நான், நீ, நாம்…

இசையின் வணக்கம்.

புத்தம் புது பாடலை இன்று பதிவு செய்கிறோம். மெட்ராஸ் – கார்த்திக் நடித்து வெளியாகயுள்ள திரைப்படம். தென் சென்னை வாசிகளின் வாழ்க்கை பற்றியது என்று, பலதரப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலும் ஒரு “Single Release” .

காதல் தோல்வி இல்லாத படமும் இல்ல, அதற்கு பாட்டு வைக்காத இயக்குனரும் இல்லை. சற்றே வித்தியாசமான கோணத்தில், நாயகி ஏங்கும் கீதம் ! தாபப்பூ – வித்தியசாமான மலர் தான், மனதில் மட்டும் பூக்கும், மயக்கத்தில் மட்டும் தாக்கும் போலும். சக்திஸ்ரீயின் குரல் நல்ல ஏக்கத்தை தருகிறது. ட்ரம்ஸ் மற்றும் மெட்டு, ஒரு சோக சோபையை ஏற்ப்படுத்துகிறது. நம்பிக்கையூட்டி கொண்டே இசையில் வளர்கிறார் சந்தோஷ் நாராயணன். பிரிவின் உவமைகளை அள்ளி தெளித்திருக்கிறார் உமா தேவி

படம் : மெட்ராஸ் [2014]
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : உமா தேவி
பாடியவர்கள் : சக்திஸ்ரீ, தீக்க்ஷிதா

நான் –  நீ –
நாம்-  வாழ உறவே
நீ – நான்-
நாம் – தோன்றும் உயிரே

தாபப்பூவும் நான் தானே….
பூவின் தாகம் நீ தானே…

நான் பறவையின் வானம்…
பழகிட வா நீயும்…
நான் அனலிடும் மேகம்…
அணைத்திட வா நீயும்…

தாபப்பூவும்…

உயிர் வாழ முள் கூட
ஒரு பறவையின்
வீடாய் மாறிடுமே – உயிரே
உன் பாதை மலராகும் !

நதி வாழும் மீன் கூட
ஓர் நாளில்
கடலை சேர்ந்திடுமே – மீனே
கடலாக அழைக்கிறேன் !

தாபப்பூவும்…

அனல் காயும் பறையோசை
ஓர் வாழ்வின்
கீதம் ஆகிடுமே – அன்பே
மலராத நெஞ்சம் எங்கே ?

பலி தீர்க்கும் உன் கண்ணில்
ஓர் காதல் அழகாய்
தோன்றிடுமே – அன்பே
நீ வாராயோ… ஓ…

தாபப்பூவும்…

நான் நீ…

80000++ பார்வைகளை தாண்டி, இன்பம் பரப்பி வருகிறோம். நன்றி ! மகிழ்ச்சி ! விரைவில் அடுத்த பாடலுடன் இணைவோம்.

கல்யாணமாம் கல்யாணம் ….

இசையின் வணக்கம்

குக்கூ படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வரும் 21ஆம் தேதி படம் வெளிவருகிறது. அதற்குள் வெளிவராத இதர பாடல்களும் இசைப்பாவில் இடம்பெற உள்ளன.

தமில் சினிமாவின் தற்போதைய டிரெண்ட் : ஒரு கானா குரலில், முடிந்த மட்டும் குத்து ரகத்தில், நம் மண்ணின் இசையுடன், ஒரு காதல் தோல்விப் பாடல். ராஜு முருகன் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் வித்தியாசமான முயற்சி தான்.

நாயகன் கைக்கு ஒரு கல்யாண பத்திரிக்கை வருகிறது. மணப்பெண்ணின் பெயர் பூங்கொடி. நாயகியின் பெயரும் அதுவே. அது நாயகியின் செய்தியா, இல்லையா என்ற குழப்பத்தில் மனமுடைந்து போகும் நாயகனின் நிலையில் வரும் பாடல். நண்பர்களும், சுற்றத்தாரும் பாடுவது போல அமைந்துள்ளது.

ஜனரஞ்சக ரசனைக்காவே எளிமையாக எழுதப்பட்ட பாடல். சாதரணமாக, இந்த வகை பாடல்கள், பெண்களை ஏசுவது போல் அமையும். ஆனால் அதைச் செய்யாமல் வலியின் உணர்வுகளை மட்டுமே அழகாக தொகுத்த யுகபாரதியை பாராட்டித்தான் ஆக வேண்டும். இசையும் குரலும் இயல்பாக அமைந்துள்ளது. உடுக்கையும், நாயனமும் நல்ல கலவை. பாடலின் காணொளி வெளிவந்து விட்டது. நேர்த்தியாக உள்ளது, தினேஷ் அவர்களின் நடனம் வெகுவாக கவர்கிறது.


பாடல் : கல்யாணமாம் கல்யாணம்    
படம் : குக்கூ
பாடகர்கள் : அந்தோணி தாசன், சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : யுகபாரதி
இசை : சந்தோஷ் நாராயணன்

காதல் கண்மணியே யே யே…

கல்யாணமாம் கல்யாணம்,
காதல் கண்மணிக் கல்யாணம் !
கல்யாணமாம் கல்யாணம்,
காதலி பொண்ணுக்கு கல்யாணம் !

