சாதி மல்லி பூச்சரமே…

இசையில் கரைந்த இனிய  நண்பர்களுக்கு என் வணக்கம்.

வரிகளுக்காகவே சில பாடல்களைத் தேடித்தேடி கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட  பாடல்களின் வரிசையில்  அழகன் திரைப்படத்தில் இடம்பெற்ற புலமைப்பித்தன் எழுதிய “சாதி மல்லிப்  பூச்சரமே..” என்கிற  பாடல்தான்  இன்று நாம் காணவிருக்கும் பாடல் . எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியுள்ளார்.  தெளிவாக அழகாகப்  பாடி  வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றி உள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு பதிவு.

spb5இந்தப் பாடலில் ‘தமிழை சீராட்டி தொண்டாற்றலாம், நம் தேசத்தை நம் தாயெனப்  பேணிக் காப்போம்’ என்று கூறுகிறார் ஆசிரியர். இப்படி மனிதன் வாழ்வது வாழ்க்கையா? என்று கூறி அவன்  வாழ்வது எப்படி என்று வரிகள் கொண்டு உணர்த்துகிறார்.  சின்ன சின்ன வரிகளுடன் ஆழமான கருத்துக்கள் கொண்டு அடிகள் அமைத்துள்ளார்.  தமிழ் புகழ் ஏற்றி மனிதன் வாழ்கை கூறி சில நிமிட பாடலான சாதிமல்லி பூச்சரமே பாடல் கேட்போம் வாருங்களேன்.

 

படம்: அழகன்
இசை: மரகதமணி (எ) கீரவாணி
கவிஞர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 

சாதிமல்லிப் பூச்சரமே – சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி – அவ்வளவு ஆசையடி

என்னென்ன முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு..

சாதிமல்லி…

எனது வீடு எனது வாழ்வு –
என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா?

தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்

கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னை போல் எல்லோருமென
எண்ணனும் அதில் இன்பத்தைத் தேடணும்

சாதிமல்லி…

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி,
பாடும் நம்தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி

யாதும் ஊரென…

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா?
படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்…
கேட்டுக்கோ ராசாத்தி
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு…

சாதி மல்லி…

இசைப்பா +

 1991 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான தமிழ்நாடு  மாநில திரைப்படவிருது அழகன் படத்திற்கு கிடைத்தது.

காலையிலே மாலை வந்தது

இசையின் ராஜ வணக்கங்கள் !

ராஜா
ராஜா

ராக தேவனின் பிறந்தநாள் இன்று ! இசையன்னையின் தவப் புதல்வர்களுள் அவர் ஓர் தனி படைப்பு என சொன்னால் மிகையாகாது. சமீபத்தில் அவர் இசையில் பல படப்பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. அதில் குறிப்பாக நம் மனச் சோர்வை போக்க வல்லது இந்த நிலா சோறு, செவிக்கும் இதயத்துக்கும் ஒரு ராக சோறு, ராஜ சோறு  !

இந்த பாடலை பற்றி நாங்கள் என்ன எழுத, தீவர ராஜா இசை விரும்பி எழுத்தாளர் சொக்கன் அவர் சொன்னதை இங்க நன்றியுடன் பதிவு செய்கிறோம்.

“”

’உங்கப்பன் பேர’ பாடலின் ரிதம் பிரமாதம் என்று எல்லாரும் சொல்கிறார்கள், ஆனால் எனக்கென்னவோ ’காலையிலே மாலை’ பாடலின்unusual rhythm structure ரொம்பப் பிடித்திருக்கிறது, குறிப்பாக பல்லவிக்குத் துணையாக வரும் Rhythm அத்துணை பொருத்தம், பின் அது நீர்த்துவிடுமோ என்று பதற்றத்துடன் கவனித்தேன், மிக அக்கறையாக அதை maintain செய்துள்ளார்.

பல்லவி அனுபல்லவியை ஒரு வீணை வாசிக்க, பாடகி பின்பற்றுவதும், புலமைப்பித்தன் எழுதியிருப்பதும் அவரது ஒரு பழைய பேட்டியை நினைவுபடுத்தியது,‘எனக்கு சந்தம் சொல்லசொல்ல எழுதுவது பிடிக்கும்’ என்றிருந்தார்.

