பொன் ஒன்று கண்டேன்…

இசை வணக்கம்

தமிழ் திரையிசையின் மூத்த மகன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மறைந்து விட்டார், காற்றோடு கலந்து விட்டார். இசைப்பாவின் இரங்கல் அஞ்சலி, அவர் பாடல்கள் மூலம் தொடர்கிறது.

நண்பர்கள் இருவரும் பேசிக்கொள்வது போல் அமைந்த பாடலிது. இருவரம் தாங்கள் பார்த்த பெண்ணை பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். பிருந்தாவனா சாரங்கா என்ற ராகம், எளிமையும் இனிமையும் நிறைந்தது. கண்ணதாசன் வரிகள். ஜாம்பவான்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.பி.எஸ் இணைந்து பாடியுள்ளனர். Dynamics என்பார்கள், ஒரே வரியை வேறு வேறு பாவங்களுடன் இருக்கும். இந்த பாடலில் இதனை இலகுவாக அனுபவிக்கலாம். மெல்லிசை என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாடல்.

கீச்சு ‏@thadeus_anand – கடந்த 34 ஆண்டுகளில் கண்ணதாசன் எக்கச்சக்கமாக எழுதிக் குவித்ததற்கெல்லாம் இன்றுமுதல் இசையமைக்கவேண்டிய இனிய வேலை எம்எஸ்வி அவர்களுக்கு. #RIPMSV.

MSV with kannadasan

படம் : படித்தால் மட்டும் போதுமா
இசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ், டி எம் எஸ்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
ஏன்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்கார கிண்ணம்
அலை போல மின்னும்

நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
வெள்ளி நிலா
துள்ளி வரும்
வெள்ளி நிலா

துவண்டு விழும்
கொடி இடையால்
துவண்டு விழும்
கொடி இடையால்

விண்ணோடு விளையாடும் பெண்
அந்த பெண் அவளோ
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி

நீ காண வில்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை

என் விழியில்
நீ இருந்தாய்
என் விழியில்
நீ இருந்தாய்

உன் வடிவில்
நான் இருந்தேன்
உன் வடிவில்

நான் இருந்தேன்

 

நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

இசைப்பா+

ஏறக்குறைய 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் எம்.எஸ்.வி.

இசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :

MSV Irangal

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…

இசையின் இன்ப வணக்கம்.
சில பாடல்களின் முதல் அடியைக் கேட்டவுடனே, பாடப் பிடிக்கும். அந்த வகையில் இந்த தலைப்பைப் பார்த்தவுடனே உங்கள் மனம் மெட்டிசைத்திருக்கும். கண்ணதாசனின் அற்புத வரிகளும், எம்.எஸ்.வி -ன் இனிய இசையும், எஸ்.பி.பி.-யின் வசீகரிக்கும் குரலும் இணைந்து பல ஆண்டுகள் தாண்டியும் இப்பாடலைக் கொண்டாடும்படி செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பாடல் அமைந்த சூழலும், படமாக்கப்பட்ட விதமும் இயல்பாக இருக்கும். வர்த்தக ரீதியான ரஜினி படங்களுக்கு முன்னால் வந்த இயல்பான, நகைச்சுவைப் படம் தில்லு முல்லு ஆகும்.
இவ்வாண்டு இதே படத்தை ரீ-மேக் செய்து வெளியிடப்பட்டது. அதில் இப்பாடலும் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவ்வளவுதான். இப்போது பழைய தில்லுமுல்லுக்கே நாம் சென்று விடுவோமாக! 😉
படம்:தில்லுமுல்லு
பாடலாசிரியர்:கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா!

ராகங்கள்……

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா!

ராகங்கள் பதினாறு….

இசைப்பா +

இயக்குனர் கே.பாலச்சந்தர் ரஜினிகாந்தை வைத்து தயாரித்து, (+) இயக்கிய ஒரே படம் தில்லுமுல்லு

இன்னுமொரு இனிய பாடலில் மீண்டும் இணைவோம். கருத்துகள், திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி

அத்திக்காய் காய் காய்

கவியரசர் கண்ணதாசன்  மறைந்து 32 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் அவர் எழுதிய ‘மானிடர் ஆன்மா மரணமெய்தாது; மறுபடிப் பிறந்திருக்கும்’ என்பதை போலவே அவரது ஆன்மா அவரது பாடல்களில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கிறது என்று சொல்லலாம்.

இன்று இசைப்பா மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல் எனக்குப் பிடித்த  ‘அத்திக்காய், காய் காய்’.

இந்தப் பாடல் பலே பாண்டியா படத்தில் வருவது. நான்கு சிவாஜி, நான்கு எம்.ஆர். ராதா என்று குழப்பமோ குழப்பம். நடிகவேளின் நடிப்பு ரொம்பவும் ரசிக்க வைக்கும். நான்கு சிவாஜிகளுக்கு நான்கு கதாநாயகிகள் என்று நம்மைப் படுத்தாமல் விட்ட இயக்குனருக்கு நன்றி!

இன்னொரு பாடலும் இந்தப் படத்தில் சூப்பர் ஹிட்: சிவாஜியும், நடிகவேளும் பாடும் மாமா, மாப்ளே பாடல்!

இந்தப் பாடலை இதன் வரிகளுக்காக எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப்பாடலை இரண்டு ஜோடிகள் பாடுவதால் (சிவாஜி, தேவிகா/பாலாஜி, வசந்தி) டி.எம்.எஸ். சுசீலா, பி.பி.எஸ். ஜமுனா ராணி என்று நால்வர் பாடியிருப்பார்கள்.

ஒவ்வொரு வரியிலும் ‘காய்’ என்ற சொல் வேறு வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

பாடல்: அத்திக்காய் காய் காய்

திரைப்படம்: பலே பாண்டியா  (1962)

இந்த பாடலில் நடித்திருப்பவர்கள் : சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி.

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா,

                              பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
          இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ? 

‌ஆ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
         இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
         என்னுயிரும் நீயல்லவோ?
        அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.. 

பெ : ஓஓஓ..ஓஓஓ..


பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
          கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

ஆ :  மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெ : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ? 

பெ : ஓ.. ஓ… ஓ.. ஆஹா.. ஆஹா.. 

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
         இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு :அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
           ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
         என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
             இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
        உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா 

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

மெல்லிசை மன்னர்கள் விச்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையமைப்பில் நால்வர் பாட பாடல் ஆஹா! ஓஹோ! தான்.

kannadasanஇந்தப் பாடல்தான் இசைப்பாவில் வெளிவரும் கவியரசரின் முதல் பாடல்.  ஒன்று தெரியுமா? கவியரசர் பிறந்த நாளன்றுதான் மெல்லிசை மன்னரும் பிறந்தார். பாடல்வரிகளும் இசையும் ஒன்றாக ஒரே நாளில் பிறந்திருக்கின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமா பாடல்களில் மாபெரும் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்ததன் காரணம் இப்போது புரிகிறது, இல்லையா?
இசைப்பா +

கண்ணதாசன் என்றால் அழகிய கண்களை வர்ணிப்பவன் என்று பொருள்

பின் குறிப்பு: இப்பாடல் முன்னரே வெளி வந்திருக்க வேண்டிய பாடல். பெருந்தவறுக்கு வருந்துகிறோம். உங்கள் கருத்துகளும், திருத்தங்களுக்கும் காத்திருக்கிறோம். நன்றி