நீதானே என் பொன்வசந்தம்- முழுப்பாடல்கள்

வணக்கம்.

imagesஇம்மாதம் முழுக்க வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் பாடல்களின் முழுத் தொகுப்பு இங்கே. ஒவ்வொரு பாடலையும் தனியே கேட்க/காணொளியை ரசிக்கவோ, அப்பாடலின் lyrical video -வைக் காணவோ இங்கே செல்லலாம்.

படத்தின் அனைத்து பாடல்களுக்கும்,

இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்.

பாடல்: வானம் மெல்ல
பாடியவர்கள்: 
இளையராஜா, பெலா ஷிண்டே

வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே!
தூறல் தந்த வாசமெங்கும் வீசுதிங்கே!
வாசம் சொன்ன பாஷை என்ன? உள்ளம் திண்டாடுதே!
பேசிப் பேசி மௌனம் வந்து பேசுதிங்கே!
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி?
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும் தருணம்… தருணம்

(வானம் மெல்ல)

அன்று பார்த்தது!
அந்த பார்வை வேறடி!  இந்த பார்வை வேறடி!

நெஞ்சில் கேக்குதே!
துள்ளி துள்ளி ஓடினேன்.  வந்து போன காலடி!

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஹோ!
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்
எங்கேயும் இன்ப துன்பம் நீ தானே!

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே!

அந்த காற்றை நெஞ்சினுள்ளில் பூட்டி வைத்து
காதல் காப்பேனே!

(வானம் மெல்ல)

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோணுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வின் அர்த்தமாக வந்தாயே

நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்?
உன்னை பார்க்க தானடி!

வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க
எந்தன் கண்கள் போதாதே!

(வானம் மெல்ல)

separator-notes

பாடல்: காற்றைக் கொஞ்சம்
பாடியவர்: கார்த்திக்

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம்  அள்ளி தைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க  சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா? என்றேன்

(காற்றைக் கொஞ்சம்…)

நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சினுள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்

தள்ளி தள்ளி போனாலும் உன்னை
எண்ணி வாழுமோர் ஏழை நெஞ்சத்தை பாரடி

தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் எந்நாளும்
தூக்கமில்லை ஏனென்று சொல்லடி

சாத்தி வைத்த வீட்டில்
தீபம் ஏற்றி வைக்க நீ வாவா
மீதி வைத்த கனவை எல்லாம்
பேசி தீர்க்கலாம்…..  ஏ ஏ ஏ ஹே

(காற்றைக் கொஞ்சம் …)

நேற்று எந்தன் கனவில் வந்தாய்
நூறு முத்தம் தந்தாயே!
காலை எழுந்து பார்க்கும் போது
கண்ணில் நின்று கொண்டாயே!

பார்த்து பார்த்து எந்நாளும்
பாதுகாத்து என் நெஞ்சை
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி

உன்னை பார்த்த நாள் தொட்டு
எண்ணமோடும் தறி கெட்டு
இன்னும் என்ன செய்வாயோ? சொல்லடி!

என்னை இன்று மீட்கத் தான்
உன்னை தேடி வந்தேனே
மீட்டபோதும் நான்
உன்னுள் தொலைகிறேன்……. ஹே…ஹே!

NEP

பாடல்: முதல் முறை பார்த்த ஞாபகம்
பாடியவர்: சுனிதி சௌகான்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்

மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்

வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?

நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்

(முதல் முறை)

நீந்தி வரும் நிலாவினிலே, ஓராயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே, நூறாயிரம் தீயலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்கு என் பதிலென பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்  இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்  அங்கு போனது உன் தடமில்லையே

காதலென்றால் வெறும் காயங்களா? – அது
காதலுக்கு அடையாளங்களா?
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?

 நீ தானே என் பொன்வசந்தம் வசந்தம், வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்

மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்

வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?

நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
separator-notes

பாடல்: சாய்ந்து சாய்ந்து
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா என்.எஸ்.கே

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் பொது அடடா ஹே

விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே

என் தாயைப் போல ஒரு பெண்ணை தேடி
உன்னைக் கண்டு கொண்டேனே

ஓஹோ!
என் தந்தை-தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்

அழகான உந்தன் மாக்கோலம்
அதைக் கேட்கும் எந்தன் வாசல்
காலம் வந்து இந்த கோலம் இடும்

உன் கண்ணை பார்த்தாலே
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம்……!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே

கை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்கள்
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்

என் வீட்டில் வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
ஆள்யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்

(சாய்ந்து சாய்ந்து)

 separator-notes

பாடல்: பெண்கள் என்றால்…
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா?

