இசையுடன் நண்பர்களுக்கு வணக்கம் ,

கோச்சடையான் பாடல்களை அனைவரும் கேட்க ஆரம்பித்து இருப்போம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் அருமை . இப்பதிவில் நாம் காண இருக்கும் பாடல் – “ மணமகனின் சத்தியம் ”. நேற்று வெளிவந்தது – மணமகளின் சத்தியம். இப்பாடல் வரிகள் வெகுவாக நம்மை ஈர்க்கிறது. வைரமுத்துவிற்கு – அப்படி ஒரு காதல் வசியம் கைகூடுகிறது. ஹரிச்சரண் அவர்கள் குரலில் இன்னும் மேன்மை/மென்மை கொள்கிறது பாடல்.

கணவன் தன் அன்பு காதல் மனைவியை உருகி நினைத்தவாறே சத்தியங்கள்/ வாக்குகள் கொடுக்கிறான். தன் காதல் மனைவிக்கு  சின்ன சின்ன சத்தியங்களாக பலவற்றை கொடுக்கிறான். அவளின் உயிரின் உயிராக, தாயாக துணை நிற்பதாகவும் கணவனாகி உருகுகிறான் . இப்பாடலை வடிவமைத்த விதம் காண காத்து இருக்கிறேன். உருகும் வரிகளுடன் பாடலை ரசிப்போம் வாருங்களேன்

நண்பர்களின் கருத்து :

கேட்க இன்னுமொரு இனிய பாடல். பாடல் வரிகளின் உணர்வுகளை தூக்கி நிறுத்தும் மெல்லிய இசை சேர்த்த, ரஹ்மானை பாராட்டி தான் ஆக வேண்டும். ஹரிச்சரண் குரல் மென்மையாக ஒலிக்கிறது, ஆனால் ரஜினிக்கு சேருமா என்று தான் தெரியவில்லை. வைரமுத்து தன் பணியை செவ்வனே, சிறப்புற செய்துள்ளார்.
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை 
சிந்தையிலும் தொடேன் ! –
படித்த மாத்திரத்தில், ஸ்ரீ ராமர் தான் கண் முன் தோன்றுகிறார். கம்ப ராமாயணத்தின் சிறந்த வரிகளில் இதுவும் ஒன்று. சண்டை போடுவது பெண்கள் தான் என்று நான் சொல்லவில்லை, கவிஞர் சொல்கிறார். முழுமையான சத்தியங்கள், கனவுகள் முதல், உடல் ரீதியான உதவிகள் வரை அனைத்தும் உள்ள – கச்சிதமானதொரு  பாடல்.

படம் : கோச்சடையான் 
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடல் : மனமகனின் சத்தியம்
பாடியவர் : ஹரிச்சரண்

கண்ணே கனியே
உன்னை கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே !

மாலை சூடிய காலைக்
கதிரின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே !

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என்
சத்தியம் புனிதமானது…

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன் !
பிறிதோர் பக்கம் மனம்
சாயா பிரியம் காப்பேன் !

செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து
சேவை செய்வேன் !
நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன் !

கைப்பொருள் யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன்…
ஒவ்வொரு வாதம் முடியும் போது
உன்னிடம் தோற்பேன் !

கண்ணே கனியே…

அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன் !
காமம் தீரும் பொழுதிலும் எந்தன்
காதல் தீரேன் !

நாத மலர்ச்சி மலரும் வயதில்
மார்பு கொடுப்பேன் !
நோய்நொடியுடன் நீ விழுந்தால்
தாய்மடியாவேன் !

சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன் !
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன் !

உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன் !
உன் வாழ்வு மண்ணில் நீல
என்னுயிர் தருவேன் !

கண்ணே கனியே….

தூய்மையான என் சத்தியம்
புனிதமானது…

இசையுடன் இன்பமமும் சேரட்டும். மேலும் இனிய பாடல்கள் இசைப்பாவில் வரும். இசைப்பாவில் வந்துள்ள கோச்சடையான் பாடல்கள் :

Advertisements

6 thoughts on “கண்ணே கனியே… – கோச்சடையான்

 1. நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து
  நித்தம் எழுவேன் ! —- விழுவேன் அல்ல

  1. பிழைகளைச் சுட்டியமைக்கு நன்றி.
   திருத்தம் செய்து விட்டோம்.
   தொடர்ந்து ஆதரவு தரவும்.
   நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s