பூங்காற்றிலே ! ! !

என்றும் மனதை வருடும் பாடல்களில் இன்னும் ஒன்று. இசையில் ஒரு மாஜிக். அனுபவத்தில் ஒரு சோகம். இந்த வார இறுதி இனிதாகட்டும்.

படம் : உயிரே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா

ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை….

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா ?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வளிகின்றதா ?
நெஞ்சு நனைகின்றதா ?

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா ?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…
(பூங்காற்றிலே)
(கண்ணில் ஒரு…)

வானம் எங்கும் உன் விம்பம்,
ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா
(பூங்காற்றிலே)

உண்மை ஒரு நாள் வெல்லும் – லிங்கா

இசை வணக்கம்

லிங்காவின் ஒரே சோகப் பாடல், ஆனால் இசையும் வரிகளும் மிளிர்கிறது. தலைவனுக்கேது தாழ்வு ? அவன் தோற்றாலும், அதில் ஒரு உண்மை இருக்கும். இது என்றுமே ரஜினி படத்தில் வரும் ஒரு கட்டம். இதற்காக பல படங்களில் பாடலகள் உண்டு : பட்ச்ஷா, அண்ணாமலை, பாபா.. என் பாட்டில் நீள்கிறது.

சத்தியத்தின் சங்கமம் நாயகன், ஆனாலும் அவனை சூது கவ்வுகிறது. ஆகாச குரல் அவனை நோக்கி பாடினால் எப்படி இருக்கும், என வைரமுத்து படம் பிடித்துள்ளார். தண்ணீர் மீது அணைக் கட்டும் ரஜினி சாகும்போது/துவண்டு விழும் போது வரும் பாடல் இது என நம்புகிறேன்.

குழலும், வயலினும் குலைந்து சோகத்தில் சோபைப் பெறுகின்றன. மெல்லிய மெட்டுடில் கரைந்துள்ளர் ஹரிசரண். பல ரஹ்மான் பாடல்களின் சாயல் இதில் உள்ளது. வைரமுத்துவின் வாரத்தை ஜாலங்களில் மோனைகளும், ஏதுகைகளும் அட்டகாசம்! நல்ல சங்க பாடல்களை, பழமொழிகளை இலகுவாக கையாளுகிறார். கேளுங்கள்.

Lingaa music release

பாடல்: உண்மை ஒரு நாள் வெல்லும்.
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்.
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: ஹரிசரண்
படம்: லிங்கா

உண்மை ஒரு நாள் வெல்லும்.
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன்,
நீயே நீயே நீயேடா!
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்,
உண்மை மெதுவாய் பேசும்!
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே… கலங்காதே… கலங்காதே…
கரையாத… கலங்காதே… கலங்காதே…

ராமனும் அழுதான்…!
தர்மனும் அழுதான்…!
நீயே அழவில்லை,
உனக்கோ அழிவில்லை!

சிரித்து வரும் சிங்கமுண்டு.
புன்னகைக்கும் புலிகள் உண்டு.
உரையாடி உயிர்குடிக்கும்,
ஓநாய்கள் உண்டு!
பொன்னாடை போர்த்து விட்டு,
உன்னாடை அவிழ்ப்பதுண்டு!
பூசெண்டில் ஒளிந்துநிற்கும்,
பூநாகம் உண்டு.

பள்ளத்தில் ஓர்
யானை வீழ்ந்தாலும்,
அதன் உள்ளத்தை
வீழ்த்திவிட முடியாது!

உண்மை ஒரு நாள்…..

சுட்டாலும் சங்கு நிறம்
எப்பொதும் வெள்ளையடா,
மேன்மக்கள் எந்நாளும்
மேன்மக்கள் தானே!
கெட்டாலும் நம் தலைவன்
எப்போதும் ராஜனடா!
வீழ்ந்தலும் வள்ளல் கரம்
வீழாது தானே!
பொன்னோடு மண்
எல்லாம் போனாலும்
அவன் புன்னைகையை
கொல்லையிட முடியாது!

உண்மை ஒருநாள்….

இனிய பாடலுடன், இணைய வழி இணைவோம்.