பெண்களின் காதலின் அர்த்தமினி
புல்லின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப்போகும் தன்னாலே

காதல் வரும் முன்னாலே ஓ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஓ ஹோ

என்ன சொல்லி  என்ன பெண்ணே  நெஞ்சமொரு காத்தாடி
தத்தி தத்தி  உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா?

இதற்கு தானா ஆசை வைத்தாய்?
இதயம் கேட்குதே!
இவளுக்காக துடிக்க வேண்டாம்
என்று சொல்லுதே!

மதிகெட்ட என்னிடம்  மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த  பெண் இவள் என்றது

தீயை போன்ற பெண் இவள்      என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பில் செய்த ஆயுதங்கள்  பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

(பெண்கள் என்றால்……)

separator-notes

பாடல்: என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்…!
பாடியவர்: கார்த்திக்

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் |
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

செல்ல சண்டை போடுகின்றாய்
தள்ளி நின்று தேடுகின்றாய்
அஹ்ஹஹ்ஹா
அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி நீ சாய்வது
என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவது போல நடிப்பது
எந்தன் குரல் கேட்கதானடி

இன்னும் என்ன சந்தேகம்
என்னை இனி எந்நாளும்
தீயாக பார்க்காதடி

சின்னப் பிள்ளை போல நீ
அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களை எல்லாம்
எண்ணி சொல்லிக் கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்

என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்

காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்னச் சின்னத் தலைக்கனமே!
காதலதை பொறுக்கணுமே
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே!

உன்னுடைய கையாலே தண்டனையே
தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே!

கன்னத்தில் அடிக்கும் அடி
முத்தத்தால் வேணுமடி!
மற்றதெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி

எந்த தேசம் போன பின்பும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே!

(என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்…)

separator-notes

பாடல்: சற்று முன்பு பார்த்த
பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே

சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக

சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக

நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன் சொல்
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய்யென்று சொல்வாயா?
ஓ ஓ……….

(சற்று முன்பு……)

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா!
தூங்கப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா!
வாங்கி போன என் இதயத்தின்  நிலைமை என்னடா!
தேங்கி போன ஓர் நதியென  இன்று நானடா!
தாங்கி பிடிக்கவும் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட…

(சற்று முன்பு…)

சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா?

தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே?

சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக

separator-notes

பாடல்: புடிக்கல மாமு!
பாடியவர்கள்: சூரஜ் ஜகன், கார்த்திக், மற்றும் குழுவினர் 

புடிக்கல மாமே! படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொறத்துது நாலேஜ்
அறுக்குது புக்ஸு அலறுது டீன் ஏஜ்
சீக்கிரம் வந்திடும் நமக்கு ஓல்ட் ஏஜ்

சிங்க குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் புக்ஸ்ச எடைக்கு போடுடா லாபம்

நான் tension ஆகிட்டேன் bucketடு bucketடு

tourக்கு எடுங்கடா ticketடு ticketடு

ஹே……………………………………………

புடிக்கல மாமே!

என் வார்த்த நீ கேட்டு
வெட்டு வெட்டு கல்வெட்டு
ஏயே….

எங்கேயும் chilloutடு இல்லையினா getoutடு
ஹே ஹே….

girlsசு நாம்ம classசில் இல்ல
என்ற போதும் தப்பில்ல !
singleலான boyசுக்குத்தான்
workout ஆகும் மாப்பிள்ள!

நான் எறிஞ்ச ball எல்லாம் wicketடு wicketடு
எறங்கி கலக்குடா bucketடு bucketடு
ஹே ஹே……….

(புடிக்கல மாமே!)

உடம்பில் சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குறும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிக்கும் ஆட்டம்
ஆதிவாசி போல இருக்கட்டும்

அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே

College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே

மச்சி கடலு மீனுக்கு
கொளத்து தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே

இந்த lifeவ நீயும் அனுபவிக்க
வயசு பத்தாதே

அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே

College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே!

தடக்கு தடக்கு ரயில
போல வருஷம் ஓடுமடா
நீ படுத்து படுத்து எழுந்துபாரு
நிமிஷம் ஓடுமடா

தடக்கு…..

