நீ யாரோ ? – கத்தி

இசை வணக்கம்

கத்தி படத்திலிருந்து புத்தம் புதிய பாடல். யேசுதாஸ் திரும்பவும் பாட வந்துள்ளார் என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம், ஆனாலும் சோக பாடல்களாக படுகிறார். அன்புள்ள அப்பா அப்பா – சிகரம் தொடு

இருந்தும் அவரது குரலில் அப்படியே உள்ளது, ‘ஊர தெரிஞ்சுகிட்டேன், உறவை புரிஞ்சுக்கிட்டேன்’ல இருந்த சோகமும், ரணமும் குரலில் இன்னும் எதிரொலிக்கிறது. அடாபுடா என்று மற்ற பாடல்கள் ஆர்பரித்தாலும், இந்த பாடலின் இசை சோக ரசம் ததும்பும், மெல்லிய வாத்தியமைப்பு. வாழ்த்துக்கள் அநிருத்

katthi

நாயகனை புகழும் வரிகள் தான், விஷ்வால்ஸ் பார்த்தால் தான் முழு வீச்சும் தெரியும் என நம்புகிறேன். யுகபாரதியின் வரிகள், எந்த வித அல்டாப்பும் இல்லாமல், இயல்பாக உள்ளது.

படம்: கத்தி
பாடல்: யார் பெற்ற மகனோ
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: யேசுதாஸ்

யார் பெற்ற மகனோ? – நீ
யார் பெற்ற மகனோ?
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன் !

ஊர் செய்த தவமோ? – இந்த
ஊர் செய்த தவமோ?
மண்ணை காபற்றிடும்
இவன் ஆதி சிவன்!

அடி வேர் தந்த
வேர்வைக்கு ஈடில்லையே!
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில் நீ இல்லையே!

யாரோ யாரோ…
நீ யாரோ?…
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ…
நீ யாரோ?…
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ…

கை வீசும் பூங்காற்றே
நீ எங்கு போனாயோ?
யாரென்று சொல்லாமல்
நிழல் போல நடந்தாயோ?

முறை தான்
ஒரு முறை தான்
உன்னை பார்த்தால்
அது வரமே

நனித்தால்…
உன்னை நனித்தால்
கண்ணில்…
கண்ணீர் மழையே வருமே

யாரோ யாரோ…

நீ யார் பெற்ற மகனோ…

மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சீக்கிரம் இணையலாம்

அன்புள்ள அப்பா அப்பா – சிகரம் தொடு

இசைப்பா ரசிகர்களுக்கு வணக்கம்.

மூன்று தலைமுறையாக இவரது குரல் நம்மை வசீகரத்தி வருகிறது. அப்பியாஸம் / பயிற்சியின் பயன் இதுவே… யேசுதாஸ் ! (இசைப்பாவில் இவரது அறிமுகம் இதுவே) அப்பாவை பற்றிய பாடல்கள் சமீப காலத்தில் அதிகம் வெளிவரத் துவங்கியுள்ளன. அம்மாவிலிருந்து, தமிழ் சினமா அப்பா செண்டிமெண்ட் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. சிகரம் தொடு படத்தில், தந்தை வேடத்தில் சத்தியராஜ் நடக்கிறார். நம் அப்பா போல தோன்றும் ஒரு அன்பான முகம், உணர்ச்சகள், செயல்ப்பாடுகள். இமானின் இசைக் கோர்புகள் நாளுக்கு நாள் சோபித்து விளக்கிவருகிறது. எப்பொழுதும் போல அவருடன் யுகபாரதி சேர்ந்து, உணர்ச்சி பிரவாகம் ஒன்றை உற்பத்தி செய்துள்ளார்.

தந்தைகள் பலவிதம். நம் தந்தை நமக்கு நண்பனாக, நம் வாழ்வின் துணைக் கோளாக இருந்து, நமது ஆசைகளை, நமது கனவுகளை அரவணைக்கும் போது : வாழ்க்கை எந்நேரமும் வசந்தமாக மிளிர்கிறது.


