காற்றே என் வாசல் வந்தாய்!

வணக்கம்.

இன்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் பிறந்தநாள்.

ar4-bigஈடற்ற இசையின் மூலம் தமிழ் திரையிசையில் புத்துயிர் பாய்ச்சிய ரஹ்மான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இளமையான, இனிமையான திரைப்பாடல்களைத் தமிழில் மட்டுமல்லாது பன்மொழிகளிலும் வழங்கி வந்துள்ளது நாமெல்லோரும் அறிந்ததே.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இனிமையான பாடல்களைத் தந்து நம் உள்ளங்களில் இசை நிறைய வேண்டுமென்று இசைப்பா தளத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாலைவனத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், இசைக்கேற்ற, பாடல்வரிகளுக்கேற்ற ரம்மியமும், அழகும் இணைந்த பாடல். ரஹ்மானின் இசையில் வெளிவந்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே சிறப்பான பாடல்கள். ரஹ்மானின் மிகச் சிறந்த ஆல்பங்களுள் ரிதமும் ஒன்று. கடந்த ஆண்டு ரஹ்மான் அவர்களின் பிறந்தநாளுக்கு இசைப்பா சார்பில் நதியே நதியே! (ரிதம்) எனும் பாடலைப் பகிர்ந்தோம்.  இம்முறையும் அதே படப் பாடலைப் பகிர்கிறோம்.

படம்: ரிதம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்:  உன்னி கிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவை திறந்தாய்
காற்றே உன் பெயரை கேட்டேன்
காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு

(காற்றே…..)

கார்காலம் அளிக்கும் போது
ஒளிந்து கொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என் அருகில் வந்து நெளிய
நா உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என் உருவம்
கண்கொண்டுப்பிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேன் உள்ள
வரையில் காதலர் வாழ்க
பூமிக்கு மேலே வான் உள்ள
வரையில் காதலும் வாழ்க

(காற்றே…)

நெடுங்காலம் சிப்பிகுள்ளே உருண்டு நிற்கும் முத்து போல
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்து கொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே

நான் சிறகு கொண்டேன் என்று அறிந்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாகச் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகளானால் பிழையா பிழையா

(காற்றே…..)

(துள்ளி வரும்…….)

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லி இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.

-இசைப்பா குழுவினர்

இசைப்பா +
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம்
www.arrahman.com