எடக்கு மடக்கு இல்லையிநா
எளமை எதுக்குடா
நீ குறுக்கு நெடுக்கு மடக்கலைனா
உடம்பு எதுக்குடா
படிக்குற பாடம் போதாதடா
தெருவில் இறங்கி நீ படிடா
கனவில் எதையும் ஓட்டாதடா
ஜெயிக்கும் இடத்த புடிடா

நம்ம திசையில பார்த்து
சுத்து அடிக்குது காத்து
ஹே உலுக்கி உலுக்கி
முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்கடா

அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே

அட வீதி பத்தாதே|
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே

College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே

 Raaja
பாடல் காட்சிகளையோ,  பாடல் வரிகளின்  அதிகாரப்பூர்வ (!) காணொளியையோ காண  இங்கே செல்லலாம்.

பிழைகள், திருத்தங்கள், கருத்துகளுக்கு செவி மடுக்க எப்போதும்போல ஆர்வத்தோடு உள்ளோம்.

நன்றியோடு,
இசைப்பா குழுவினர்

Raaja+Gautham

பெண்கள் என்றால் …

வணக்கம்.

நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது ஐந்தாம் பாடல்.

NEPஇதுவும் ஒரு காதல் சோகப்பாடல்தான். ஆனால் இது  ஒரு ஆணுக்கு! சாதாரண, இயல்பான வார்த்தைகளில் எழுதப்பட்ட இப்பாடல் ராஜாவின் இசைக்குள் ஒரு புதுவடிவம் பெறுவதாகப் படுகிறது. Rock Band வகை இசையாக மிரட்டும் பாடல் இது. கிடாரின் ஒலி முற்றிலும் வித்தியாசமாக சரணத்தின் ஒவ்வொரு வரியிலும்  பாடகரைத் தொடரும். அதிலும் கிடார் ஓய்ந்த ஒரு இடத்தில் பியானோ-வின் டச் இருக்கும்.. அதுதான் ராஜா டச்! இதுவும் இதே ஆல்பத்தில்  யுவன் ஷங்கர் ராஜா பாடிய மற்றுமோர் பாடல்.  பாடலைக் கேளுங்கள். வேறென்ன?

படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா?

பெண்களின் காதலின் அர்த்தமினி
புல்லின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப்போகும் தன்னாலே

காதல் வரும் முன்னாலே ஓ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஓ ஹோ

என்ன சொல்லி  என்ன பெண்ணே  நெஞ்சமொரு காத்தாடி
தத்தி தத்தி  உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா?

இதற்கு தானா ஆசை வைத்தாய்?
இதயம் கேட்குதே!
இவளுக்காக துடிக்க வேண்டாம்
என்று சொல்லுதே!

மதிகெட்ட என்னிடம்  மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த  பெண் இவள் என்றது

தீயை போன்ற பெண் இவள்      என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பில் செய்த ஆயுதங்கள்  பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

(பெண்கள் என்றால்……)

 இசைப்பா +

 இளையராஜா அவர்களுக்கு பத்ம பூசன் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்து…சாய்ந்து…

வணக்கம்.

நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது நான்காம் பாடல்.

ஒரு இனிய காதல் பாடல். இளையராஜாவின் காதல் பாடல்கள் பற்றி எழுதத் தொடங்கினால், எழுதிக்கொண்டே போகலாம். அதேநேரம் கேட்கையில் உள்ளம் மயக்கும் பாடல்கள் பல திரையில் காட்சியமைப்பில் மட்டரகத்தில் அமைந்திருப்பது ராஜாவின் இசையில் வருத்தம்கொள்ள வைக்கும்.

NEPஅதனால்தான் கௌதம்+ராஜா கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்து வரவேற்றார்களோ தெரியவில்லை. அழகியலான காட்சிகளை எடுப்பதில் கௌதமும் பேர் வாங்கியவர்தான். ஆகவேதான் இப்படத்தின் பாடல்களின் காட்சியமைப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக இப்பாடலின் இடையிசை மிக நேர்த்தியாக  இசையோடு இயைந்த காட்சிகளால் சூழப்பட்டிருக்கும். அதிலும் துவக்கத்தில் கிடாரின் மெல்லிய மீட்டலின் தொடர்ச்சியாக எழும் வயலினுக்குள் கரைவதைத் தடுக்க முடியாது. இந்த பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இளையராஜா இசையில் யுவன் பாடியதுதான். இந்த பாடலை இன்னும் சிறப்பாக பாடியிருக்கலாம் என்கிறபடியோ, யுவன் சரியாகவே பாடவில்லை என்கிறபடியோ கருத்துகள் வந்தன. அதில் எந்தளவு சரி என்பது உங்கள் ரசனைக்கு உட்பட்டது. நீங்களே கண்டு உணர்ந்துகொள்ளுங்கள்.

படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா என்.எஸ்.கே

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் பொது அடடா ஹே

விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே

என் தாயைப் போல ஒரு பெண்ணை தேடி
உன்னைக் கண்டு கொண்டேனே

ஓஹோ!
என் தந்தை-தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்

அழகான உந்தன் மாக்கோலம்
அதைக் கேட்கும் எந்தன் வாசல்
காலம் வந்து இந்த கோலம் இடும்

உன் கண்ணை பார்த்தாலே 
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம்……!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே

கை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்கள்
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்

என் வீட்டில் வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
ஆள்யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்

(சாய்ந்து சாய்ந்து)

காட்சிகளை விட அழகியலாய் வரிகளோடு பாடல்:

இசைப்பா+

பாடகி ரம்யா என்.எஸ்.கே, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் பேத்தி ஆவார்.

இன்னும் இன்னும் தொடரும்… உங்கள் திருத்தங்களை, கருத்துக்களை கூறலாம்.

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது!

வணக்கம்.

இன்று இடம் பெற்றிருக்கும் பாடல் பலருடைய மனம் கவர்ந்த பாடல்களுள் ஒன்று. இந்த நேரத்தில் பரவலான கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கும் தங்க மீன்கள் படக்குழுவினரின் முதல் படைப்பு கற்றது தமிழ். படத்தில் இடம்பெற்ற மெலடி வகைப் பாடல் ஒன்றுதான் இங்கே. நா. முத்துக்குமார் வரிகளில் யுவன் இசையமைத்துப் பாடியிருக்கும் இந்த பாடல் ரொம்பவே அழகியலான காட்சியமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பாடல். காட்சிகளை உணர்ந்து எழுதிய வரிகளுக்கு குந்தகம் செய்யாத காட்சியமைப்பு கொண்ட சில பாடல்களுள் இதுவும் ஒன்று. 1நா.முத்துக்குமார் + யுவன் ஷங்கர் ராஜா  கூட்டணிக்கு இதுதான் முதல் படமா? எனத் தெரியவில்லை. ஆனால் இப்படத்திற்கு பின்னர் நா. முத்துக்குமார்+யுவன் கூட்டணிக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூடியது உண்மை.

பாடலின் துவக்கம் இசையிலும், காட்சியிலும் அத்தனை சிறப்பாக உள்ளது. அதிலும் ஆங்காங்கே மழைத்தூறலின் உற்சாகத்தைத் தரும் வகையில் அமைந்த

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

என்ற வரிகள் அத்தனை பாந்தமாகப் பொருந்துகின்றன. வரிகளை இரசியுங்கள். காட்சிகளில் கரையுங்கள்.

படம் : கற்றது தமிழ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் : நா.முத்துகுமார்
*******************************

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது.
உன் துயரம் சாய என் தோள் உள்ளது.
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை!
யார் என்ன சொன்னால் என்ன? அன்பே!
உன்னோடு நானும் வருவேன்!

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே, வரப்பென்றும் அழியாதடி!
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே, கண்ணாடி மறக்காதடி!
மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம்,
உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா!
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே!
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா!

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்.

(உனக்காகத்தானே)

 நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே,  நினைவென்றும் முடியாதடி!
நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே, நிஜமென்றும் அழியாதடி!
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா!
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா!
நீயின்றி என் வாழ்க்கை பழுதல்லவா!

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்.
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்.

(உனக்காகத்தானே )

பாடல் மட்டும் 

பாடலோடு இயைந்த காட்சிகளும்

யுவன்இன்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். அவருக்கு இசைப்பாவின் வாழ்த்துகள்.

இசைப்பா +

யுவன் இதுவரை 100 படங்கள் இசையமைத்துள்ளார்.

பாடல் குறித்த உங்கள் கருத்துகள், திருத்தங்கள், எதுவானாலும் பகிரலாம்.

 இதே கூட்டணியின் தங்க மீன்கள் படப்பாடல்கள் முழுமையாக.

நா.முத்துக்குமார் பாடல்கள்- இசைப்பாவில்
யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள்- இசைப்பாவில்

தங்கமீன்கள் !

♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯ இசைத் தேனைப் பருக இச்சை ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯

வணக்கம்.

