இசையில் திளைக்கும் அனைவருக்கும் இனிய வணக்கம்.

இசைப்பாவின் நூறாவது பதிவு. (நூறாவது பாடலை ஏற்கனவே கடந்து விட்டோம்). கடந்து வந்த பாதை பிரிமிப்பை ஊட்டுகிறது, அதே சமயம் எங்கள் சோம்பலையும் உணர்த்துகிறது. எப்படியோ, பலரை தரமான வரிகளின் பக்கமும், தேன் தமிழ் பக்கமும் ஆர்வத்தை தூண்டியதில், அளவில்லா மகிழ்ச்சி.

இசைப்பா 100

90’கள் தாண்டி, தனக்கென ஒரு நவீன ராஜபாட்டையை தானே வகுத்துக் கொண்டு, இன்றுவரை மிடுக்குடன் வெற்றிகளை குவிக்கும் ஒரே கவிஞர் வைரமுத்து தான். என்ன தான் நடிகனாக இருந்தாலும், இசையின் மீது அடங்காத ஆர்வமும், வேட்கையும் கொண்டவர் கமல்ஹாசன். இருவருக்கும் சமீபத்தில் பத்மபூசன் விருது வழங்கி இந்திய அரசு பெருமைப்படுத்தியது. அவர்களின் தசாவதார கூட்டணியில் இது ஒரு துளி, இதோ. அறுபதாம் அகவையை தொடும் இருவருக்கும் நம் வாழ்த்துகளை சொல்லி கொள்ளுவோம்.

தமிழ் தெரிந்த ஹிந்தி பாடகர், இசை விழாவிற்காக வருகிறார். தொண்டையில் புற்றுநோய் இருப்பதாக அறியப்படுகிறது. தனது கடைசி பெரும் விழாவில், தனது முழு மனதையும், உற்சாகத்தையும் செலுத்தி பாடுகிறார். இசையை பற்றி இன்ப மழைப் பொழிகிறார். இசைப்பாவின் முதல் அறிமுக பதிவிலேயே இதன் வரிகள் சில இடம் பெற்றுள்ளது. துள்ளலான இசை, நறுக்கென வரிகள்,கண்கள் செருகும் சுகம் கொடுக்கும் குரல், ரசிக்கலாம் வாருங்கள்.

படம் : தசாவதாரம்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்: கமல்ஹாசன்
இசை : ஹிமேஷ் ரேஷ்மியா

பாட்டு உன் காதிலே,
தேனை வார்க்கும் !
பாட்டு உன் கண்களில்,
நீரை வார்க்கும் !

உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும் !

ஓ ஓ சனம்
ஓ ஓ சனம்
ஓ ஓ !

காட்டை திறக்கும் சாவி தான் காட்டு ?
காதை திறக்கும் சாவி தான் பாட்டு !

பாட்டு உன்…

நீ என்பதை பொல்லாத நான் என்பதை
ஒன்றாகி நாம் செய்வது பாடல் தான்

யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்
கடவுளும் கந்தசாமியும்
பேசிக் கொள்ளும்
மொழி பாடல் தான்

மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்ந்திடும் சுவடுகள் எங்கே மிஞ்சும் ?

எண்ணி பாரடா மானுடா !
என்னோடு நீ பாடடா !

ஓ ஓ சனம்…

பூ பூக்குதே
அதன் வாழ்வு ஏழ்(ழு) நாட்களே
ஆனாலும் தேன் தந்து தான் போகுதே

நம் வாழ்க்கையில்
வாழ்நாளில் யார் கண்டது ?
என் நெஞ்சம் நீ வாழவே பாடுதே

வீழ்வது யாராகினும்
வாழ்வது நாடாகட்டும்

காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்

நீ பாடினால் நல்லிசை
உன் மௌனமும் மெல்லிசை

ஓ ஓ சனம்…

வரும் ஜூலை 13ஆம் தேதி, கவிஞர் வைரமுத்து தனது அறுபதாம் பிறந்தநாளை கோவையில் கொண்டாடுகிறார். இசைப்பாவில் இன்று முதல் வைரமுத்து வாரம் தொடங்குகிறது. வாழ்த்தி மகிழுங்கள்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s