இந்தப் பாட்டில் ஏன் வீணை சந்தம் சொல்கிறது? முதல் பல்லவியில் அது துள்ளி விளையாடுவது ஏன்? யோசித்தால், ராஜா பொதுவாகவே‘குடும்ப’ப் பின்னணி உள்ள பாடல்களில் வீணையை அதிகம் பயன்படுத்துவார். இந்தப் பாடலில் முதல் interludeக்கு வீணை, 2வது interludeக்கு கல்யாண மங்கல இசை, can’t be coincidence.

சரணத்தின் மெட்டு ரொம்ப unusual, குறிப்பாக, புலமைப்பித்தனுக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கும் 🙂 ‘கண் திறந்தேன், என்ன அழகு’என்றவுடன் வரும் burst of emotions, அபாரம்!  அடுத்து வரும் ‘மூங்கில் காடு’ வரி எனக்கு மிகவும் பிடித்தது, best line in the whole album IMO.

மிகப் பிடித்த இன்னொரு வரி: ’இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு, என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு’ ‘இளமையும் இனி உனக்கு’ என்றவுடன் pause தந்து பல்லவி இணையும்இடமும் அபாரம், ஒவ்வொருமுறையும் மெய்சிலிர்ப்பு!

பாடகி மிக அருமையாகப் பாடியுள்ளார், she manages the tune twists so well!! ’சிற்றிடையில் வேலை(ளை)’ என்ற ஒரே ஒரு உச்சரிப்புப் பிழை இல்லாமல் இருந்திருக்கலாம் .

இந்தப் பாட்டைக் கேட்கக் கேட்கச் சலிக்கவில்லை, He has packed so much in a single song!!!

<சுபம்>

 – என்.சொக்கன்

பாடல் வரிகள் உங்களுக்கு :

படம்: சித்திரையில் நிலாச்சோறு
பாடல்: காலையிலே மாலை வந்தது
எழுதியவர்: புலமைப்பித்தன்
இசை: இளையராஜா
பாடியவர்: சப்தபர்ணா சக்ரபர்த்தி

காலையிலே மாலை வந்தது-நான்
காத்திருந்து வேளை வந்தது

இனி காலமெல்லாம்
உன்னை தொடர்ந்து வர
உன் காலடி தான்
இனி சரணமென
இந்த வானமும் பூமியும்
வாழ்த்து சொல்ல

காலையிலே….

கண்களை நான் கட்டிக்
கொண்டு வாழ்த்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு ?

ஓ…..எண்ணத்தை நான் எப்படியோ
ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல பிழிவு
மூங்கில் காடு முழுசா பாடும்
புல்லாங்குழலா மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகா
நித்தமும் வளரும் பௌர்ணமி நிலவா
உனது இரு விழிகளில் கதை எழுது

காலையிலே….

இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு
இந்த வரம் வேணும் எனக்கு
ஓ…. சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு
சிற்றிடையில் வீணை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கும் வரைக்கும் என்னோட கணக்கு
இன்றைக்கும் வரைக்கும் என்னோட கணக்கு
என்னோட வந்த இளமையும் இனி உனக்கு

காலையில மாலை வந்தது
காத்திருந்து வேளை வந்தது

இனி காலமெல்லாம்
உன்னை தொடர்ந்து வர
உன் காலைடியில் தான்
இனி சரணமென
இந்த வானமும் பூமியும்
வாழ்த்து சொல்ல

பாடல் கேட்க, பதிவிறக்க : சொடுக்கவும்

இசைப்பாவில் புலமைப்பித்தனின் அறிமுகம் இந்த பாடல் தான். என்.சொக்கன் அவர்களுக்கு மீண்டும் நன்றி ! இந்த பாடலின் சிலேடை அழகை பற்றி அவர் எழுதியதை இங்க படிக்கலாம்.

உங்கள் விருப்பங்களை பதிவு செய்யுங்கள். உங்கள் பார்வைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. எல்லாம் இசையின் வெற்றி தான். இன்பம் எங்கும் பரவட்டும்.