கொட்டு கொட்டு மேளம் கொட்டு – கத்தி

பல புது இசையமைப்பாளர்களை, சமீபகாலமாக தமிழ் திரையுலகு  கண்டு வருகிறது. அதில் சிலர் மட்டுமே முதல் படத்திலேயே பெரிய அளவு பெருமையைத் தேடிக்கொண்டவர்கள். ஆம். கொலவெறி புகழ் அனிருத் பாடல் தான் இன்று.

இசைப்பா குழுவின் சார்பில், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மிஸ்டர் அனிருத். சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட படப்பாடல்கள் இரண்டு தான் : கத்தி, ஐ. கத்தி படத்திலிருந்து ஒரு வித்யாசமான பாடல் உங்களுக்கு.

கொட்டு கொட்டு மேளம் கொட்டு பாடல் ஒரு துள்ளல் இசைக் கலவை. Fusion என்று இதனை சொல்லுவர். கர்நாடிக், beats, band, rock, குத்து என எல்லா இசை வகைகளும் இதில் உள்ளது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கும் மாறும் போது வரும் இடையிசை நன்கு அமைந்துள்ளது. Transitions in Interlude. ஷங்கர் மஹாதேவன் குரல் மிகவும் உற்சாகமூட்டுகிறது. ஸ்வேதா மோகன் இலகுவாக பாடி கவர்ந்துள்ளார்.

கேள்வி பதில் போல இந்த பாடலை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. பாலம் என்பதைக் கருவாக கொண்டு அடுக்கியுள்ளார். தத்துவங்கள் தூவியுள்ளார். பொறப்பு இறப்பு என்று எல்லாம் வரும் போது, வைரமுத்துவின் (திரை) வரிகள் மனசில் பளிச்சிடுகிறது.

பாடலில் உள்ள பிறமொழிகளை தவிர்த்து இருக்கலாம். ஆரம்பமே ஹிந்தி! அதும் இரண்டு முறை ஒலிக்கிறது, இடையில் வரும் ஆங்கிலமே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு.

Anirudh

 

பாட்டு: கொட்டு கொட்டு மேளம் கொட்டு
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: ஷங்கர் மஹாதேவன், ஸ்வேதா மோகன்
படம்: கத்தி

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

ஏ கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்தை இதயத்துக்கு
இணைக்க பாலம் கட்டு

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

மார்ஸுல இவன் பொறந்தான்
வீனஸுல இவ பொறந்தா
கிரகங்க இரண்டுத்துக்கும்
இருக்கும் பாலம் எது ?

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

சொர்க்கத்துல மரமெடுத்து
கட்டுன பாலம்தான் !
முத்தத்துல கட்டி வச்ச
பாலம், காதல் தான்!
காதல் ஒரு மிதவை
மிதவை பாலம்

அது இல்லைனா
நெஞ்சுக்குள்ள மிருகம்
மிருகம் வாழும்!

காதல் ஒரு மிதவை
மிதவை பாலம்
அது இல்லைனா
நெஞ்சுக்குள்ள மிருகம்
மிருகம் வாழும்!

பேஷ்.. ! பேஷ்..!
ரொம்ப நல்லாயிருக்கு !

அண்டர் குல அதிபதி நீயே,
நமோ நமோ நாராயணாய.
தொண்டர் குலம் போற்றும் உன்னையே,
நமோ நமோ நாராயணாய.

துன்பம் இங்க ஒரு கரை தான்,
இன்பம் அங்கு மறுகரை தான்.
ரெண்டுக்கும் மத்தியில
ஓடும் பாலம் எது ?

கோவிலில கல் எடுத்து,
பக்தியில சொல் எடுத்து,
கட்டின பாலம் எது?
சாமி பாலம் அது!

பாவம் செஞ்ச கறை கழுவ
நினைக்கும் பூமிதான்,
பாவத்தை நீ உணர்ந்துபுட்டா
நீயும் சாமிதான்!

சாமி ஒரு குறுக்கு
குறுக்கு பாலம்.
அது இல்லன்னா பூமி இங்கு
கிறுக்கு கிறுக்கு கோலம்!

சாமி ஒரு குறுக்கு
குறுக்கு பாலம்
அது இல்லன்னா பூமி இங்கு
கிறுக்கு கிறுக்கு கோலம்!

Humpty dumpty அங்க falling down.
Jack and jill இங்க rolling down.
London bridge is ஐயோ falling down.
Ringa ringa all fall down.

நேத்து வெறும் இருள் மயம் தான்.
நாளை அது ஒளிமயம் தான்
நல்ல எதிர்காலத்துக்கு
போகும் பாலம் எது ?

குறும்பில இரும்பெடுத்து
அறிவுல நரம்பெடுத்து
எழுப்புன பாலம் எது?
குழந்தை பாலம் அது !

