இசையின் இன்ப வணக்கம்

கயல் பாடலகள் தொடர்கிறது. ஸ்ரேயா கோஷல் + இமான் மிகவும் அழகான பாடல்களை அள்ளி தந்து கொண்டே இருக்கும் அதிசயம். வரவர மிகவும் தெளிவாக தமிழ் சொற்களை உச்சரிக்கிறார் ஸ்ரேயா, உணர்வுகள் எல்லாம் அவர்தம் குரலில் தண்ணி பட்ட பாடு. நம்மை இழுத்து,

கேட்டவுடன் தன் வசப்படுத்தி கொள்ளும் மெல்லிசை இந்த பாடல், youtube commentடில் ஒருவர் குறிப்பிட்டது போல, இளையராஜா போன்றதொரு touch, எங்கோ மனதை வருடுகுறது. ஆரம்பம், நீ தானே என் பொன் வசந்தத்தில் கேட்டது போல உள்ளது. ஆரம்ப 10 வினாடி மட்டுமே. பிறகு இமான் ஆள்கிறார். கடமும், மிருதங்கமும் இனிக்கிறது.

சந்தோஷம் ததும்ப தனது நாயகனை நோக்கி பறக்கும் பாவையின் உணர்வுகள், இவள் என்ன சொல்ல போகிறாள், அதற்கு நாயகனின் மறுமொழி என்னவாக இருக்கும், என சிறு ஒத்திகை ஓட்டம் அவள் மனதில் நாடகமாக நடக்கிறது. ரஞ்சித் குரலில் உற்சாகம் ததும்புகிறது. ஆனா படுவதாக வரும் வரிகள் மிகவும் எளிமையாக, படோடோபம் இன்றி அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் யுகபாரதி.

Kayal Actress

பாடல்: என் ஆள பார்க்க போறேன்
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்:  ஸ்ரேயா கோஷல்,ரஞ்சித்
பாடம்: கயல் 2014

என் ஆள
பார்க்க போறேன்…
பார்த்த செய்தி
பேசப் போறேன்…

என் ஆள
பார்க்க போறேன்…
பார்த்த செய்தி
பேச போறேன்…

அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…
தர போறேன்!

எ ஆள….

வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.

‘இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து’
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி,
காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே,
அழ போறேன்!

எ ஆள….

உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!

புதுசா புளுகாம,
ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு
பொண் ஜாதியா
ஆக போறேன்னு ?  
அப்பாவியா
நானே… கேட்டு…
வர போறேன்!

என் ஆள
பார்க்க போறேன்…
பார்த்த செய்தி
பேசப் போறேன்…

அதிவிரைவில் அடுத்த பாடலுடன் இணைவோம், மகிழ்வோம்.

One thought on “என் ஆள பார்க்கப் போறேன் – கயல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s