இசை அன்பர்களுக்கு இனிய வணக்கம்.

இதோ ஒரு புத்தம் புதிய பாடல், ரஹ்மான் பாடல், சூப்பர் ஸ்டார் பாடல். இனிய பாடல், இலகும் பாடல். ஆமா கோச்சடையான் தான். வரும் வருமென்று, இறுதியில் பாடலும் வெளிவந்துவிட்டது. முப்பரிமாணம் கொண்ட படம். அதும் நம் பழைய தமிழ் மன்னர்கள் பற்றிய படம். இந்த பாடலில் இசைப்பாவில் அறிமுகமாகும் பாடகி வேறு யாரும் இல்லை, ரஜினி அவர்களின் அன்பு துணைவியார் -> லதா ரஜினிகந்த்.

ஆஹா என்ன ஒரு மென்மையான பாடல்… காதல் கணவனை நோக்கி பாடும் குரலில் : லதா ரஜினிகாந்த். உருகி உருகி மனைவி பாடும் / கொடுக்கும் சத்தியங்கள். நடு நடுவில் வரும் நாதஸ்வரம் நல்ல தேர்வு. இதுவரைக் கேட்டதில், இந்த ஆல்பத்தின் பெஸ்ட் பாடல் இது தான். மயங்கர்கரசி, சிவகாமி, பாண்டியன் குமாரி, குந்தவை.. என்று யார் பாடி, போருக்கு தலைவனை அனுப்பினாலும் சரியாக அமையும் என்று சொல்லலாம். ஆனால் ராணிகள் சமையலறையில் என்ன புதுமை செய்வார்கள் என்று வைரமுத்து அவர்களுடன் தான் கேட்க வேண்டும். அல்ல ஒரு சாமான்யமான குடும்ப பெண் பாடும் பாடலாகக் கூட இது அமையலாம். பொறுத்து இருந்து பார்போம்.

நண்பர்களின் கருத்துகள்

இசை இசைப்பது போலவே பாடப்படும் வரிகள் நெஞ்சை கொள்ளை கொள்கிறது. காதல் கொண்ட நாயகி தன் கணவனை கரம் பற்றி, எத்தருணத்திலும் கரம் விடமாட்டேன் என்று சத்தியம் செய்கிறாள், வைரம் போன்றுது தன் சத்தியம் என்கிறாள். அவனின் ரகசியங்களை அழகாக காப்பேன் என்கிறாள். காலம் மாறும் என்றாலும் என்றும் உறுதுணையாக இருப்பாள். தாய்க்கு தாயாக அரவணைத்தும் உயிருக்கு உயிராக அவன் கனவுகள் நிஜமாக தன்னை அர்ப்பணிப்பாள் என்று உருகுகிறாள். அவன் வாழ்வு வீழ்கையில் இவள் உயிர் தருவாள்…இவ்வகையாக தன் அன்பின் மேல் சத்தியம் செய்கிறாள். பாடலை திரும்பி  திரும்ப கேட்டு ரசித்தவண்ணமே இருக்கலாம். அவ்வுளவு அருமையான குரல் பாடியவருக்கு லதா ரஜினிகாந்த அவர்களுக்கு வாழ்த்துக்கள்

படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடல் : மன்னிப்பேன் சத்தியம்
பாடியவர் : லதா ரஜினிகாந்த

காதல் கணவா உந்தன்,
கரம் விடமாட்டேன்.
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே !

தாய் வழி வந்த எங்கள்
தர்மத்தின் வேலே.
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே !

ஒரு குழந்தை போலே,
ஒரு வைரம் போலே,
தூய்மையான என்
சத்தியம் புனிதமானது !

வாழை மரம் போல  என்னை
வாரி வழங்குவேன் !
ஏழைக்கண்ட புதையல் போல,
ரகசியம் காப்பேன் !

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்,
கண்-அவன் என்பேன் !
உனது உலகை எனது கண்ணில்,
பார்த்திட செய்வேன் !

மழை நாளில் உன் மார்பில்,
கம்பளி ஆவேன் !
மலைக் காற்றாய் தாலைக்கோதி,
நித்திரை தருவேன் !

காதல் கணவா..

உனது உயிரை எனது வயிற்றில்,
ஊற்றிக் கொள்வேன் !
உனது வீரம், எனது சோறும்,
பிள்ளைக்கு தருவேன் !

காலம் மாற்றம் நேரும்போது
கவனம் கொள்வேன்.
கட்டிலறையில் சமையலைறையில்
புதுமை செய்வேன்.

அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன்.
உன் ஆண்மை நிறையும்போது
உந்தன் தாய்போல் இருப்பேன்.

உன் கனவுகள் நிஜமாக,
எனையே தருவேன் !
உன் வாழ்வு மண்ணில் வீழ,
என்னுயிர் தருவேன் !

காதல் கணவா..

மேலும் இனிய மற்றும் புதிய படப்பாடல்களுடன் விரைவில் சந்திப்போம்

Advertisements

5 thoughts on “காதல் கணவா உந்தன்… – கோச்சடையான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s