செல்பி புள்ள… – கத்தி

இனிய வணக்கம்.

கத்தி படத்தின் பாடல்கள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. முதலில் வெளிவந்த பாடலை கடைசியில் இங்கே பதிவு செய்கிறோம். விஜய் அவர்களே பாடிய பாடல். கார்கி அவர்களின் கலக்கல் வரிகள். ஆங்கிலத்தை அள்ளி தெளித்து, அனைவரையும் கவருவது என்ன வகை யுக்தியோ தெரியவில்லை. (எனக்கு இது சற்றும் பிடிக்கவில்லை)

Selfie – தன்னை தானே புகைப்படம் பிடித்துகொள்வது. போன வருடம் oxford dictionary, உலகில் மிகவும் பயன்படுத்தப்பட்ட வாரத்தை இது தான் என அங்கீகாரம் செய்தது. வெகுஜென பழக்கத்தில் வெகு பிரபலமான சொல்.

படத்தில் சம்பந்தமே இல்லாத இடத்தில் இந்த பாடல் வருகிறது. நாயகி காதலை சொல்கிறாள். அப்ப வருகிறது. இன்னும் சிறப்பாக யோசித்து, அருமையானதொரு melodyடியை தந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

பாடல் : Let’s take a selfie புள்ள
படம் : கத்தி
இசை : அனிருத்
பாடலாசிரியர் : கார்கி
பாடியவர் : விஜய்

Tera Tera TeraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte-உ
பண்ணா ஏறும் கிறுக்கு

Tera Tera….

Instagramத்துல
வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம்
சுட்டு தள்ளலாம்

நானும் நீயும் சேரும் பொது
தாறுமாறு தான்
அந்த FaceBook-இல் பிச்சிக்கிடும்
Like-உ Share-உ தான்

Let’s take a Selfie புள்ள
Give me a உம்மா உம்மா

Selfie புள்ள Give me a உம்மா

Let’s take a Selfie புள்ள
Give me a உம்மா உம்மா

Photoshop பண்ணாமலே
Filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது
நெஞ்சம் அள்ளுது

டப்பாங்குத்து பாட்டும் இல்ல
டன்டனக்கு Beat-உம் இல்ல
உன்னை பாக்கும் பொதே
ரெண்டு காலும் துள்ளுது

அ குச்சி ஐஸ்சும் இல்ல
அல்வாவும் இல்ல
உன் பேர் சொன்னா
நாக்கெல்லாம் தித்திக்குது

அட தண்ணிக்குள்ள
நான் முங்கும்போதும்
உன்னை நெனைச்சாலே
எங்கெங்கோ பத்திக்குது

வெரலுக்கு பசியெடுத்து
உயிர் துடிக்க
உள்ள நாக்க வச்சி
உன்னை கொஞ்சம் அது கடிக்க

உதட்டுக்கு பசியெடுத்து அடம்பிடிக்க
நீ முத்தம் ஒன்னு
தாயேன் நானும் படம் பிடிக்க

Let’s take a Selfie புள்ள
Give me a உம்மா உம்மா

Selfie புள்ள Give me a உம்மா

காலையில காதல் சொல்லி
மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன்நிலவு
போனா வரியா ?

தேகத்துல சாக்லெட்டு நான்
வேகத்துல ராக்கெட்டு நான்
நிலவுல டென்ட் அடிப்போம்
Are you ready-யா?

அட ராக்கெட் உன்ன
நீயும் ரெண்ட் பண்ண
அந்த Jupiter-ல் Moon-உ
மட்டும் அறுபத்திமூனு

அந்த நிலவுங்க எல்லாம்
இங்க தேவையில்ல
உன் கண் ரெண்டும் போதாதா ?
வாடி புள்ள

Tera Tera….

Instagramத்துல….

Let’s take a Selfie புள்ள….

இனிய பாக்களுடன், விரைவில் இணைவோம்.