காதல் கடிதம் தீட்டவே

இணைய வழி இனிய வணக்கம்.

கவிஞர் வைரமுத்துவின் சகாப்தம் நிச்சயம் பதிவு செய்யப்படும். அதில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் கருத்து / சம்பவம் இதுவாக தான் இருக்கும்.  தான் வாழ்ந்த காலத்தில், தன் சகபடைப்பாளிகளை நேசத்துடனும், பாசத்துடனும் மரியாதை அளித்து, ஊக்குவித்த வித்தகர் வைரமுத்து. இதற்கு பல நிதர்சனமான உதாரணங்கள் சொல்லலாம். வாலிப கவிஞர் வாலியின் இறுதி ஊர்வலத்தில், தனக்கே உரிய மிடுக்குடன் நடந்து சென்றார். வருடா வருடம் பணமுடிப்பு கொடுத்து பெரும் கவிஞர்களை பாரட்டி, ஊக்குவிக்கிறார். இந்த வருடம் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி அந்த பரிசைப் பெற்றார் என்பது கூடுதல் தகவல்.

vairamuthu 60

காதல் பாடல் தான் எத்தனை எத்தனை ரசத்துடன் கவிஞர் எழுதியுள்ளார் என்று எண்ணி பார்த்தால், மலைப்பு ஏற்படுகிறது. நாயகனும், அவனது ஜோடியும் ஒரே ஹோட்டலில் தொலைக்காட்சி பார்க்கின்றனர், அதில் வைரமுத்துவே பேட்டி தருகிறார். அவரவர் காதலை, அவரவர் பாணியில் வெளியிடுவதே சாலப் பொருத்தமாக அமையும் என்று சொல்லுகிறார். தொடர்ந்து வரும் பாடல் தான் இது. காதல் கடிதம் என்ற ஒற்றை கற்பனையில் ஆழ்ந்து கவி படித்துள்ளார். மிகவும் ரம்மியமான குரல்களில் : எஸ் ஜானகி, உன்னி மேனன், காதல் சொட்டுகிறது. வரிகளை கெடுக்காமல், தூக்கி விடும் உன்னத இசை. மிக கச்சிதமான, படபிடிப்பு. கண்ணையும் உள்ளதையும் வெகுவாக கவரும் பாடல்.

 

படம் : ஜோடி
பாடல் : காதல் கடிதம் தீட்டவே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : எஸ் ஜானகி, உன்னி மேனன்

காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும்
அஞ்சல் காரார்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல்…

கடிதத்தின் வாரத்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?

பொன்னே உன் கடிதத்தை
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

காதல்…

கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?

காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரரானாய்
உயிரே நான் உறங்கும்போது
உறங்க மாட்டாயா>

தப்பு செய்ய பார்த்தால்
ஒப்புக் கொள்வாயா?
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா ?

காதல்…

இன்றுடன் வைரமுத்து வாரம் இனிதே நிறைவு பெறுகிறது. அவரது பாடகளின் கதிர்களை காட்டியுள்ளோம். சூரியன் போன்ற அவரது திறமை மேலும் மேலும் ஒளிமயமாக ஒலிவடிவில் பிரகாசிக்கட்டும். நம்மையெல்லாம் வார்த்தைகளால் பரவசப்படுத்தட்டும்.

vairamuthu click

சுந்தரி கண்ணால் ஒரு சேதி….

உலக இசை தினம் 2013 இன்று (21 ஜூன்).  மனம் கனிந்த வாழ்த்துகள். இசை என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் ஒரே தேவன் தான் : ராக தேவன் ராஜா. அவரின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றை, இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். சுவாசம் போல நேசம், இசை எல்லா(ம்) தேசம்  !

இளைய ராஜாவின் பிறந்த நாள் வாரத்திலேயே வந்திருக்க வேண்டிய பாடல் இது. தாமதமாகிவிட்டது. ஆனால் இசைஞானியின் பிறந்த நாள் அன்று மட்டுமில்லை என்றைக்கும் கேட்டு மகிழக் கூடிய பாடல் இது.

ரஜினியும் ஷோபனாவும் பாடும் பாடல் இது. போர்க்களக் காட்சியாக உருவகம் செய்திருப்பார்கள். காதலன் போருக்குப் போயிருப்பான். அவன் வருகைக்காக காத்திருக்கும் காதலி. பேலூர், ஹளேபீடூ ஆகிய இடங்களில் படமாக்கப் பட்டிருக்கும் காட்சி.

தளபதி படப் பாடல்; எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி குரலில் உள்ளத்தையும், உணர்வுகளையும் குளிர வைக்கும் பாடல். பாடலின் வரிகளும், இசையும் போட்டிபோடும் இந்தப் பாடலில். வரிகள் ஒவ்வொன்றும் காதலின் உண்மை பேசும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதை வருடும்.

(ராஜா அவர்கள், இந்த பாடலை, வாலி எழுதிய விதத்தை  பற்றி, எல்லா மேடைகளிளும் சொல்லி உள்ளார், எனவே அதை இங்கு சேர்க்க வில்லை…;))

படம் : தளபதி
பாடியவர்கள் : எஸ். பி. பி; எஸ். ஜானகி
இசை: இளைய ராஜா
பாடலாசிரியர் : வாலி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?

என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!

நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!