வானத்துல மீன் பிடித்து,
ரசிக்கும் வயசுதான்!
எல்லாருக்கும் வேணும்,
அந்த குழந்தை மனசுதான்!

குழைந்தைங்க கனவு
கனவு பாலம்!
அதில் பொன்னாலே கண்ணு
முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்!

குழைந்தைங்க கனவு
கனவு பாலம்
அதில் பொன்னாலே கண்ணு
முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்!

குத்துகல்லு போல நின்னானே,
முட்டித் தள்ளிப் போயேபுட்டானே,
எட்டு காலு பூச்சியாட்டம் தான்,
நாசமாயி நடந்து போனானே!

ஹேய் பொறப்பதும் ஒரு நொடிதான்
இறப்பதும் ஒரு நொடிதான்,
சொல்லடி ஞானபொண்ணு,
ரெண்டுக்கும் பாலம் எது ?

அன்புல பூ எடுத்து
நேரத்துல நாரெடுத்து
கட்டுன பாலம் எது?
வாழக்க பாலம் அது

பாதையில முள்ளிருக்கும்
குத்துனா கத்தாதே!
ஊரடிச்சு நின்னா கூட
அதுவும் பத்தாதே!
வாழ்க்க அது பூவுல காட்டுன பாலம்
நீ செத்தாலும் சேத்து வச்ச
புண்ணியம் என்னைக்கும் வாழும்!

வாழ்க்க அது பூவுல காட்டுன பாலம்
நீ செத்தாலும் சேத்து வச்ச
புண்ணியம் என்னைக்கும் வாழும்!

மீண்டும் ஒரு இனிய பாடலுடன் விரைவில் இணைவோம்.

சந்தனத் தென்றலை…!

இசை வணக்கம்.

காதலியை சந்திக்கும் நொடியில், மயங்கி அவள் வசம் விழுகிறோம். ஆனாலும் காதலை, வாரத்தைகள் மூலம் சொல்லாமல், விழி மொழிகளில் மட்டுமே வழி மொழிகிறோம். இத்தகு தருணத்தில் ஏற்படும் பிரிவு….. இல்லை இல்லை சொல்லவைத்தாலும், இன்னும் இன்னும் பேச வைத்தாலும், காதலை உறுதிப்படுத்த, இதமான இதயமும், இடர்படுகிறது.

வெளியூருக்கு வரும் நாயகன், எதேச்சையாக இவளை சந்திக்க, காதல் கனிகிறது. ஆனாலும் பேச்சு ஒன்றும் இல்லை, பார்வைகள் மட்டும் தான், பார்க்கா பரவசங்கள் நெஞ்சில் குடிகொள்கிறது. பிரியும் தருணம் வரும் பொழுது, இருவரும் சந்திக்க, காதலை சொல்ல சொல்லும் நாயகனின் வரிகளை, வலிகளை,  வைரமான எழுத்துகளில் வைரமுத்து வருடியுள்ளார். மிகவும் அழகான பல உவமைகள் பாடலில் உள்ளது.

இல்லை இல்லை.... இசைக்கு ஒரு உச்சம் இந்த பாடல், படத்தின் பல இடங்களில் இது தான், BGM (Back Ground Music), கிளைமாக்ஸ் காட்சிகளில் கூட வலு சேர்க்கும் இசைக் கோர்வை. ரஹ்மான் + வைரமுத்து + ஷங்கர் மகாதேவன் கவிமிகு கூட்டணியின் சுவைமிகு பாடல்.

சில பாடல் காட்சிகள் மட்டுமே, இசைக்கும், பாடலுக்கும், குரலுக்கும் பெருமை சேர்க்கும். இப்பாடல் அத்தகு ஒரு ஓவியம். பாலைவனத்தில், எகிப்து பிரமிடுகள்- என நேர்த்தியுடன், ஒரு கான்செப்ட் வைத்து, எடுத்த இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள். அஜித் மற்றும் தபுவின் முக உணர்வுகளை, என்ன வென்று சொல்வது…. சோக ரசம் என்றால் இது தான்.

கடைசி சந்திப்பு

நாயகன் : உங்க மௌனத்துல கவித இருக்கு
புன்னகைல ஓவியம் இருக்கு
அமைதில பாட்டு இருக்கு
அது தான் உங்க அழகே !

நாயகி : இல்ல இல்ல பிளீஸ்…

மென்மையாக பாடல் ஆரம்பமாகிறது….
இல்லை இல்லை சொல்ல….

separator-notes

பாடல் : சந்தனத் தென்றலை 
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடலாசிரியர் :  வைரமுத்து
இசை: எ.ஆர்.ரஹ்மான்
பாடியவர் : ஷங்கர் மகாதேவன்

இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை எனும்  சொல்லை
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் ?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள்
தண்டித்தல் நியாயமா ?
காதலின் கேள்விக்கு கண்களின்
பதில் என்ன மௌனமா ?

