கள்ளிக்காட்டில் பிறந்த தாயே!

இசை ரசிகர்களுக்கு வணக்கம்.

இன்று(ம்) வைரமுத்து வாரத்தையொட்டி பதிவிடும் பாடல் ஒரு சிறப்புப் பாடல். பிரபலமான பாடல். கவிஞர் தேசிய விருதுபெற்ற பாடல்களில் ஒன்று. இது அம்மாக்களுக்கான பாடல் இல்லை. அம்மாவின் பாசத்தைப் பற்றி பிள்ளைகள் பகிரும் பாடல். அம்மாக்களின் உழைப்பை, தியாகத்தை, அன்பை, உறுதியை வெளிக்காட்டும் பாடல்.

vairamuthu 60பாடலின் ஒவ்வொரு வரியுமே மிகச்சிறப்பானவைதான். பாடல் வரிகளுக்கு இடைவெளி கொடுக்கும் இசையும் பாராட்டுக்குரியதே. பாடலில் இருந்து ஒரு துளி..

சாமி  நூறு  சாமி  இருக்குது அட
தாயி  ரெண்டு  தாய்  இருக்குதா

இசையோடு கவிப்பேரரசின் வரிகளை ரசியுங்கள்.

படம்: தென்மேற்குப் பருவக்காற்று
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: என்.ஆர்.ரகுநந்தன்
பாடியவர்: விஜய் பிரகாஷ்

கள்ளிக்காட்டில்  பிறந்த   தாயே
என்(னை)ன  கல்லோடச்சு    வளத்த    நீயே
முள்ளுக்காட்டில்  முளைச்ச  தாயே
என்ன  முள்ளு  தைக்க  விடல  நீயே

காடைக்கும்  காட்டு  குருவிக்கும்
எந்த  புதரிலும்  இடமுண்டு….
கோடைக்கும்  அடிக்கும்  குளிருக்கும்
தாயி  ஒதுங்கத்தான்  இடமுண்டா
கரட்டு  மேட்டையே  மாத்துனா
அவ  கல்லபுழிஞ்சு   கஞ்சி  ஊத்துனா.

(கள்ளிக்காட்டில்)

ஒழவு  காட்டுல   வெத  வெதப்பா
ஓணான்கரட்டுல   கூழ்  குடிப்பா
ஆவாரங்  -குலையில  கை  துடைப்பா
பாவமப்பா  …..
வேலி  முள்ளில்  அவ  வெறகெடுப்பா
நாழி  அரிசி  வச்சு  ஓலையரிப்பா
புள்ள  உண்ட  மிச்சம்  உண்டு  உசுர்  வளப்பா
தியாகமப்பா  …
கிழக்கு  விடியும்  முன்ன  முழிக்குறா
அவ  ஒலக்க  பிடிச்சுதான்  தெறக்குரா
மண்ண  கிண்டித்தான்  பொழைக்கிறா
உடல்  மக்கிபோக  மட்டும்  ஒழைக்குறா(கள்ளிக்காட்டில்)
தங்கம்  தனித்  தங்கம்  மாசு -இல்ல
தாய்ப்பால்  ஒண்ணில்  மட்டும்  தூசு  இல்ல
தாய்வழி  சொந்தம்  போல  பாசமில்ல
நேசமில்ல  …
தாயி  கையில் என்ன மந்திரமா?
கேப்பக்களியில் ஒரு நெய் ஒழுகும்
காய்ஞ்ச கருவாடு தேனொழுகும்
அவ சமைக்கையில

சொந்தம்  நூறு  சொந்தம்  இருக்குது
பெத்த  தாயி  போல  ஒண்ணு  நெலைக்குதா
சாமி  நூறு  சாமி  இருக்குது அட
தாயி  ரெண்டு  தாய்  இருக்குதா
(கள்ளிக்காட்டில் )

இன்னும் இன்னும் இனிய பாடல்கள் தொடர்ந்து வெளிவரும். உங்கள் கருத்துக்களை, விருப்பப் பாடல்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி. இதர பாடல்களுக்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
vairamuthu click