உண்மை ஒரு நாள் வெல்லும் – லிங்கா

இசை வணக்கம்

லிங்காவின் ஒரே சோகப் பாடல், ஆனால் இசையும் வரிகளும் மிளிர்கிறது. தலைவனுக்கேது தாழ்வு ? அவன் தோற்றாலும், அதில் ஒரு உண்மை இருக்கும். இது என்றுமே ரஜினி படத்தில் வரும் ஒரு கட்டம். இதற்காக பல படங்களில் பாடலகள் உண்டு : பட்ச்ஷா, அண்ணாமலை, பாபா.. என் பாட்டில் நீள்கிறது.

சத்தியத்தின் சங்கமம் நாயகன், ஆனாலும் அவனை சூது கவ்வுகிறது. ஆகாச குரல் அவனை நோக்கி பாடினால் எப்படி இருக்கும், என வைரமுத்து படம் பிடித்துள்ளார். தண்ணீர் மீது அணைக் கட்டும் ரஜினி சாகும்போது/துவண்டு விழும் போது வரும் பாடல் இது என நம்புகிறேன்.

குழலும், வயலினும் குலைந்து சோகத்தில் சோபைப் பெறுகின்றன. மெல்லிய மெட்டுடில் கரைந்துள்ளர் ஹரிசரண். பல ரஹ்மான் பாடல்களின் சாயல் இதில் உள்ளது. வைரமுத்துவின் வாரத்தை ஜாலங்களில் மோனைகளும், ஏதுகைகளும் அட்டகாசம்! நல்ல சங்க பாடல்களை, பழமொழிகளை இலகுவாக கையாளுகிறார். கேளுங்கள்.

Lingaa music release

பாடல்: உண்மை ஒரு நாள் வெல்லும்.
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்.
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: ஹரிசரண்
படம்: லிங்கா

உண்மை ஒரு நாள் வெல்லும்.
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன்,
நீயே நீயே நீயேடா!
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்,
உண்மை மெதுவாய் பேசும்!
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே… கலங்காதே… கலங்காதே…
கரையாத… கலங்காதே… கலங்காதே…

ராமனும் அழுதான்…!
தர்மனும் அழுதான்…!
நீயே அழவில்லை,
உனக்கோ அழிவில்லை!

சிரித்து வரும் சிங்கமுண்டு.
புன்னகைக்கும் புலிகள் உண்டு.
உரையாடி உயிர்குடிக்கும்,
ஓநாய்கள் உண்டு!
பொன்னாடை போர்த்து விட்டு,
உன்னாடை அவிழ்ப்பதுண்டு!
பூசெண்டில் ஒளிந்துநிற்கும்,
பூநாகம் உண்டு.

பள்ளத்தில் ஓர்
யானை வீழ்ந்தாலும்,
அதன் உள்ளத்தை
வீழ்த்திவிட முடியாது!

உண்மை ஒரு நாள்…..

சுட்டாலும் சங்கு நிறம்
எப்பொதும் வெள்ளையடா,
மேன்மக்கள் எந்நாளும்
மேன்மக்கள் தானே!
கெட்டாலும் நம் தலைவன்
எப்போதும் ராஜனடா!
வீழ்ந்தலும் வள்ளல் கரம்
வீழாது தானே!
பொன்னோடு மண்
எல்லாம் போனாலும்
அவன் புன்னைகையை
கொல்லையிட முடியாது!

உண்மை ஒருநாள்….

இனிய பாடலுடன், இணைய வழி இணைவோம்.

காதல் கணவா உந்தன்… – கோச்சடையான்

இசை அன்பர்களுக்கு இனிய வணக்கம்.

இதோ ஒரு புத்தம் புதிய பாடல், ரஹ்மான் பாடல், சூப்பர் ஸ்டார் பாடல். இனிய பாடல், இலகும் பாடல். ஆமா கோச்சடையான் தான். வரும் வருமென்று, இறுதியில் பாடலும் வெளிவந்துவிட்டது. முப்பரிமாணம் கொண்ட படம். அதும் நம் பழைய தமிழ் மன்னர்கள் பற்றிய படம். இந்த பாடலில் இசைப்பாவில் அறிமுகமாகும் பாடகி வேறு யாரும் இல்லை, ரஜினி அவர்களின் அன்பு துணைவியார் -> லதா ரஜினிகந்த்.

