இரு விழியோ சிறகடிக்கும்…!

வணக்கம்.

நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனாலும் தினசரி பார்வைகள் குறைந்தபாடில்லை. தேடுகிற குறிச்சொற்கள் ஒவ்வொன்றும் அசரவைக்கின்றன. இதோ இசைப்பாவில் மீண்டும் பிரிவோம் சந்திப்போம் படப்பாடல். முந்தின இரு பாடல்களைப் போலவே இதிலும் இலக்கண அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.இம்முறை வித்யாசாகர் இசையில் வரிகளை எழுதியவர் கவிஞர் ஜெயந்தா.

உவமை என்பது கவிதையின், கவிஞரின் வன்மையை எடுத்துரைக்கக் கூடியது. இப்பாடலில் பல இடங்களில் போல எனும் உவம் உருபு இடம்பெறும். அதிகம் எழுதினால், இலக்கணப் பதிவாகிவிடும். இது ’போல’ பாடல்கள் தமிழில் அதிகம் உள்ளனவா? என தெரியவில்லை. எனக்குத் தெரிந்து ’கரிகாலன் காலைப் போல’ பாடல் இதோ போல் தொடுப்பதும்-மறுப்பதுமாக வரும். வேறு இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.

பாடல்: இரு விழியோ…

படம்: பிரிவோம் சந்திப்போம்

பாடலாசிரியர்: ஜெயந்தா

பாடியவர்கள்: சைந்தவி, வினீத் ஸ்ரீனிவாசன்

இரு விழியோ சிறகடிக்கும்!

இமைகளிலோ வெடி வெடிக்கும்

இதயத்திலே ஒரு கனவு

உதயத்திலே அடம்பிடிக்கும்

காதல் நாள்தானே!

மணல்வெளி போல கிடக்கிற ஆசை!

மழைத்துளி போல குதிக்குற நாளை!

விளக்கொளி போல துடிக்கிற நெஞ்சம்

விசைத்தறி போல அணைக்குது நாளை!

நானும் இந்த தேதி அடி காதல் தின்ற மீதி

தோழி நீயும் வாடி இரு தோளும்தானே தூளி!

ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன?

உனைக் கண்ட வேளை பூத்ததென்ன?

மழையாய்…….விழுந்தாய்!

மூக்குத்தி போல ஆடாத நெஞ்சு

நீ பார்த்ததாலே தோடாச்சு இன்று

புயலாய்……ஆனாயே!

சங்கில் ஓசை போல உன்னில் தங்கிக் கொள்ள ஆசை!

மின்னல் போல கண்ணில் உந்தன் பிம்பம் பூக்கும் ஓசை!

உயிரோடு உயிர் பேச அடி காதல்தானே பாஷை!

இது வரமோ?

வரங்களைத் ஏங்கி கிறங்கிடும் தேகம்!

வரங்களில் தேங்கி உறங்கிடும் மாயம்,!

வெறும் சுகமோ?

சுகங்களைத் தேடும் இடங்களின் மோகம்!

வடங்களைப் போடும் நகங்களின் சாயம்!

கதை பேசிக்கொள்ள இதழ் தீயைத் தூண்டு!

அலைபேசி போல காதோரம் சீண்டு!

 மூனாம் பால் ஆவேனே!

இவள் கொண்ட மேனி மலையாளச் சோலை!

இதழாலேத் தொட்டால் மருதாணிச் சாலை!

சிவந்தே போனேனே!

உறங்கும் எனது கனவு

அதில் உனது பெயரும் களவு

மயங்கும் எனது இரவு

உந்தன் மனது பார்க்கும் உளவு

 இதைக் காண வரும் ஓடி, ஒரு கோடி வான நிலவு

இது குளிரா?

குளிர்கிற மேகம் உலர்கிற தேகம்

இருவரின் நெஞ்சில் சமுத்திரத் தாகம்!

இளங்கதிரா?

இளங்கதிர் வந்து உரசிடும் காமம்!

இவர்களின் நிலவு உறங்கிடும் நேரம்!

பாடல் குறித்த உங்கள் எண்ணங்கள், திருத்தங்களைப் பதிவு செய்தால் தளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி. இதே படத்தின், இதே இசையமைப்பாளரின்  பிற பாடல்களுக்கு