வெண்மதி வெண்மதியே

இசை வணக்கங்கள்,

ரசிக்கவும், மனதை இசையுடன் பின்னவும் பல பாடல்கள் நம் நினைவில் அழியாமல் இருக்கின்றது. இன்றும் என்றும் அந்த பட்டியலில் இந்த பாடலும் அனைவரையும் கவர்ந்த ஒன்று என்று நம்புகிறோம். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் திரைப்படமாய், வெற்றிப்பாதையுமாய் “மின்னலே” படம் ஆரம்பித்தது, பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.

வாலி ஹாரிஸ்மின்னலே படத்தில் அனைத்து பாடல்களும் மனதை கொள்ளை கொள்வதாக அமைந்தது. மேலும் வாலி , தாமரை, சி.எஸ்.அமுதன் அவர்களின் வரிகளும் இசையோடு கலந்து மனதை வருடிய ஜாலம் தான். இப்பதிவில் வாலி அவர்கள் எழுதிய “வெண்மதி வெண்மதி ” பாடலை பகிர இருக்கிறோம் .

ஊடல் சமயத்தில் அமையும் பாடல். சங்க காலத்தில் பெரும்பாலும் காதலி தான் தலைவனுக்கு தூது விடுவாள். இங்கோ நாயகன் அவன் கவலையை, மேகத்திடம் சொல்லி அழுகிறான். தன்னை போல மேகமும் தன் காதல் மேகத்தை பிறந்து நகர்ந்து சென்று கொண்டே உள்ளது எனக் கூட சொல்லலாம். சின்ன சின்ன வரிகளில் சிறப்பான சிலிர்ப்பான உணர்வுகளை கொண்டு வந்துள்ளார் வாலி.
தலைக்கு ஏறிய தலைவிப் பித்து :
எங்கும் அவளை காண்கிறான்.
எதிலும் அவள் அழகு, ஒளி பெறுகிறது.
எந்த அழகை, அழகிய செயலைக் கண்டாலும் அது அவள் வடிவம் கொள்கிறது !

மாதவன் இந்த பாடலுக்கு சரியான முக உணர்வுகளை சேர்த்திருப்பார். இரவுக்கு ஏற்ற இனிய குரல். ஹாரிஸ் இசை வசீகரிக்கும் பாடல்.

அவரின் பெயருக்கேற்ப என்றுமே ‘வாலி’பன் என்றே கூறலாம். உங்கள் செவி கேக்க பாடுங்கள். வரிகள் இதோ…

படம் : மின்னலே
பாடல் : வெண்மதி
பாடலாசிரியர் : வாலி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ரூப்குமார் ரத்தோட் , திப்பு 

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கும்
மேகத்துக்கும் சொல்லு….

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கும்
மேகத்துக்கும் சொல்லு….

வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் …
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே

உன்னாலே நெஞ்சில் பூத்தக் காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்…

(வெண்மதி……..)

ஜன்னலில் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி
அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே ….
ஆஹாஹா

தீப்பொறி எழ இரு விழிகளும்
தீக்குச்சியென என்னை உரசிட
கோடிபூக்களாய் மலர்ந்தது மனமே ….

அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே
அளந்து பார்க்கப் பல விழியில்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே …..

ஒ ஓ ஓ….
(வெண்மதி……)

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை
அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள்
நினைவினில் இருக்கும்

அதுபோல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில் ரத்த நாளங்கள்
ராத்திரி வெடிக்கும் …..

ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்துப் போ என் மனமே ….

ல ல லாஹி லா லா லேஹே லா லா…..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்தக்காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்.

இசைப்பா +

கவிஞரின் முதல் திரைப்படப்பாடல்: நிலவும் தாரையும் (அழகர் மலைக் கள்ளன்)

இசையுடன் வரிகளில் கலந்து நம்மையும் காதலின் இன்பத்துள் பயணம் செய்ய செய்தாரே என்று கூறுவேன் . வாலி மறையவில்லை அவரின் வரிகள் அவரை வாழ வைக்கிறது சொல்லால் கவியால் உயிரோட்டமாய் நடமாடிக்கொண்டு இருக்கும் “வாலி”பர். மறையா சாதனையாளருக்கு எங்கள் இரங்கல் .

இன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
இசைப்பா குழுவினர்

மேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540