ஓ நண்பா, ஏ நண்பா… – லிங்கா

காலம் தொட்டு, தொடர்ந்து செய்து வரும் விஷயங்களை மரபு என்று சொல்லுவோம். இந்த பாடலும் ஒரு மரபே : ரஜினி நடிக்கும் படங்களில், முதல் பாடலை, ஏ ஆர் ரஹமான் இசையமைக்க, வைரமுத்து வரிகள் எழுத, எஸ்.பி.பி பாடி வருகிறார். லிங்கா படப்பாடல் இன்று.

ஆட்டம் போட வைக்கும் Rock இசை. உற்சாகத்துடன் அறிவுரைகளை சேர்ந்து ஊட்டும் வரிகள். நண்பர்களை மையமாக கொண்டுள்ள பாடல், கூட்டு முயற்சியினால் கோடி இன்பம், படத்தின் கருவும் இதில் உள்ளது. தங்கம் தேய்க்க தேய்க்க சோபித்து விளங்கும். SPB குரலும் அது போலே! ரசித்து மகிழுங்கள்.

lingaa

பாடல்: ஓ நண்பா, ஏ நண்பா
இசை: ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்
படம்: லிங்கா

ஹே ஹே ஓஹோ ஓஹோ

ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாம்!
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாம்!

ஆசை இருந்தால் நண்பா,
சொர்க்கம் திறக்கும் நண்பா!
நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு,
முத்தெடுபோம் வா நண்பா!

வானம் வலது கையில்,
பூமி இடது கையில்,
வாழ்வே நமது பையில்!

ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாமா ?
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா ?

ஹே நண்பா…
ஓ நண்பா….

காதல் பெண்ணும்,
ரசிக்க தானே கிண்ணம்,
ருசிக்க தானே ரெண்டும்,
அளவுத் தாண்டி செல்லாதே!

உன் எல்லை
அறிந்து கொண்டால்
தொல்லை….
உனக்கு இல்லை!
மீனே தண்ணீரை
தாண்டி துள்ளாதே!

உன்னோடு செல்வம்,
எல்லாம் சேர்த்துக்கோ,
கொண்டாட நண்பன்,
வேணும் பார்த்துக்கோ!

ஹே முன்னோர்கள் சொன்னால்
சொன்னால் ஏத்துக்கோ!
வேலைக்கு ஆகதென்றால்
மாத்திக்கோ….!

ஓ நண்பா…

மண்ணில் இன்பம்
இயற்கைதானே
துன்பம் செயற்கை தானே
முள்ளில் நீ மெத்தை
தைத்து தூங்காதே!
முன்பு இன்பம்
கொடுத்ததெல்லாம்
பின்னால் துன்பம் தரும்!
கண்ணா நீ
கட்டுப்பாடு தாண்டாதே
இதயம் பெரிதாக
வாழ்ந்து பார்
இன்பம் பெரிதாகி தீருமே!
உன்னை எல்லாருக்கும்
தந்து பார்
உலகம் உனதாகி போகுமே….!

ஓ நண்பா…

ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாம்.
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாம்.
ஆசை இருந்தால் நண்பா
சொர்கம் திறக்கும் நண்பா
நான் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
முத்தெடுபோம் வா நண்பா

வனாம் வலது கையில்
பூமி இடது கையில்
வாழ்வே நமது பையில்

ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா?

அடுத்த புதுப்பாடலுடன் விரைவில் இணைவோம்

ஹே மிஸ்டர் மைனர் – காவியத்தலைவன்

இசையின் இன்பம் பரவட்டும்.

காவியத்தலைவன் பாடல்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன. பா.விஜய் எழுதிய பாடல் இன்று இசைப்பாவில். கொஞ்சும் காதல் பாடல், எதுகை மொவனை எல்லாம் எப்பொழுதும் போல அழகாக அள்ளி வீசியுள்ளார் கவிஞர். ரஹ்மான் இசை, அந்த காலத்தை சரியாக சித்தரிப்பதாக, youtube கமெண்ட்ஸ் சொல்லுகின்றன. பாடக்ர்களின் குரலில் ஒரு சின்ன துள்ளலும், இலையோடும் குறும்புத்தனமும் தெரிகிறது.

