தங்கமீன்கள் !

♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯ இசைத் தேனைப் பருக இச்சை ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯

வணக்கம்.

இவ்வளவு விரைவாக ஒரு படத்தின் பாடல் இடம்பெறுவது இசைப்பாவில் இப்போதுதான். இப்படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு முன்னமே இருந்தது. கேட்டவுடனே ஈர்த்துவிட்டபடியால் அண்ணன் உடனே இசைப்பாவில் வெளியிட விருப்பங்கொண்டுவிட்டார். இரவோடு இரவாக பதிந்த இப்பாடல்கள் என் செவியை இன்று காலைதான் (01-05-2013) தொட்டன.

Thanga-Meengal-2இப்படத்தின் வெற்றிக்கான முதல் அடியை நா.முத்துக்குமார் எடுத்துவைத்துவிட்டார். பாடல்களில் யுவனும் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். காட்சியமைப்புகள், பின்னணி இசையைப் பொறுத்து படத்தின் வெற்றி அமையலாம். அதெல்லாம் இருக்கட்டும். பாடல்களின் வரிகள் உங்களுக்காக – இணையத்திலேயே இது தான் முழுமையான  முதல் பதிப்பாக இருக்கும் !

படம்: தங்கமீன்கள்
பாடல்கள்: நா.முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

  •  குறிப்பு: ஒவ்வொரு பாடலின் துவக்கத்திலும் இயக்குனர் ராம் பேசியிருக்கிறார். அவற்றையும் அப்படியே தந்துள்ளோம்.
  • முதல் பாடலிலேயே, மனதை உருக்கிப் பிழியும் இசையும், வரிகளுமாய் பாடல் இதயத்தைக் கவ்விக் கொள்கிறது. இயல்பாக நம்மை ஈர்க்கக் கூடிய வல்லமை சில பாடல்களுக்கு மட்டும்தான் இருக்கும். என்னைப் பொறுத்தவரையில், இப்பாடலும் அவ்வகையே. உறுத்தாத இசை, தெளிவான குரல், இனிய வரிகள் என இது ஒரு உற்சாகப்பாடல்.

‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று.

images (2)

பாடல் – 1

பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி – அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !

விடியோ பாடல் முழுவதும்

மேலும் பாடலை பற்றி இயக்குனர் ராம் :

”ஆனந்த யாழ் எளிமையே அழகு”

மிக எளிமையாக வேண்டும் என யுவனிடம் கேட்டு வாங்கிய பாடல். மிக எளிமையான வரிகள் வேண்டும் என முத்துவிடம் கேட்டு வாங்கிய வரிகள்.
மிக எளிமையாக நீண்ட ஷாட்களால் எடுக்கவேண்டும் என அர்பிந்துவிடம் சொல்லி எடுத்தப் பாடல். மிக எளிமையாக அதிக வெட்டுகள் இல்லாமல் வேண்டும் என ஸ்ரீகர் பிரசாத்திடம் வெட்டி எடுத்தப் பாடல்.

உங்கள் அனைவருக்கும் பிடித்தபின் இன்னமும் நன்றாய் புரிகிறது,
எளிமையே அழகு, எளிமையே கவர்ச்சி, எளிமையே அன்பு.

அச்சன்கோவிலின் பெருமழையும் சிறுபுல்லும்
சரிசமமானவை. அவற்றின் எளிமையே அதன் அழகு.

ஆனந்தயாழைப் பாடல் குறித்து நேரம் கிடைக்கையில்
மேலும் எழுதுகிறோம்.

பிரியங்களுடன் ராம்.
(facebook 17/08/2013)

 ‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

  • வழக்கமான திரைப்பாடலுக்கான சமரசங்களையும் கடந்து, ஒரு கவிதைக்கான வனப்பு இருக்கிற பாடல்.

அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்க்கை
ஒன்றும் தோழன் இல்லை

thangameengal

பாடல் – 2

பாடியவர்: ராகுல் நம்பியார்

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…

அடி என் கண்ணின் இரு கருவிழிகள்,
உன் முகத்தை தேடுதடி…
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி…

என் காட்டில் ஒரு மழை வந்தும்,
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே,
இடி மின்னல் வந்து காடே எறிந்தடி!

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…

அலைந்திடும் மேகம் அதை போல,
இந்த வாழ்க்கையே காற்றின் வழியில் போகின்றோம் !
கலைந்திடும் கோலம் என்ற போதிலும்,
அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம் !

உயிரே உன்னை பிரிந்தேன்,
உடனே நானும் இறந்தேன்…
உடல் தான் அங்கு வாழும்
நீதானே – எந்தன் உயிரே !

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…

மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த
பலர் ஓடுவர்
இலைகள் வீழ்ந்தால் சருகாகும் !
வறியவன் வாழ்க்கை, இலை போல என்ற போதிலும்
சருககுகள் ஒரு நாள் உரமாகும்

உயிரே உன்னை பிரிந்தேன்,
உடனே நானும் இறந்தேன்…
உடல் தான் அங்கு வாழும்
நீதானே – எந்தன் உயிரே !

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…

 

‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

  • இரண்டரை நிமிடப் பாடல் என்றாலும் வலி சொல்லும் வார்த்தைகள் அடங்கிய பாடல். வார்த்தைகளின் காட்சியமைப்பு குறித்த எண்ணம் மேலோங்குகிறது.  

மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது
என்று சொல்லிவிடக்கூடாது என்ற வாழ்கையைதான்
அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.

images (3)

பாடல் – 3

பாடியவர்: அல்போன்ஸ் ஜோசப்

யாருக்கும் தோழனில்லை தோழனில்லை
வாழ்க்கை தோழனில்லையே!
கேட்ட போது கேட்கும் யாவும்
வாரி வாரி தந்திட !