இவ்வளவு விரைவாக ஒரு படத்தின் பாடல் இடம்பெறுவது இசைப்பாவில் இப்போதுதான். இப்படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு முன்னமே இருந்தது. கேட்டவுடனே ஈர்த்துவிட்டபடியால் அண்ணன் உடனே இசைப்பாவில் வெளியிட விருப்பங்கொண்டுவிட்டார். இரவோடு இரவாக பதிந்த இப்பாடல்கள் என் செவியை இன்று காலைதான் (01-05-2013) தொட்டன.

Thanga-Meengal-2இப்படத்தின் வெற்றிக்கான முதல் அடியை நா.முத்துக்குமார் எடுத்துவைத்துவிட்டார். பாடல்களில் யுவனும் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். காட்சியமைப்புகள், பின்னணி இசையைப் பொறுத்து படத்தின் வெற்றி அமையலாம். அதெல்லாம் இருக்கட்டும். பாடல்களின் வரிகள் உங்களுக்காக – இணையத்திலேயே இது தான் முழுமையான  முதல் பதிப்பாக இருக்கும் !

படம்: தங்கமீன்கள்
பாடல்கள்: நா.முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

  •  குறிப்பு: ஒவ்வொரு பாடலின் துவக்கத்திலும் இயக்குனர் ராம் பேசியிருக்கிறார். அவற்றையும் அப்படியே தந்துள்ளோம்.
  • முதல் பாடலிலேயே, மனதை உருக்கிப் பிழியும் இசையும், வரிகளுமாய் பாடல் இதயத்தைக் கவ்விக் கொள்கிறது. இயல்பாக நம்மை ஈர்க்கக் கூடிய வல்லமை சில பாடல்களுக்கு மட்டும்தான் இருக்கும். என்னைப் பொறுத்தவரையில், இப்பாடலும் அவ்வகையே. உறுத்தாத இசை, தெளிவான குரல், இனிய வரிகள் என இது ஒரு உற்சாகப்பாடல்.

‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று.

images (2)

பாடல் – 1

பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி – அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !

விடியோ பாடல் முழுவதும்

மேலும் பாடலை பற்றி இயக்குனர் ராம் :

”ஆனந்த யாழ் எளிமையே அழகு”

மிக எளிமையாக வேண்டும் என யுவனிடம் கேட்டு வாங்கிய பாடல். மிக எளிமையான வரிகள் வேண்டும் என முத்துவிடம் கேட்டு வாங்கிய வரிகள்.
மிக எளிமையாக நீண்ட ஷாட்களால் எடுக்கவேண்டும் என அர்பிந்துவிடம் சொல்லி எடுத்தப் பாடல். மிக எளிமையாக அதிக வெட்டுகள் இல்லாமல் வேண்டும் என ஸ்ரீகர் பிரசாத்திடம் வெட்டி எடுத்தப் பாடல்.

உங்கள் அனைவருக்கும் பிடித்தபின் இன்னமும் நன்றாய் புரிகிறது,
எளிமையே அழகு, எளிமையே கவர்ச்சி, எளிமையே அன்பு.

அச்சன்கோவிலின் பெருமழையும் சிறுபுல்லும்
சரிசமமானவை. அவற்றின் எளிமையே அதன் அழகு.

ஆனந்தயாழைப் பாடல் குறித்து நேரம் கிடைக்கையில்
மேலும் எழுதுகிறோம்.

பிரியங்களுடன் ராம்.
(facebook 17/08/2013)

 ‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

  • வழக்கமான திரைப்பாடலுக்கான சமரசங்களையும் கடந்து, ஒரு கவிதைக்கான வனப்பு இருக்கிற பாடல்.

அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்க்கை
ஒன்றும் தோழன் இல்லை

thangameengal

பாடல் – 2

பாடியவர்: ராகுல் நம்பியார்

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…

அடி என் கண்ணின் இரு கருவிழிகள்,
உன் முகத்தை தேடுதடி…
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி…

என் காட்டில் ஒரு மழை வந்தும்,
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே,
இடி மின்னல் வந்து காடே எறிந்தடி!

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…

அலைந்திடும் மேகம் அதை போல,
இந்த வாழ்க்கையே காற்றின் வழியில் போகின்றோம் !
கலைந்திடும் கோலம் என்ற போதிலும்,
அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம் !

உயிரே உன்னை பிரிந்தேன்,
உடனே நானும் இறந்தேன்…
உடல் தான் அங்கு வாழும்
நீதானே – எந்தன் உயிரே !