சுந்தரி…
என்னையே…

வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?

வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம் !
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்

தேன் நிலவு நான் வாழ
ஏன் இந்த சோதனை?

வான் நிலவை நீ கேளு!
கூறும் என் வேதனை!

எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நினைத்தாயோ?
என்னையே தந்தேன்…
சுந்தரி…

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால் !
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால் !

மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ?
நீ எனை தீண்டினால்

காயங்களும் ஆறாதோ?
நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்!
வருவேன் அந்நாள் வரக்கூடும் !
சுந்தரி…

இந்தப் பாடலைப் பற்றி ஒருமுறை எஸ்.பி.பி நினைவு கூர்ந்த விஷயம்:

Raja and Vali
இளைய ராஜ வாலி

‘இந்தப் பாடல் மும்பையில் பதிவாகியது. ஆர்.டி. பரமன் அவர்களின் ஸ்டூடியோவில் அவரது இசைக்குழுவில் இருக்கும் இசைக் கலைஞர்கள் இந்தப் பாடலுக்கு இசைக் கருவிகள் இசைத்தனர். இளையராஜா குறிப்புகளைக் கொடுத்ததும் இசைக்கத் தொடங்கினர். ஒவ்வொருமுறை இசைத்து முடித்தவுடனேயும் எழுந்து நின்று கைதட்டினர். இது கூட ஒன்றும் வியப்பானது இல்லை. பாடலின் பதிவு முடிந்தவுடன் ஒரு இசைக் கலைஞர் வந்து, ‘இவரை சென்னையிலேயே இருக்க சொல்லுங்கள். இவர் கம்போஸ் செய்வதை எல்லாம் வாசிப்பது ரொம்பவும் கஷ்டம். பாம்பே வர வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்றார்.’

இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் என் பிள்ளை ‘இங்கு ஒரே ஒரு புல்லாங்குழல் வரது, கவனித்துக் கேள்’, ‘இப்போ எல்லா இசையும் ஒண்ணா வரும் கேளு’ என்று சொல்லிக் கொண்டே இருப்பான். இந்தப் பாட்டை ரசிக்கவும் ஒரு தனி திறமை வேண்டும் என்று தோன்றும் எனக்கு.

பட இயக்குனர், காட்சி அமைப்பாளர், நடனம் அமைத்தவர், இசை அமைத்தவர், பாடலை எழுதியவர், பாடியவர்கள், நடிகர், நடிகை என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து செய்திருப்பார்கள்.

இன்றளவும் இந்த பாடலைப் பற்றி ட்விட்டர், facebookகில் பேசாத இசை ரசிகர்களே இல்லை

தனியாக இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு முழுமையாக இந்தப் பாட்டில் ஒன்றிப்போய் கேளுங்கள். அது ஒரு ஆனந்த அனுபவமாக நிச்சயம் இருக்கும்!

மலரே மௌனமா ?

இசை இன்பங்கள் எங்கும் வளரட்டும் !

தளத்தின் இரண்டாவது வாசகர் விருப்பத்தை இன்று பதிவு செய்கிறோம். இந்த பாடலை கேட்டவர் எங்கள் குழுவின் மாண்புமிகு மாமி – திருமதி.ரஞ்சனி அவர்கள். மேலும் உங்கள் விருப்பங்களும் எதிர்ப்பார்க்கப் படுகின்றன.

காதலனும் காதலியும் தனித்த ஒரு ரம்மியமான இடத்தில் சந்தித்து சல்லாபம் கொள்கின்றனர். அவர்கள் பேசும் வைர வரிகளை பாடலாக வடித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகியின் இனிய குரலில் வித்யாசாகர் இசையில் வெளிவந்த பாடல்.

பால வைரம் !

பாடல்: மலரே மௌனமா
படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பீ.பி, எஸ்.ஜானகி

மலரே மௌனமா ?
மௌனமே வேதமா ?

மலர்கள் பேசுமா ?
பேசினால் ஓயுமா ? அன்பே !

மலரே…

பாதி ஜீவன் கொண்டு,
தேகம் வாழ்ந்து வந்ததோ !
மீது ஜீவன் என்னை,
பார்த்து போது வந்ததோ !

ஏதோ சுகம் உள்ளுருதே. …
ஏனோ மனம் தள்ளாடுதே …

இதழ்கள் தொடவா ?
விருந்தை பெறவா ?

மார்போடு கண்கள் ஊடவா ?
மலரே…

கனவுகள் கண்டு, எந்தன்
கண்கள் மூடிக் கிடந்தேன் !
காற்றை போல வந்து
கண்கள் மெல்ல திறந்தேன் !

கற்றே என்னை கிள்ளாதிரு …
பூவே என்னை தல்லாதிரு …

உறவே உறவே,
உயிரின் உயிரே !

புது வாழ்க்கை தந்த வள்ளலே ….
மலரே…

காதலையும் அன்பையும்  சிறப்பிக்கும் வண்ணத்தில் மேலும் பல பாடல்கள் வரிசையில் உள்ளன. உங்கள் விருப்பங்கள், ஆதரவுகள், மற்றும் அனைத்தையும் பின்னூட்டம்/மறுமொழிகள் மூலம் எங்களுக்கு தெரிவிக்கலாம். உங்களின் பங்களிப்பு, எங்களின் ஊக்கம்.