முதல் சில வரிகளையும் நல்ல தமிழில் எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது. Skype மூலம் ரஹ்மான் இசையமைக்கிறார், iPad உதவி கொண்டு பாடகர் பாடுகிறார், கவிஞர் எழுதும் முதல் வரி ஆங்கிலம், இசை கருவிகள் எந்த நாட்டில் செய்யப்பட்டனவோ! ஆனால் இது ஒரு தமிழ் படம், நாம் தான் காசு கொடுத்து பார்த்து, அவர்களை வாழ வைக்க வேணும். நல்லா இருக்குல!| இந்த கதை எல்லாம் நமக்கு எதுக்கு, பாடல் நல்லா இருந்தா பேசாம ரசிக்க வேண்டியது தானே – உங்க Mind Voice கேக்குது!

kaaviya thalaivan siddarth

பாடல் : ஹே மிஸ்டர் மைனர்
படம் : காவியத்தலைவன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் : பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிசரண், சாஷா திருபாத்தி

ஹே மிஸ்டர் மைனர்
என்ன பார்க்குற
என் இரவுகுகளை
இம்சையாக்க நினைக்குற
காற்றின் காலில்
கொலுசு கட்டி அனுப்புற
காதலை கை
குலுக்கு இழுக்குற

ஹே மிஸ்டர் மைனர்…

என்னை உனக்கு
ரசிகனாக மாத்துறேன்
உன் அழகை தினமும்
நூறு மடங்கு கூட்டுறேன்
கண்கள் பட்டு போகும்
என்று நினைக்கிறன்

நெஞ்சிலே தங்கிக்
கொண்டு சிரிக்குற

ஹே மிஸ்டர் மைனர்…

ஆசைகள்
உன்னோட நெஞ்சை
தட்டி எட்டிப் பார்க்குது
ஆடை ஒட்டி பார்க்குது

பேசத்தான் நெஞ்சோடு
வார்த்தை கெஞ்சி கொஞ்சுது
வாய் பேச வாய்தாயேன்

இமைகளை திறக்குதே கனவுகள்
இதழ்களை நினைக்குதே இரவுகள்
மலர்களை உடைக்குதே பனி துகள்
நீயும் நானும் சேரும் நேரம் மீறும் ஈரம்

ஹே மிஸ்டர் மைனர்…

என்னை உனக்கு…

என்னமோ என்னோடு
கிச்சு கிச்சு மூட்டி போகுது
கன்னம் பிச்சு போடுது

கன்னமோ கண்ணோடு முத்த
பிச்சை கேட்குது
தா உன் இதழ் தாயேன்

முதல் முறை
பரவுதே பரவசம்
கணம் கணம்
மலர்வனம் இவள் வசம்
இடைவெளி குறைந்த
பின் இதழ்ரசம்
கண் கவிழ்ந்த மையல்
போது நெஞ்சின் மீது

என்னை உனக்கு….

ஹே மிஸ்டர் மைனர்…..

மேலும் புதிய பாடல்களுடன் விரைவில் சந்திப்போம்.

யாருமில்லா தனியரங்கில்… – காவியத்தலைவன்

காவியத்தலைவன் படத்தின் அடுத்த ஒரு பாடல் (மட்டும்) வெளியாகியுள்ளது. நாடக சாபகள் கொடிக் கட்ட பறந்த காலத்தை அடிப்டையாகக் கொண்ட கதை. இசையும் அதை துள்ளியமாக பிரதிபலிக்கிறது, ரஹ்மான் மிளிர்கிறார் என்றால் மிகையாகாது, Interludes அனைத்தும் அலாதி சுகம். பாரம்பரிய கருவிகளின் கலவையான படையல் இந்த பாடல். ஒரு வகை சோக ரசம் ததும்புகிறது ! நாயகி தலைவனுக்குகாக ஏங்கி, தனது ஆசைகளை வெளிப்படுத்தும் மிருதுவான வரிகலுக்கு சொந்தக்காரர் பா விஜய். காற்று பறக்கும் லாவகதுடன், தேன் ததும்ப ஒலி : ஸ்வேதா மோகனின் பரிச்சியமான குரல். ஃபேஸ்புக்-கில் Trending ஆகி, இன்று அதிகம் பேசப்படும் செய்தியாக இந்த பாடல் மாறியுள்ளது என்றால் மக்களின் விருபம் தானாகவே தெரிகிறது!

