இணைய வழி இனிய வணக்கம்.

கவிஞர் வைரமுத்துவின் சகாப்தம் நிச்சயம் பதிவு செய்யப்படும். அதில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் கருத்து / சம்பவம் இதுவாக தான் இருக்கும்.  தான் வாழ்ந்த காலத்தில், தன் சகபடைப்பாளிகளை நேசத்துடனும், பாசத்துடனும் மரியாதை அளித்து, ஊக்குவித்த வித்தகர் வைரமுத்து. இதற்கு பல நிதர்சனமான உதாரணங்கள் சொல்லலாம். வாலிப கவிஞர் வாலியின் இறுதி ஊர்வலத்தில், தனக்கே உரிய மிடுக்குடன் நடந்து சென்றார். வருடா வருடம் பணமுடிப்பு கொடுத்து பெரும் கவிஞர்களை பாரட்டி, ஊக்குவிக்கிறார். இந்த வருடம் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி அந்த பரிசைப் பெற்றார் என்பது கூடுதல் தகவல்.

vairamuthu 60

காதல் பாடல் தான் எத்தனை எத்தனை ரசத்துடன் கவிஞர் எழுதியுள்ளார் என்று எண்ணி பார்த்தால், மலைப்பு ஏற்படுகிறது. நாயகனும், அவனது ஜோடியும் ஒரே ஹோட்டலில் தொலைக்காட்சி பார்க்கின்றனர், அதில் வைரமுத்துவே பேட்டி தருகிறார். அவரவர் காதலை, அவரவர் பாணியில் வெளியிடுவதே சாலப் பொருத்தமாக அமையும் என்று சொல்லுகிறார். தொடர்ந்து வரும் பாடல் தான் இது. காதல் கடிதம் என்ற ஒற்றை கற்பனையில் ஆழ்ந்து கவி படித்துள்ளார். மிகவும் ரம்மியமான குரல்களில் : எஸ் ஜானகி, உன்னி மேனன், காதல் சொட்டுகிறது. வரிகளை கெடுக்காமல், தூக்கி விடும் உன்னத இசை. மிக கச்சிதமான, படபிடிப்பு. கண்ணையும் உள்ளதையும் வெகுவாக கவரும் பாடல்.

 

படம் : ஜோடி
பாடல் : காதல் கடிதம் தீட்டவே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : எஸ் ஜானகி, உன்னி மேனன்

காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும்
அஞ்சல் காரார்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல்…

கடிதத்தின் வாரத்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?

பொன்னே உன் கடிதத்தை
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

காதல்…

கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?

காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரரானாய்
உயிரே நான் உறங்கும்போது
உறங்க மாட்டாயா>

தப்பு செய்ய பார்த்தால்
ஒப்புக் கொள்வாயா?
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா ?

காதல்…

இன்றுடன் வைரமுத்து வாரம் இனிதே நிறைவு பெறுகிறது. அவரது பாடகளின் கதிர்களை காட்டியுள்ளோம். சூரியன் போன்ற அவரது திறமை மேலும் மேலும் ஒளிமயமாக ஒலிவடிவில் பிரகாசிக்கட்டும். நம்மையெல்லாம் வார்த்தைகளால் பரவசப்படுத்தட்டும்.

vairamuthu click

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s