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…

மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த
பலர் ஓடுவர்
இலைகள் வீழ்ந்தால் சருகாகும் !
வறியவன் வாழ்க்கை, இலை போல என்ற போதிலும்
சருககுகள் ஒரு நாள் உரமாகும்

உயிரே உன்னை பிரிந்தேன்,
உடனே நானும் இறந்தேன்…
உடல் தான் அங்கு வாழும்
நீதானே – எந்தன் உயிரே !

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…

 

‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

  • இரண்டரை நிமிடப் பாடல் என்றாலும் வலி சொல்லும் வார்த்தைகள் அடங்கிய பாடல். வார்த்தைகளின் காட்சியமைப்பு குறித்த எண்ணம் மேலோங்குகிறது.  

மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது
என்று சொல்லிவிடக்கூடாது என்ற வாழ்கையைதான்
அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.

images (3)

பாடல் – 3

பாடியவர்: அல்போன்ஸ் ஜோசப்

யாருக்கும் தோழனில்லை தோழனில்லை
வாழ்க்கை தோழனில்லையே!
கேட்ட போது கேட்கும் யாவும்
வாரி வாரி தந்திட !

கடந்து வருவேன் கண்மணி…

பனியினுள் நனைந்த உருவம் பார்க்கிறேன்.
தொடர்ந்து துரத்தும் துயரங்கள்
மிரட்டுதே வேட்டையாடி,
கூறு போட்டு போகுதே !

செல்ல பொம்மை, வெல்லக் கட்டி
உன்னை காக்கும் தெய்வமே !

தொட்டு வீசும் பட்டு தென்றல்,
நெஞ்சை முட்டும் மேகமே,

சொன்ன தேதி சொன்ன நேரம்,
உன்னை வந்து சேருவேன் !
இல்லை என்று ஆகும் போது,
என்னை நானே கொல்லுவேன் !

‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

  • துள்ளிசையில் வருடும் பாடல். குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை சற்றும் கலையாமல் பதிவு செய்திருக்கிறார் கவிஞர். வழக்கமான இசைதான் என்றாலும். பாடலுக்கேற்ற இசை. ஆங்கில வார்த்தைகள் அதிகம்தான் என்றாலும் உறுத்தவில்லை.  

அப்பாக்களும் பிள்ளைகளும்
போக மாட்டேன் என்று அடம்பிடிக்கும்
ஒரே இடம் பள்ளிக்கூடம் மட்டும் தான்.

பாடல் – 4

பாடியவர்கள்: சிறுமிகள் சாதனா, சஞ்சனா

ஓ ஓஓ ஓயே
ஓ ஓஓ ஓயே
First last Pass fail
Homework Exam QuestionPaper
யாரு கண்டுபிடிச்சா ?

ஓய் ஓஓய் ஹூ

மக்கு பிளாஸ்திரி stupid idiot
Standup on the benchசு
எல்லாம் யாரு கண்டுபிடிச்சா ?
ஓய் ஓஓய் ஹூ

Monday Tuesday Wednesday Thursday Friday வரைக்கும்
ஸ்கூல்லு வைக்க யாரு கண்டுபிடிச்சா ?

ஸ்கூல் போக தான் பிடிக்கல
எக்ஸாம் எழுதவும் பிடிக்கல
எந்த பாடமும் படிக்கல
நா முட்டிப் போடப் போறேன்

Night முழுவதும் படிக்கல
நா கிளாஸ்சு வந்ததும் மறக்குறேன்
rightடு wrongகு ஏதும் முடிக்கல
நா failலு ஆகப் போறேன்

ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky
ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky

Science சு Mathsசு SocialScienceசு சப்ஜெக்ட்டெல்லாம்
இங்க்லீஷ்ல படிக்க யாரு கண்டுப்பிடிச்சா ?
ஓ காட் யாரு கண்டுப்பிடிச்சா ?

தமிழில பேசம் பசங்கள பார்த்து
தலையில கொட்டி பைன்-னப் போட
யாரு கண்டுபிடிச்சா ?
ஓ காட் யாரு கண்டுபிடிச்சா ?

Games ஆடவும் டைம் இல்ல
Cartoon பார்க்கவும் டைம் இல்ல
Exam நடக்குது டைம் இல்ல
நான் என்ன பண்ணப் போறேன் ?

feesசு கட்டி தான் படிக்கிறேன்
நான் fuseசு ஆகி தான் நிக்குறேன்
Waste paperரா questionந
நான் தூக்கிப் போடப் போறேன்

ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky
ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky

butterflyயா கயத்துல கட்டி
freedom பத்தி பாடம் நடந்த
யாரு கண்டுபிடிச்சா ?
ஓ காட் யாரு கண்டுபிடிச்சா ?

