என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்

வணக்கம்.

நீண்ட இடைவெளியாகிவிட்டது. எதிர்பாராத சூழல் காரணமாக தொடர்ச்சியாக இயங்க இயல்வில்லை. இப்பாட்லும் முன்னமே வெளிவந்திருக்க வேண்டிய பாடல். ஆனாலும் பரவாயில்லை. இசைப்பா வில் இதுவரை அறிமுகம் ஆகாத கலைஞர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்யத் திட்டம். அந்த வரிசையில் இசையமைப்பாளர் சி.சத்யா. இந்த பாடல் மூலம் அறிமுகமாகிறார். எங்கேயும் எப்போதும் படம் மூலம் அறிமுகமாகி சென்ற ஆண்டில் மட்டும் மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போதைய அஇளம் இசையமைப்பாளர் வரிசையில்   இவரும் ஒருவர்.

கவிஞருக்கு பாடல் எழுதிய அனுபவங்கள் ஏராளம் என்பது நிதர்சனம். இப்பாடல் மிகக் குறைவான நேரத்திலேயே எழுதி முடிக்கப்பட்டிருக்கும் என்றே கருதுகிறேன். கதாநாயகி நாயகனைக் கண்டவுடன் மறக்கிறாள். எதை மறக்கிறாள்? அவனைத் தவிர யாவையும் மறக்கிறாள்! அவ்வளவுதான் பாட்டு! இப்பாடலை பாடகி மதுஸ்ரீயுடன் இணைந்து இப்பாடலை சி. சத்யாவும் பாடியுள்ளார்.

படம்: இவன் வேற மாதிரி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: சி.சத்யா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, சி.சத்யா

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே!
என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேனே!
அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்?

ஓஓஓஓஒ!
ஏன் என்னை மறந்தேன்?
நான் என்னை மறந்தேன்.

கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டித் தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்?
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

என் மனம் கவரும் ஒற்றைப் பேர்!
தாள் பணிந்தேன்…. தாள் பணிந்தேன்

படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னைப்பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக் கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்?

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

இசைப்பா +
பாடகி மதுஸ்ரீயின் இயற்பெயர் சுஜாதா பட்டாச்சார்யா