கடந்து வருவேன் கண்மணி…

பனியினுள் நனைந்த உருவம் பார்க்கிறேன்.
தொடர்ந்து துரத்தும் துயரங்கள்
மிரட்டுதே வேட்டையாடி,
கூறு போட்டு போகுதே !

செல்ல பொம்மை, வெல்லக் கட்டி
உன்னை காக்கும் தெய்வமே !

தொட்டு வீசும் பட்டு தென்றல்,
நெஞ்சை முட்டும் மேகமே,

சொன்ன தேதி சொன்ன நேரம்,
உன்னை வந்து சேருவேன் !
இல்லை என்று ஆகும் போது,
என்னை நானே கொல்லுவேன் !

‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

  • துள்ளிசையில் வருடும் பாடல். குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை சற்றும் கலையாமல் பதிவு செய்திருக்கிறார் கவிஞர். வழக்கமான இசைதான் என்றாலும். பாடலுக்கேற்ற இசை. ஆங்கில வார்த்தைகள் அதிகம்தான் என்றாலும் உறுத்தவில்லை.  

அப்பாக்களும் பிள்ளைகளும்
போக மாட்டேன் என்று அடம்பிடிக்கும்
ஒரே இடம் பள்ளிக்கூடம் மட்டும் தான்.

பாடல் – 4

பாடியவர்கள்: சிறுமிகள் சாதனா, சஞ்சனா

ஓ ஓஓ ஓயே
ஓ ஓஓ ஓயே
First last Pass fail
Homework Exam QuestionPaper
யாரு கண்டுபிடிச்சா ?

ஓய் ஓஓய் ஹூ

மக்கு பிளாஸ்திரி stupid idiot
Standup on the benchசு
எல்லாம் யாரு கண்டுபிடிச்சா ?
ஓய் ஓஓய் ஹூ

Monday Tuesday Wednesday Thursday Friday வரைக்கும்
ஸ்கூல்லு வைக்க யாரு கண்டுபிடிச்சா ?

ஸ்கூல் போக தான் பிடிக்கல
எக்ஸாம் எழுதவும் பிடிக்கல
எந்த பாடமும் படிக்கல
நா முட்டிப் போடப் போறேன்

Night முழுவதும் படிக்கல
நா கிளாஸ்சு வந்ததும் மறக்குறேன்
rightடு wrongகு ஏதும் முடிக்கல
நா failலு ஆகப் போறேன்

ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky
ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky

Science சு Mathsசு SocialScienceசு சப்ஜெக்ட்டெல்லாம்
இங்க்லீஷ்ல படிக்க யாரு கண்டுப்பிடிச்சா ?
ஓ காட் யாரு கண்டுப்பிடிச்சா ?

தமிழில பேசம் பசங்கள பார்த்து
தலையில கொட்டி பைன்-னப் போட
யாரு கண்டுபிடிச்சா ?
ஓ காட் யாரு கண்டுபிடிச்சா ?

Games ஆடவும் டைம் இல்ல
Cartoon பார்க்கவும் டைம் இல்ல
Exam நடக்குது டைம் இல்ல
நான் என்ன பண்ணப் போறேன் ?

feesசு கட்டி தான் படிக்கிறேன்
நான் fuseசு ஆகி தான் நிக்குறேன்
Waste paperரா questionந
நான் தூக்கிப் போடப் போறேன்

ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky
ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky

butterflyயா கயத்துல கட்டி
freedom பத்தி பாடம் நடந்த
யாரு கண்டுபிடிச்சா ?
ஓ காட் யாரு கண்டுபிடிச்சா ?

செங்கல் மேல செங்கல் அடுக்கி
Studentsகள பொங்கல் வைக்க
யாரு கண்டுபிடிச்சா ?
ஹே காட் யாரு கண்டுபிடிச்சா ?

பாட்டி கதையதான் கேக்கல
friend கூடவும் பேசல
நண்டு கூடவும் நடக்கல
நான் bend கழண்டுப் போறேன் ?

இந்த schoolலையும் பிடிக்கல
அட எந்த schoolலையும் பிடிக்கல
விட்டுவிடுங்கடா படிக்கல
நான் failலு ஆகப் போறேன்

ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky
ஓயே ஓஓ We want to fly
ஓயே ஓஓ where is the sky

‼ § ♪ ♫  ► ↔ ◄ ♪ ♫ § ‼

தங்கமீன்கள் இசை வெளியீட்டு விழாவிலிருந்தும், trailerலிருந்தும் சில துளிகள். கண்டு மகிழுங்கள்

இன்று இன்னும் எத்தனை முறை கேட்கப் போகிறேன் என்றும், இனியும் எவ்வளவு முறை கேட்கப் போகின்றன என்றும் தெரியவில்லை. அத்தனை இன்பம் பயக்கிறது பாடல்கள்.

கடைசியாக சில வார்த்தைகள்:

இசைப்பாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு தேடல்களினாலும், உங்களின் பகிர்வுகளினாலும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மிக்க நன்றி.

youtube தளத்தில் இன்னும் பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. வெளியானவுடன் வழக்கம்போல் (இசைக்) காணொளி (video) வெளியாகும்.

பதிவுகளின், தளத்தின் குறைகளைச் சுட்டுங்கள். மாற்றங்களுக்கு தயாராக உள்ளோம். பிடித்திருந்தால் பிறருக்கும் பகிருங்கள். உங்கள் விருப்பங்களையும் சொல்லுங்கள். நன்றி. இசையோடு எப்போதும் இணைந்திருங்கள்.