செங்கல் மேல செங்கல் அடுக்கி
Studentsகள பொங்கல் வைக்க
யாரு கண்டுபிடிச்சா ?
ஹே காட் யாரு கண்டுபிடிச்சா ?

பாட்டி கதையதான் கேக்கல
friend கூடவும் பேசல
நண்டு கூடவும் நடக்கல
நான் bend கழண்டுப் போறேன் ?

இந்த schoolலையும் பிடிக்கல
அட எந்த schoolலையும் பிடிக்கல
விட்டுவிடுங்கடா படிக்கல
நான் failலு ஆகப் போறேன்

ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky
ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky

‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

தங்கமீன்கள் இசை வெளியீட்டு விழாவிலிருந்தும், trailerலிருந்தும் சில துளிகள். கண்டு மகிழுங்கள்

இன்று இன்னும் எத்தனை முறை கேட்கப் போகிறேன் என்றும், இனியும் எவ்வளவு முறை கேட்கப் போகின்றன என்றும் தெரியவில்லை. அத்தனை இன்பம் பயக்கிறது பாடல்கள்.

கடைசியாக சில வார்த்தைகள்:

இசைப்பாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு தேடல்களினாலும், உங்களின் பகிர்வுகளினாலும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மிக்க நன்றி.

youtube தளத்தில் இன்னும் பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. வெளியானவுடன் வழக்கம்போல் (இசைக்) காணொளி (video) வெளியாகும்.

பதிவுகளின், தளத்தின் குறைகளைச் சுட்டுங்கள். மாற்றங்களுக்கு தயாராக உள்ளோம். பிடித்திருந்தால் பிறருக்கும் பகிருங்கள். உங்கள் விருப்பங்களையும் சொல்லுங்கள். நன்றி. இசையோடு எப்போதும் இணைந்திருங்கள்.

அழகு குட்டிச் செல்லம் !!

இசையால் இதயம் தொட்ட வணக்கம்.
தொடர்ந்து பிப்ரவரி மாதப்பாடல்கள் பலரையும் ஈர்த்து வருகிறதை அறிகிறபோது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சி இன்றும் தொடரட்டும்.

இந்த பாட்டு அன்பின் வெளிப்பாடு. மழலைகளின் மீதான காதலின்,அன்பின் வெளிப்பாடு. வஸந்த் அவர்கள் இயக்கிய சத்தம் போடாதே என்கிற படத்தில் இடம்பெற்ற நாயகன் அறிமுகப்பாடல். படத்திற்குப் படம் பாடல்களைப் படமாக்குவதில் புதுமை செய்யும் இயக்குனர் இதில் ரொம்பவே மெனக்கட்டு அழகியலைக் கொண்டுவந்திருக்கிறார்.

முற்றிலும் 3-4 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாடல் நெடுக வெவ்வேறு உணர்ச்சிகளை அவர்கள் முகங்களின் வாயிலாக அழகாகப் பதிவு செய்திருப்பது உண்மையிலேயே மனதிற்கு நெருக்கமான ஒரு காட்சியமைப்பு.

நா. முத்துக்குமார்-யுவன் கூட்டணியில் வஸந்த்தின் இயக்கத்தில் உங்கள் மனதையும் கொள்ளை கொள்ள ஒரு பாடல் ஷங்கர் மகாதேவனின் மயக்கும் குரலில்.

எந்த   நேரம் உன்னை  பார்த்தாலும் உன் பொன் சிரிப்பு மனதை கொள்ளை கொள்ளும் !!!
மலரின் சிரிப்பு கூட வாடி விடும்!  உன் பொன் சிரிப்பு -வாடி இருக்கும் என் மனதையும் கடத்தி செல்கிறதே …!!!
உன் தீண்டலில் என் வலி மறக்கிறேன் !
உனது அழுகை கூட இனிமையே..!!!
எந்தவித கவலையும் இன்றி இருக்கிறாயே!!! எனக்கும் உன்னைப் போல் இருக்க ஆசை !!!
நீ யோசிக்கிறாயோ? அமைதியாக இருக்கிறாய் ..
எந்த மொழியில் இருக்கும் உன் யோசனை ?????
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டுகிறாயே சின்னக் கண்ணனே …புன்னகை  மன்னனே !!!
உன் சிரிப்பில் விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்!

முத்து யுவன் !
முத்து யுவன் !

பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்.
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

அழகு குட்டிச் செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி?