அன்பே எந்தன் காதல் சொல்ல
நொடி ஒன்று போதுமே !
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே
ஒரு ஆயுள் வேண்டுமே !

(இல்லை இல்லை சொல்ல…)
(சந்தனத் தென்றலை…)

இதயம் ஒரு கண்ணாடி,
உனது பிம்பம் விழுந்தடி !
இது தான் உன் சொந்தம்,
இதயம் சொன்னதடி !

கண்ணாடி பிம்பம் கட்ட
கயிறு ஒன்றும் இல்லையடி.
கண்ணாடி ஊஞ்சல்
பிம்பம் ஆடுதடி !

நீ ஒன்று சொல்லடி பெண்ணே,
இல்லை நின்று கொல்லடி கண்ணே !

எந்தன் வாழ்க்கையே
உந்தன் விழி விளிம்பில்
என்னை துரத்துதே,
உயிர் கரை ஏறுதே…

இல்லை இல்லை சொல்ல…

விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது ?
பூ வாசம் வீசும்
உந்தன் கூந்தலடி…

இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது ?
கதிர் வந்து பாயும்
உந்தன் கண்களடி…

பல உலக அழகிகள் கூடி
உன் பாதம்
கழுவலாம் வாடி.
என் தளிர் மலரே,
இன்னும் தயக்கம் என்ன ?
என்னை புரியாதா ?
இது வாழ்வா சாவா ?

(இல்லை இல்லை…)

இசைப்பா+
இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய மின்சாரக்கனவு திரைப்படம் இசை,நடனம், பின்னணிப்பாடகர்கள் என நான்கு பிரிவுகளில் தேசிய விருது பெற்றது

உங்கள், கருத்துகள், விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அழகு குட்டிச் செல்லம் !!

இசையால் இதயம் தொட்ட வணக்கம்.
தொடர்ந்து பிப்ரவரி மாதப்பாடல்கள் பலரையும் ஈர்த்து வருகிறதை அறிகிறபோது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சி இன்றும் தொடரட்டும்.

இந்த பாட்டு அன்பின் வெளிப்பாடு. மழலைகளின் மீதான காதலின்,அன்பின் வெளிப்பாடு. வஸந்த் அவர்கள் இயக்கிய சத்தம் போடாதே என்கிற படத்தில் இடம்பெற்ற நாயகன் அறிமுகப்பாடல். படத்திற்குப் படம் பாடல்களைப் படமாக்குவதில் புதுமை செய்யும் இயக்குனர் இதில் ரொம்பவே மெனக்கட்டு அழகியலைக் கொண்டுவந்திருக்கிறார்.

முற்றிலும் 3-4 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாடல் நெடுக வெவ்வேறு உணர்ச்சிகளை அவர்கள் முகங்களின் வாயிலாக அழகாகப் பதிவு செய்திருப்பது உண்மையிலேயே மனதிற்கு நெருக்கமான ஒரு காட்சியமைப்பு.

நா. முத்துக்குமார்-யுவன் கூட்டணியில் வஸந்த்தின் இயக்கத்தில் உங்கள் மனதையும் கொள்ளை கொள்ள ஒரு பாடல் ஷங்கர் மகாதேவனின் மயக்கும் குரலில்.

எந்த   நேரம் உன்னை  பார்த்தாலும் உன் பொன் சிரிப்பு மனதை கொள்ளை கொள்ளும் !!!
மலரின் சிரிப்பு கூட வாடி விடும்!  உன் பொன் சிரிப்பு -வாடி இருக்கும் என் மனதையும் கடத்தி செல்கிறதே …!!!
உன் தீண்டலில் என் வலி மறக்கிறேன் !
உனது அழுகை கூட இனிமையே..!!!
எந்தவித கவலையும் இன்றி இருக்கிறாயே!!! எனக்கும் உன்னைப் போல் இருக்க ஆசை !!!
நீ யோசிக்கிறாயோ? அமைதியாக இருக்கிறாய் ..
எந்த மொழியில் இருக்கும் உன் யோசனை ?????
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டுகிறாயே சின்னக் கண்ணனே …புன்னகை  மன்னனே !!!
உன் சிரிப்பில் விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்!

முத்து யுவன் !
முத்து யுவன் !

பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்.
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

அழகு குட்டிச் செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி?

அழகு குட்டிச் செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை?
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை?
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண..!!

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரசித்திருப்பீர்கள் என் நம்புகிறோம். உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும், விருப்பங்களையும் வரவேற்கிறோம்.