண்டாவது படத்தில் சக இசையமைப்பாளர்களில் முதலாவதாக வந்தார். மூன்றாவது படத்தில் விளம்பரத்தில் பயன்படுத்தினார்கள். நான்காவது படத்துக்கு விளம்பரமே அனிருத் தான்!

Anirudh

வணக்கம் சென்னை படத்தின் அனைத்துப் பாடல்களையும் அனிருத்தே பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதிய இப்பாடலின் சோக பதிப்பு ஐலசா ஐலசா என்று இதே ஆல்பத்தில் இருக்கும்.

ஒசக்க என்றால் உயரே என்று பொருள்படுமாம். எந்த மொழி வார்த்தை எனத் தெரியவில்லை. ஒசக்க செத்த ஒசக்க என்றால் உயரே கொஞ்சம் உயரே என்று பொருள்.
தேனி இளைஞனும், இலண்டன் இளைஞியும் பாடிக்கொள்வது போலான பாட்டு. கொஞ்சம் நாட்டுப்புற பாணியில் அமைந்த பாடல் என்பதாலேயே கவனம் ஈர்க்கிறது.
படம்: வணக்கம் சென்னை
இசை: அனிருத்
பாடலாசிரியர்: கார்க்கி
பாடியவர்கள்: அனிருத், பிரகதி
__________________________
தேனி காத்தோட
தேனத் தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா!
தேங்கா நாராக
நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா!
எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேக்கா கேக்காம
றெக்க கட்டி பறந்தேனே…
ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!

***************

ஹே… ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா.
தேம்சு தண்ணி பாத்த மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா.இந்த வயக்காட்டு மத்தியில…
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொண்ணா துள்ளிக்கிட்டு
புயலொண்ண நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ?(எகன மொகன பாக்காம)
(ஒசக்க செத்த ஒசக்க)

***************

ஹே… கண்ண தெறந்தாலும் கலையவில்ல
கனவா நனவான்னு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலையில்ல
என் கண் பாக்கும் தூரம் வர….
என் கண் பாக்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியப் போல்
நான் போனேனே!
(ஒசக்க செத்த ஒசக்க)
இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்
Advertisements

One thought on “ஒசக்க! ஒசக்க!

  1. >> ஒசக்க என்றால் உயரே என்று பொருள்படுமாம். எந்த மொழி வார்த்தை எனத் தெரியவில்லை.

    அட என்ன இப்படி சற்றே முடித்துவிட்டீர்கள். இருங்கள் என்னால் உதவமுடியுமாவென முயல்கிறேன்.

    உயரம் – உசரம் – உயரத்துல – ஒசரத்துல – உயர – ஒசக்க

    ஒஸ்தி என்ற சொல்கூட உசத்தி என்பதிலிருந்து திரிந்ததுதான். என்ன பொருள்படுகிறதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s