அழகு குட்டிச் செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை?
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை?
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண..!!

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரசித்திருப்பீர்கள் என் நம்புகிறோம். உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும், விருப்பங்களையும் வரவேற்கிறோம்.

தாக்குதே! கண் தாக்குதே!

இசை வணக்கங்கள்!

இந்த பிப்ரவரி முழுவதும் மென் உணர்ச்சிகளைக் கொண்ட பாடல்களைத் தருவதாக சொல்லியிருந்தோம். ஆதரவுகளுக்கு நன்றி. இதோ அடுத்த பாடல். இந்த பாடலின் மூலமாக இசைப்பாவிற்குள் யுவன்ஷங்கர்ராஜா அடியெடுத்து வைக்கிறார்.

கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல் இது. யுவன்-வாலி கூட்டணியில் சிறப்பான பல பாடல்கள் வந்திருக்கின்றன. இருப்பினும் இது கொஞ்சம் வித்தியாசமான கூட்டணி. பாடலும் வெளியான சமயத்தில் பலரின் விருப்பபாடலாக கட்டாயம் இருந்திருக்கும்.

யுவனுக்கு இதைவிட சிறப்பான அறிமுகமும் கொடுத்திருக்கலாம்தான்! அதன் பின்னணியில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது. அதை அறிய இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்! இந்த பாடலைப் பாடியதும் யுவன் என்பதால் அறிமுகம் சிறப்பாகவே இருப்பதாக கருதுகிறோம்.

ஆண்-பெண் இடையேயான நட்பை எளிய வார்த்தைகளில் கொடுத்திருக்கிறார் வாலி. ஒரே உறுத்தல் சில ஆங்கில வார்த்தைகள் உள்ளன. அதை அப்படியே தந்துள்ளோம். மற்றபடி கவிஞரின் அனுபவத்தின் வெளிப்பாடு பாடலில் புலனாகும்.

இந்த பாடலில் குறிப்பிட வேண்டிய இன்னொரு சிறப்பம்சம் இதன் காட்சியமைப்பு. பிரமாதமாக இருக்கும்.

பாடல்: தாக்குதே! கண் தாக்குதே!
படம்: பாணா காத்தாடி.
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

தாக்குதே! கண் தாக்குதே!
கண் பூக்குதே! பூ பூக்குதே!
பூத்ததை தான் பார்த்ததே!
பூங்காத்ததை கை கோர்த்ததே!
கோர்த்த கை பூ ஏற்றதே!
தன் வார்த்தையில் தேன் வார்த்ததே!
வார்த்தையில்தான் பார்வையில்தான் வாய்க்கலாம் ஓர் வாழ்க்கையே!
யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ?

(தாக்குதே..)

*******

பார்த்தபொழுதே பூசல்தான்!
போகப்போக ஏசல்தான்!
பூசல் தீர்ந்து, ஏசல் தீர்ந்து
இன்று Happy!
வேட்டை மொழிதான் ஆண்மொழி
கோட்டை மொழிதான் பெண்மொழி
ஒன்றுக்கொன்று workout ஆச்சே,
நல்ல chemistry!
வங்கக்கடலின் ஓரத்தில்,
வெய்யில் தாழ்ந்த நேரம் பார்த்து,
நேசம் பூத்து, பேசுதே ஏதோ ஏதோதான்…!

(தாக்குதே…)

****************

Cell-ல் தினமும் chatingதான்!
Coffee shop-ல் meetingதான்!
ஆனபோதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை!
பஞ்சும் நெருப்பும் பக்கம்தான்!
பற்றிக்காமல் நிற்கும்தான்
பூமியின்மேல் இவர்களைப் போல் பார்த்ததில்லை!
தீண்டும் நிழலில் தீண்டலாம்!
தீண்டும் பொழுதும் தூய்மை காக்கும்
தோழமைக்கு சாட்சியே வானம் பூமிதான்!

(தாக்குதே..)

வாலி  யுவன்இசைப்பாவின் வெற்றிக்கு துணைநிற்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி. தொடர்ந்து சிறப்பாக இயங்க உங்கள் ஆதரவு தேவை. ஆதரவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது பங்களிப்பாகவோ, பகிர்வாகவோ, மறுமொழியாகவோ, பிழைகளைச் சுட்டியோ… எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் விருப்பப் பாடல்களையும் தெரிவிக்கலாம். தொடர்ந்து சிறப்பான பாடல்களை ரசிக்கத் தயாராயிருங்கள்!