yaarumilaa

படம்: காவியத்தலைவன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடல்: யாருமில்லா தனியரங்கில்
பாடியவர்கள்: ஸ்வேதா மோகன், ஸ்ரீநிவாஸ்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே,
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தனிமும் தேடும்
என் பேச்சை கேடக்காமல்
உன்னை தேடும்

யாருமில்லா தனியரங்கில்…

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான்
மட்டும் இருப்போம் !

கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான்
என்றும் நிஜமாய்

ஓ… அது ஒரு
ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்

இதழ்கள் என்னும் படிவழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில்…

என்ன சொல்வேன்…

யாருமில்லா தனியரங்கில் !….

பேச மொழி தேவையில்லை
பார்த்துக் கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா ?
மணிக்குயில் நானுமே !

சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா – சொல்
யாருமில்லா தனியரங்கில்…

என்ன சொல்வேன்…

காவியத்தலைவன் படத்தில் வந்த, வாங்க மக்கா வாங்க பாடல் கேட்க சொடுக்கவும். சீக்கிரம் ஒரு புதிய பாடலுடன் உங்களை சந்திக்கிறோம். பார்வைகளால் எங்களை உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.

காதல் கடிதம் தீட்டவே

இணைய வழி இனிய வணக்கம்.

கவிஞர் வைரமுத்துவின் சகாப்தம் நிச்சயம் பதிவு செய்யப்படும். அதில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் கருத்து / சம்பவம் இதுவாக தான் இருக்கும்.  தான் வாழ்ந்த காலத்தில், தன் சகபடைப்பாளிகளை நேசத்துடனும், பாசத்துடனும் மரியாதை அளித்து, ஊக்குவித்த வித்தகர் வைரமுத்து. இதற்கு பல நிதர்சனமான உதாரணங்கள் சொல்லலாம். வாலிப கவிஞர் வாலியின் இறுதி ஊர்வலத்தில், தனக்கே உரிய மிடுக்குடன் நடந்து சென்றார். வருடா வருடம் பணமுடிப்பு கொடுத்து பெரும் கவிஞர்களை பாரட்டி, ஊக்குவிக்கிறார். இந்த வருடம் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி அந்த பரிசைப் பெற்றார் என்பது கூடுதல் தகவல்.

vairamuthu 60

காதல் பாடல் தான் எத்தனை எத்தனை ரசத்துடன் கவிஞர் எழுதியுள்ளார் என்று எண்ணி பார்த்தால், மலைப்பு ஏற்படுகிறது. நாயகனும், அவனது ஜோடியும் ஒரே ஹோட்டலில் தொலைக்காட்சி பார்க்கின்றனர், அதில் வைரமுத்துவே பேட்டி தருகிறார். அவரவர் காதலை, அவரவர் பாணியில் வெளியிடுவதே சாலப் பொருத்தமாக அமையும் என்று சொல்லுகிறார். தொடர்ந்து வரும் பாடல் தான் இது. காதல் கடிதம் என்ற ஒற்றை கற்பனையில் ஆழ்ந்து கவி படித்துள்ளார். மிகவும் ரம்மியமான குரல்களில் : எஸ் ஜானகி, உன்னி மேனன், காதல் சொட்டுகிறது. வரிகளை கெடுக்காமல், தூக்கி விடும் உன்னத இசை. மிக கச்சிதமான, படபிடிப்பு. கண்ணையும் உள்ளதையும் வெகுவாக கவரும் பாடல்.

 

படம் : ஜோடி
பாடல் : காதல் கடிதம் தீட்டவே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : எஸ் ஜானகி, உன்னி மேனன்

காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும்
அஞ்சல் காரார்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல்…

கடிதத்தின் வாரத்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?

பொன்னே உன் கடிதத்தை
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

காதல்…

கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?

காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரரானாய்
உயிரே நான் உறங்கும்போது
உறங்க மாட்டாயா>

தப்பு செய்ய பார்த்தால்
ஒப்புக் கொள்வாயா?
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா ?

காதல்…

இன்றுடன் வைரமுத்து வாரம் இனிதே நிறைவு பெறுகிறது. அவரது பாடகளின் கதிர்களை காட்டியுள்ளோம். சூரியன் போன்ற அவரது திறமை மேலும் மேலும் ஒளிமயமாக ஒலிவடிவில் பிரகாசிக்கட்டும். நம்மையெல்லாம் வார்த்தைகளால் பரவசப்படுத்தட்டும்.

vairamuthu click

அழகான ராட்சசியே…

இசை வணக்கங்கள்,
                         மீண்டும் வைரமுத்து வாரம் தொடர்கிறது. இன்றைக்கு(ம்) அனைவருக்கும் மிகவும் பிடித்த பிரபலமான பாடலை காணவிருக்கிறோம். பாடல் இடம் பெற்ற படம் முதல்வன். பாடல் -“அழகான ராட்சசியே“. வைரமுத்து வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக அமைத்து இருக்கும்.
vairamuthu 60
இப்பாடல் அதிகம் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகமான ரீதிகௌளையில் அமைந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஹரிணி ஆகியோரின்  குரலால் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.காதலன் தன் காதலை அழகுற காதலியிடம் கூறுகிறான்.தன் காதலை கேள்விகளுடனே கேட்டு காதலனை காதல் கொள்கிறாள் காதலி. சில பாடல்கள் செவியில்  கேட்க கிடைக்கும் உணர்வு எழுத்துகளில் அமைவது கடினம் .அந்த வகையில் இந்த பாடலை சேர்க்கலாம்.பாடலை இசையுடன் ரசிக்கலாம் வாருங்களேன்.
படம் : முதல்வன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்புரமணியம்,ஹரினி

 

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அழகான ராட்சசியே…
 

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ?
கொழந்த கொமரி நான் ஆமா

அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா  ?அடுக்குமா ?

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா

உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா


கிளியே… ஆலங்கிளியே…
குயிலே… ஏலங்குயிலே…

அழகான ராட்சசியே
அடினெஞ்சில் குதிக்கிறியே…

சூரியன ரெண்டு துண்டு செஞ்சு
கண்ணில் கொண்டவளோ… அஹோ ஓ

சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச
பெண்ணிவளோ ஓ ஓ

ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி
மையிடவோ அஹா ஓ

மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக்
கைதட்டவோ ஓ ஓ

துருவி என்னத் தொலச்சிபுட்ட
தூக்கம் இப்ப தூரமய்யா…

தலைக்கு வெச்சி நான் படுக்க
அழுக்கு வேட்டி தாருமய்யா…

தூங்கும் தூக்கம் கனவா ?

கிளியே… ஆலங்கிளியே…
குயிலே… ஏலங்குயிலே…
அழகான ராட்சசியே
அடிநெஞ்சில் குதிக்கிறியே…

முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமணையில் நறுக்குறியே 

சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2)

தேன் கூட்டப் பிச்சி பிச்சி
எச்சி வெக்க லட்சியமா?  அஹா ஓ
காதல் என்ன கட்சி விட்டுக்
கட்சி மாறும் காரியமா? ஓ ஓ
பொண்ணு சொன்ன தலகீழா
ஒக்கிப்போட முடியுமா? அஹா ஓ

நான் நடக்கும் நிழலுக்குள்ள
நீ வசிக்க சம்மதமா?..


நீராக நானிருந்தால் – உன்
நெத்தியில நானிறங்கி

கூரான உன் நெஞ்சில் – குதிச்சி
அங்க குடியிருப்பேன்

ஆணா வீணா போனேன்….
(கோரஸ்)
கிளியே… ஆலங்கிளியே…
குயிலே… ஏலங்குயிலே..
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே…


அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ?
கொழந்த கொமரி நான் ஆமா

அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா  ?அடுக்குமா ?

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா

உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா

 

 மேலும் இனிமையான  பாடலுடன் மீண்டும் சிந்திப்போம்..

 

vairamuthu click