இசையின் வணக்கம்.

புத்தம் புது பாடலை இன்று பதிவு செய்கிறோம். மெட்ராஸ் – கார்த்திக் நடித்து வெளியாகயுள்ள திரைப்படம். தென் சென்னை வாசிகளின் வாழ்க்கை பற்றியது என்று, பலதரப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலும் ஒரு “Single Release” .

காதல் தோல்வி இல்லாத படமும் இல்ல, அதற்கு பாட்டு வைக்காத இயக்குனரும் இல்லை. சற்றே வித்தியாசமான கோணத்தில், நாயகி ஏங்கும் கீதம் ! தாபப்பூ – வித்தியசாமான மலர் தான், மனதில் மட்டும் பூக்கும், மயக்கத்தில் மட்டும் தாக்கும் போலும். சக்திஸ்ரீயின் குரல் நல்ல ஏக்கத்தை தருகிறது. ட்ரம்ஸ் மற்றும் மெட்டு, ஒரு சோக சோபையை ஏற்ப்படுத்துகிறது. நம்பிக்கையூட்டி கொண்டே இசையில் வளர்கிறார் சந்தோஷ் நாராயணன். பிரிவின் உவமைகளை அள்ளி தெளித்திருக்கிறார் உமா தேவி

படம் : மெட்ராஸ் [2014]
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : உமா தேவி
பாடியவர்கள் : சக்திஸ்ரீ, தீக்க்ஷிதா

நான் –  நீ –
நாம்-  வாழ உறவே
நீ – நான்-
நாம் – தோன்றும் உயிரே

தாபப்பூவும் நான் தானே….
பூவின் தாகம் நீ தானே…

நான் பறவையின் வானம்…
பழகிட வா நீயும்…
நான் அனலிடும் மேகம்…
அணைத்திட வா நீயும்…

தாபப்பூவும்…

உயிர் வாழ முள் கூட
ஒரு பறவையின்
வீடாய் மாறிடுமே – உயிரே
உன் பாதை மலராகும் !

நதி வாழும் மீன் கூட
ஓர் நாளில்
கடலை சேர்ந்திடுமே – மீனே
கடலாக அழைக்கிறேன் !

தாபப்பூவும்…

அனல் காயும் பறையோசை
ஓர் வாழ்வின்
கீதம் ஆகிடுமே – அன்பே
மலராத நெஞ்சம் எங்கே ?

பலி தீர்க்கும் உன் கண்ணில்
ஓர் காதல் அழகாய்
தோன்றிடுமே – அன்பே
நீ வாராயோ… ஓ…

தாபப்பூவும்…

நான் நீ…

80000++ பார்வைகளை தாண்டி, இன்பம் பரப்பி வருகிறோம். நன்றி ! மகிழ்ச்சி ! விரைவில் அடுத்த பாடலுடன் இணைவோம்.

Advertisements

2 thoughts on “நான், நீ, நாம்…

 1. தாபப்பூ பாடல்வரிகளுக்கு மிக்க நன்றி..
  எனினும் கடைசி பந்தியில் சிறு தவறு ஒன்று உள்ளது

  “பலி தீர்க்கும் உன் கண்ணில்
  ஓர் காதல் அழகாய்
  தோன்றிடுமே”

  அழகாய் என்பது அழுகை என்று பதியப்பட்டுள்ளது
  தயைகூர்ந்து திருத்திக்கொள்ளவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s