புதிய உலகை

இசை வணக்கம்.

சில பாடல்களைக் கேட்கும்போதுதான் இன்னொரு முறை கேட்டாலும் தகும் எனத் தோன்றும். அந்த மாதிரியான பாடல்கள் கண்டிப்பாக வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாடலின் இசையோ, பாடலாசிரியரின் வரியோ, பாடியவரின் குரலோ இதற்கு காரணமாய் இருக்கலாம்.

கார்க்கியின் எளிய வரிகளுக்கு தாலாட்டு போல படரும் இமானின் இசையும், முழுப்பாடலுக்குமான சூழலை இனிமையாக ஆக்கிரமிக்கும் வைக்கம் விஜயலட்சுமியின் குரலும் நம்மை இப்பாட்லில் கவர்வதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

எந்தப் பாடலை விஜயலட்சுமி பாடினாலும் பாடலுக்குள் நம்மை மூழ்கடிக்கிறார். குரலில் மாயம் செய்யும் இவர் தொடர்ந்து நிறைய தமிழ்ப்பாடல்களைப் பாடினால் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.

நீங்களும் கேட்டுப்பாருங்கள். உங்கள் Playlist-ல் இப்பாடலும் இணையும்.

vaikom vijayalakshmi

படம்: என்னமோ ஏதோ
இசை: டி.இமான்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி 

புதிய உலகை
புதிய உலகை
தேடிப் போகிறேன்
என்னை விடு!

விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கி பூத்ததை,
பிரிவில் முடித்துப் போகிறேன்!

மீண்டும் நான்
மீளப் போகிறேன்
தூரமாய்
வாழப் போகிறேன்

(புதிய உலகை..)

மார்பில் கீறினாய்
ரணங்களை
வரங்கள் ஆக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும்
உயரம் ஆக்கினாய்

உன் விழி போல
மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்றேன்!
உன் விழி இங்கு
கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்?

மேலே நின்று உன்னை
நாளும் காணும் ஆசையில்…

(புதிய உலகை..)

யாரும் தீண்டிடா
இடங்களில்
மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா
சிரிப்பை என்
இதழில் தீட்டினாய்

உன் மனம் போல
விண்ணில் எங்கும்
அமைதி இல்லை என்றேன்!
உன் மனம் இன்று
வேண்டாம் என்றே
பறந்து எங்கே சென்றேன்?

வேறோர் வானம்
வேறோர் வாழ்க்கை
என்னை ஏற்குமா?

(புதிய உலகை..)

மற்றுமொரு இனிய பாடலோடு விரைவில் இணையலாம்.