படம் : சிகரம் தொடு
பாடல் : அன்புள்ள அப்பா அப்பா…
இசை : இமான்
பாடலாசிரியர் : யுகபாரதி
பாடியவர் : யேசுதாஸ்

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை
மண் மேலே

அன்புள்ள அப்பா அப்பா…

அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன்
அன்பிலே

எனக்கெது தேவை
உலகிலே
கொடுத்திடுவாய் நீ
முதலிலே

வேண்டாமலும் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலேயே

அன்புள்ள அப்பா அப்பா…

மாதக் கணக்கில்
தாயும் சுமத்து
வந்தது தான்
இவனது உயிரே

காலம் முழுக்க
என்னை சுமந்து
காத்திருக்கும் உனக்கு
இல்லை நிகரே

தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் என்னை சுமந்தே
நடைப் போட்டாய்
வந்தாயே நீ
என் வரமாய்

அன்புள்ள அப்பா அப்பா…

தோழனென நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட
வருவாய்

சோகமெதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையை எனக்கென
தருவாய்

கண்ணிமையில் என்னை
நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ
என் நிழலாய்

அன்புள்ள அப்பா அப்பா…

இன்னுமொரு இனிய பாடலுடன், இணைய வழி சீக்கிரம் சந்திப்போம்.

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!

இசையில் இணைந்தவர்களுக்கு,

இனிய வணக்கங்கள். இவ்வருடம் தொடர்ச்சியாக இயங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். பலரது ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. இனியும் தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வருடம் நான் எனக்கான ‘கோட்டா’வை சற்று வித்தியாசமாக தொடங்க திட்டமிட்டிருந்தேன். தொடர்ந்து எதிர்பாராத சூழ்நிலைகளினால் எனது பாடல்கள் தள்ளிப் போகின்றன.

இன்று பிரபல பின்னணிப் பாடகர் யேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள். இதற்காக இசைப்பாவில் என்ன பாட்டு போடலாம்? என அண்ணைக் கேட்டால் நீயே ஒரு பாடலை தேர்வு செய்து பதிவாக்கு என்றார். என்னிடம் சொற்பமான யேசுதாஸ் பாடல்கள்தான் இருக்கின்றன. அதில் அனைவருக்கும் பிடித்தமான (எனது கருத்து!) பாடல்தான் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.

வாலி-ராஜா!இளையராஜா-வாலி கூட்டணியில் பிறந்த பற்பல இனிய பாடல்களில் இதுவும் ஒன்று. ராஜா அவர்கள் பாடலை இரண்டாகப் பிரித்து இசையால் இணைக்கிறார்.

குறிப்பாக தபேலாவின் ராஜ்ஜியம் முடிந்த அடுத்த நொடியே ட்ரம்ஸ் இயங்கி உயிர் கொடுக்கிறது. ரொம்பவே புத்துணர்ச்சியான பாடல்.

வாலி மற்றும் யேசுதாஸ் ஆகிய இருபெரும் கலைஞர்களுக்கும் இது இசைப்பாவில் முதற்பாடல். இன்னும் நிறைய வரும். தொடர்ந்து இனிய பாடல்கள் உங்கள் இதயத்தையே வருடும்.

பரவசத்திற்கு தயாராகுங்கள்.

பாடல்: பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!

படம்: வருஷம் 16

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்: யேசுதாஸ்.

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!

படைத்தவன் படைத்தான் அதற்காகத் தான்!

நான்தான் அதன் ராகம் தாளமும்

கேட்டேன் தினம் காலை-மாலையும்.

கோலம்….அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

*****************************************

தூரத்தில் போகின்ற மேகங்களே!

தூறல்கள் பூமியில் போடுங்களேன்!

வேர் கொண்ட பூஞ்சோலை

நீர் கொண்டு ஆட!

ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே!

சிறகுகள் எனக்கில்லை தாருங்களேன்

ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட!

பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்

பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்

ஏதோ ஒரு போதை…….மனம் கொண்டாடுதே!

***********************************************

பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்

நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்

நூலிழைபோல் இங்கு நெருங்கிய இதயங்கள்

பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்!

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

சிந்தை இனித்திட உறவுகள் மேவி

பிள்ளைகள் பேணி வளர்ந்ததிங்கே!

மண்ணில் இதை விட சொர்க்கம் எங்கே?

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை

வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை -என்றும்

வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.

இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க

இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.- இசைப்பா குழுமம்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.- இசைப்பா குழுமம்!

இசையில் நனைந்தவர்களுக்கு, இதுபோல சிறப்பான பாடல்களைத் தொடர்ந்து தர எங்களுக்கு விருப்பம். உங்கள் கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றன.  தகவல் பிழைகள், புதிய யோசனைகள், புதிய பங்களிப்புகள், நேயர் விருப்பம் ஆகியன இருப்பின் மறுமொழியாகப் பதியலாம்.