கல்லாலே செஞ்சு வச்ச….

வருத்தத்துடன் வணக்கம்.

Vaaliஇசையில் இதுகாறும் திளைத்தவர்களுக்கு, இந்த ஆண்டு முழுக்க துன்பியல் நிகழ்வுகளே அதிகம். தொடர்ந்து இசைத்துறையின் பெரும் பேரரசர்கள் மறைந்து வந்துள்ளனர். இதோ இத்தனை ஆண்டு காலம் நம் செவிகளுக்கு நற்றமிழைத் தந்த வாலி இப்போது இல்லை. அவருக்காக இன்றைய பாடல்.

இன்றைக்கு ஒரு பாடல் வெளியிடு என்று என்னிடம் அண்ணன் சொன்னார். எந்த பாடல் என்ற முடிவின்றி வந்த எனக்கு கவிஞரின் மறைவுச் செய்தி கிட்டியது. இளையராஜா+வாலி என்பது 1980-களின் வெற்றிப்பாடல்களை வகைதொகை இல்லாமல் வழங்கிய கூட்டணி.

சித்திரையில் நிலாச்சோறு படத்தில்இப்பாடல்  இடம் பெறுகிறது. மிகவும் இனிமையான நயத்தில் ஒலிக்கும் இப்பாடல் இரவில் உறங்குவதற்கும் உதவும். பாடலை குலைக்காமல் இசையைக் கையாண்டிருக்கிறார் ராஜா. பாடல் மிக எளிய வரிகளிலேயே ஈர்க்கிறது. கடினமான பொருள்படும்படி, சந்தத்திற்காக வார்த்தைகளை அடுக்காமல் அருமையாக, எளிமையான வார்த்தைகளில் பாடலை வடித்துள்ளார் வாலி.

படம்: சித்திரையில் நிலாச்சோறு
பாடல்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: பிரியதர்ஷினி

கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ!
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ!
எனக்காக மண்ணில் வந்த!
எனக்காக இந்த மண்ணில் வந்த!
என் தங்கமே! வைரமே! செல்வமே!

நந்தவனமா நீ இருந்தா நல்ல மலரா நானிருப்பேன்!
தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு!
மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு!
யானை மேல நீயமர்ந்து வலம் வரணும்!
நான் எப்போ எப்போ கேட்டாலும் நீ வரம் தரணும்!
நீ செய்கூலி, சேதாரம் இல்லாத….

என் தங்கமே! வைரமே! செல்வமே!

நிலவு இன்றி போனாலும் பூக்களின்றி போனாலும்
பொட்டு வச்ச சித்திரமா நீ எனக்கு வேணும்!
கொட்டி வச்ச உன்னழக என்னைக்குமே பாடும்!
தூங்கா விளக்கே நீ தூங்கையில நான்
தூங்காம கண்விழிச்சு காத்திருப்பேன்!
நீ வேணும் நிழலாக வாழ்வோடும்…

என் தங்கமே! வைரமே! செல்வமே!

இதே பாடல் சில வரிமாற்றங்களுடன்

பாடியவர்: ஹரிச்சரண்

இசைப்பா+

கவிஞர் வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.
பிறந்தது திருச்சியில் திருப்பராய்த்துறை.

இன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
இசைப்பா குழுவினர்

மேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540