நெஞ்சுக் குழிக்குள் முள்ளு மொளச்சா…

காதலர் தின நல்வாழ்த்துகள். காதல் – இந்த சொல்லுக்கு தான் எத்தனை எத்தனை உணர்வுகள்.

பழமையின் புதுமை இது.
புதுமையின் பழமையும் இதுவே.
பல வேளைகளில் புரியாத புனிதம்.
சில சமயங்களில் சிலிர்க்கும் சில்மிஷம்.
வளர்ந்ததுக் கொண்டே வரும் ஒரு ஆற்றல் இந்த காதல்.

காதலை மையமாகக் கொண்டு பல்லாயிரம் பாடல்கள் வெளிவந்துள்ளன. ஆனாலும் இன்னும் தீரவில்லை, போதவில்லை. கேட்க கேட்க இன்பம், நினைக்க நினைக்க பூரிப்பு தான். கவிஞர் வைரமுத்து அவர்களின் பாடல் இன்றைய சிறப்பு பதிவு. பத்ம விபூஷன் விருது பெற்ற தமிழ்ப் புதல்வனின், முத்தான வரிகளில், சிலிர்ப்பூட்டும் காதல் கீதம்.

vairamuthuசமீபத்தில் அவர் எழுதி வெளிவந்த காதல் பாடல் இதுவாகத்தான் இருக்கும். கங்காரு என்னும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல். ஸ்ரீநிவாஸ் அவர்களின் துள்ளல் இசை. அவர்தம் புதல்வி சரண்யா-வின் துடிப்பான குரலுடன் விஜய் பிரகாஷ்-சின் துள்ளல் குரலும்.

காதலுக்கு தான் அடுக்கடுக்காக உவமைகளை சேர்த்து, கதம்பமாக அமைத்த கவிஞரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இசை நம்மை ஆளட்டும். திசை எங்கும் பரவட்டும்

படம் : கங்காரூ
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : சரண்யா ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ்
இசை : ஸ்ரீநிவாஸ்

நெஞ்சு குழிக்குள் முள்ளு மொளச்சா,
காதல் வந்தததென்று அர்த்தமா ?
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளச்சா,
காதல் வந்தததென்று அர்த்தமா ?

உச்சந் தலைக்குள்ள ஊசி வெடி போட்டு,
கிச்சு கிச்சு பண்ணும் காதல்!
உசுர மட்டும் விட்டு ஒவ்வொன்னாக தின்னு,
கலகமெல்லாம் பண்ணும் இந்த காதல்!

நெஞ்சு…

ஓ வெக்கம் எல்லாம் போலி தானே,
மேய சொல்லும் வேலி தானே.
போ போ என்னும் வார்த்தைக்கெல்லாம்,
வா வா என்று அர்த்தம் தானே.

ஏரித் தண்ணி இருந்தும் தாகம்
போகவில்லை போடி
மொத்த தாகம் போக வேணும்
முத்தம் ஒன்னு தாடி

முத்தம் என்றால் வெறுப்பு
அது எச்சில் வைத்த நெருப்பு
கெட்ட வார்த்தை சொன்னானே

நெஞ்சு…

ஓரம் சாஞ்சு தொட்டு கொண்டேன்
பாரம் கொஞ்சம் தொட்டால் என்ன ?
ஓரம் தொட்டு உசுரு போச்சே
பாரம் தொட்டால் என்ன ஆகும் ?

தள்ளி போட காதல் ஒன்னும்
தேர்தல் இல்லை வாடி
தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை
தந்து விட்டு போடி

அத்தை பெண்ணாய் நினைத்தாய்
அத்து மீற துணிந்தாய்
கன்னி பெண்ணின் உள்ளத்தை
கலைகிறாய்

நெஞ்சு…

மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களுக்கு இசைப்பா குழுவின் ஆழ்ந்த இரங்கல்.

காதலர் தின நல்வாழ்த்துகள்!