ஆஹா என்ன ஒரு மென்மையான பாடல்… காதல் கணவனை நோக்கி பாடும் குரலில் : லதா ரஜினிகாந்த். உருகி உருகி மனைவி பாடும் / கொடுக்கும் சத்தியங்கள். நடு நடுவில் வரும் நாதஸ்வரம் நல்ல தேர்வு. இதுவரைக் கேட்டதில், இந்த ஆல்பத்தின் பெஸ்ட் பாடல் இது தான். மயங்கர்கரசி, சிவகாமி, பாண்டியன் குமாரி, குந்தவை.. என்று யார் பாடி, போருக்கு தலைவனை அனுப்பினாலும் சரியாக அமையும் என்று சொல்லலாம். ஆனால் ராணிகள் சமையலறையில் என்ன புதுமை செய்வார்கள் என்று வைரமுத்து அவர்களுடன் தான் கேட்க வேண்டும். அல்ல ஒரு சாமான்யமான குடும்ப பெண் பாடும் பாடலாகக் கூட இது அமையலாம். பொறுத்து இருந்து பார்போம்.

நண்பர்களின் கருத்துகள்

இசை இசைப்பது போலவே பாடப்படும் வரிகள் நெஞ்சை கொள்ளை கொள்கிறது. காதல் கொண்ட நாயகி தன் கணவனை கரம் பற்றி, எத்தருணத்திலும் கரம் விடமாட்டேன் என்று சத்தியம் செய்கிறாள், வைரம் போன்றுது தன் சத்தியம் என்கிறாள். அவனின் ரகசியங்களை அழகாக காப்பேன் என்கிறாள். காலம் மாறும் என்றாலும் என்றும் உறுதுணையாக இருப்பாள். தாய்க்கு தாயாக அரவணைத்தும் உயிருக்கு உயிராக அவன் கனவுகள் நிஜமாக தன்னை அர்ப்பணிப்பாள் என்று உருகுகிறாள். அவன் வாழ்வு வீழ்கையில் இவள் உயிர் தருவாள்…இவ்வகையாக தன் அன்பின் மேல் சத்தியம் செய்கிறாள். பாடலை திரும்பி  திரும்ப கேட்டு ரசித்தவண்ணமே இருக்கலாம். அவ்வுளவு அருமையான குரல் பாடியவருக்கு லதா ரஜினிகாந்த அவர்களுக்கு வாழ்த்துக்கள்

படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடல் : மன்னிப்பேன் சத்தியம்
பாடியவர் : லதா ரஜினிகாந்த

காதல் கணவா உந்தன்,
கரம் விடமாட்டேன்.
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே !

தாய் வழி வந்த எங்கள்
தர்மத்தின் வேலே.
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே !

ஒரு குழந்தை போலே,
ஒரு வைரம் போலே,
தூய்மையான என்
சத்தியம் புனிதமானது !

வாழை மரம் போல  என்னை
வாரி வழங்குவேன் !
ஏழைக்கண்ட புதையல் போல,
ரகசியம் காப்பேன் !

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்,
கண்-அவன் என்பேன் !
உனது உலகை எனது கண்ணில்,
பார்த்திட செய்வேன் !

மழை நாளில் உன் மார்பில்,
கம்பளி ஆவேன் !
மலைக் காற்றாய் தாலைக்கோதி,
நித்திரை தருவேன் !

காதல் கணவா..

உனது உயிரை எனது வயிற்றில்,
ஊற்றிக் கொள்வேன் !
உனது வீரம், எனது சோறும்,
பிள்ளைக்கு தருவேன் !

காலம் மாற்றம் நேரும்போது
கவனம் கொள்வேன்.
கட்டிலறையில் சமையலைறையில்
புதுமை செய்வேன்.

அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன்.
உன் ஆண்மை நிறையும்போது
உந்தன் தாய்போல் இருப்பேன்.

உன் கனவுகள் நிஜமாக,
எனையே தருவேன் !
உன் வாழ்வு மண்ணில் வீழ,
என்னுயிர் தருவேன் !

காதல் கணவா..

மேலும் இனிய மற்றும் புதிய படப்பாடல்களுடன் விரைவில் சந்திப்போம்