ஒண்ணா சிரிச்சு
மெய்யா பழகி
கண்ணால் பேசி
காத்துக் கிடந்தது
ஒருவர் மடியில்
ஒருவர் சரிந்து
உறங்கிடாமல்
கனவும் கண்டு
கடைசிவரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அத்தனை எல்லாம்
மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே…

கல்யாணமாம் கல்யாணம்…

லலலா… லலலா…
காதல் கண்மணியே யே யே

கூறச் சேல
மடிச்சு கட்டி
குங்குமபொட்ட
நெத்தியில வச்சி

மணவறையில் அவ இருப்பா
மகாராணியா
அவள காதலிச்சவன்
கலங்கி நிற்பான் அப்பிராணியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

கெட்டி மேளம்
காது பொளக்க
நாதஸ்வரம்
ஓங்கி ஒலிக்க
கச்சேரியே ரசிச்சிருப்பா
ஊரு முன்னால

அவள காதலிச்சவன்
கதறிடுவான் ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

சாதி சனத்த
வணங்கிக்கிட்டே
சட்டுன்னு சட்டுன்னு
சிரிச்சுக்கிட்டு
பரிசுப் பொருள வாங்கி வப்பா
ரொம்ப ஆசையா

அவள காதலிச்சவன்
கசங்கி நிற்பான் சந்நியாசியா

வக வகயா
சமைச்சு வச்சு
வாழ இலையில்
பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டி விட்டுவா
போட்டோ புடிக்கத் தான்

அவள காதலிச்சவன்
மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்

மங்களத் தாலி
கழுத்தில் ஆட
மந்திர வார்த்த
அய்யரு ஓத
காரில் ஏறி போயிடுவா
புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன்
வந்துடுவானே நடு ரோட்டுக்கு

கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
காதல் கண்மணியே…….யேஏஏஏஏ!

கல்யாணம் கல்யாணம்
காதலிப் பொண்ணுக்கு கல்யாணம் !

இன்னும் இன்னும் இனிய கானங்களுடன்
விரைவில் சந்திப்போம்.

இன்று திரைப்பட நடிகர் கவுண்டமணி அவர்களுக்கு பிறந்தநாள். அவருக்கு இசைப்பா வின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

இசைப்பாவில் வெளிவந்த இதர குக்கூ பாடல்கள் :

மனசுல சூறக்காத்தே…

இசை பெருகட்டும், இன்பம் பொங்கட்டும். வணக்கம்.

பல புதிய பாடல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதில் எங்களுக்கு பிடித்தவற்றை உங்களுக்கு பரிந்துரை செய்து மகிழ்கிறோம். மீண்டும் குக்கூ பாடல்களுக்கு வருவோம். ஏற்கனவே வெளிவந்த பாடல் -> கோடையில மழப் போல.. இன்று ஒரு காதல் ரசம் ததும்பும் காவிய பாடல்.

படத்தின் பெயர் போலவே பாடல்களும் அதி அற்புதம். இந்த பாடல் தான் ஆல்பத்தின் ஆகச்சிறந்த மெலடியாக இருக்கக்கூடும். திவ்யா ரமணி அவர்களின் குரல் பாந்தமாகவும், ஆழமான உணர்வுகளுடன் ஒலிக்கிறது, காற்று என்னும் பாடும் போது, ஒரு வித நளினம் வெளிப்டுகிறது. இரயிலில் பயணம் செய்யும் காதல் குயில்கள் பாடும் கீதம். யுகபாரதியின் வரிகள், காதலை சரியாக பிரதிபலிக்கின்றது, தேவையான அழுத்தத்துடன்.  புல்லாங்குழலில் வரும் நடு இசைகள், மனதினுள் சென்று பாய்கிறது. பாடலின் சிறப்பு அம்சம் : பல கருவிகளின் இசை ஒன்றன் மீது ஒன்று அலைபாய்ந்து நமக்குள் அமைதி தருகிறது.

படம் : குக்கூ
பாடல் : மனசுல சூறக்காத்தே
பாடலாசிரியர் : யுகபாரதி
பாடியவர்கள் : ஆர் ஆர், திவ்யா ரமணி
இசை : சந்தோஷ் நாராயணன்

மனசுல சூறக்காத்தே
அடிக்குது காதல் பூத்து
மனசுல சூறக்காத்தே
அடிக்குது காதல் பூத்து

நிலவே சோறுட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும்
காதிலே கேட்குதே
உந்தன் வாசனை
வானவில் காட்டுதே

தாரத்தா தரரர…

வாவென்று சொல்லும் முன்னே
வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன்
அறியாத தாய் முகம்

ரகசிய யோசனை
கொடுத்தே ரோதனை
சொல்லாத ஆசை என்னை
சுடச் சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து
புது ஒளி பாய்ச்சுதே

கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்

தனனானா தனனானா தானானா
தனனானா நனனானா நனானா

ஆனந்தம் பெண்னாய் வந்தே
அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ண
குயில் போல கூவுதே

கை தொடும் போதிலே
கலங்கவும் தோணுதே
அன்பபே உன் அன்பில் வீசும்
கருவறை வாசமே

எப்போதும் என்னில் வீச
மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வானொலி பாடுதே

மனசுல சூறக்காத்தே

இந்த பதிவை நீங்கள் படித்து கொண்டு இருக்கும் இந்த தருணம், இசைப்பாவில் ஒரு வரலாறு -> 55,555 ++ பார்வைகள் தாண்டி, இசை வெள்ளத்தை, இந்த புவியெங்கும் பாய செய்துள்ளோம் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இசைப்பா 55555++ பார்வைகள்
இசைப்பா 55555++ பார்வைகள்

எல்லாம் உங்கள் ஆதரவு தான், மீண்டும் ஒரு இனிய பாடலுடன், இசையில் இணையும் வரை இன்பத்தில் இணைவோம்.