காதல் கனவே…

இசையுடன் நண்பர்களுக்கு வணக்கம்,

சில பாடல்களை கேட்ட உடனே, வரிகளாலும் இசையாலும்  எத்துனை முறையேனும் கேக்க தூண்டும். பாடல் இடம் பெற்ற படம் “முண்டாசுபட்டி”, பாடல் “காதல் கனவே”. இசை, பாடலை மெருகேற்றியது என்றே சொல்லலாம். பாடல் கேட்க மென்மையாகவும் அருமையாகவும் இருக்கிறது. சியன் ரோல்டன் அவர்கள் இசை மெருகேறிய வண்ணமே இருக்கிறது . பாடலின் விஷ்வல்ஸ் அருமையாக அமைந்துள்ளது. கேக்க கேக்க பாடல் லூப்பில் போகும்.

காதலனும்  நாயகியும், காதலை உணர்ந்தவாரே, அமைக்கப்பட்ட டூயட் ! தங்கள் காதலை அழகூற, நினைவுகளுடன் பகிரும் வரிகள், அமைத்த விதம் அருமை .

இரவோடு பகலாய் சேர
மாலை தேடி இருந்தேனே
கண்ணாடி தொட்டில்மீனாய்
நானும் உன்னை பார்த்தேனே” 

இந்த வரியில் மிதக்கும் குரல் தான் பாடலின் ஹைலைட், மிகவும் கவரும் விதமாக, உருகி பாடியுள்ளார் பாடகி. வரியும் மிகவும் பிடித்த வரி ! இந்த வரி மட்டும் வீடியோவில் இடம் பெறமால் போனது ஏனோ தெரியவில்லை. பாடலை கேட்போம் வாருங்களேன் ….

mundasupatti

பாடல்: காதல் கனவே
படம்:முண்டாசுப்பட்டி
பாடியவர்கள்:பிரதீப் குமார், கல்யாணி நாயர்
இசை : சியன் ரோல்டன்
பாடலாசிரியர்: முத்தமிழ்

காதல் கனவே தள்ளி
போகாதே போகாதே..
ஆச மறச்சு நீ
ஒளியாதே ஓடாதே

காதல் கனவே…

கனியே உன்னை
காண காத்துருக்கேன்
அடியேய் வழி
நானும் பாத்துருக்கேன்..

தேனாழியில் நீராடுதே மனமே..

ஓ… பூவாலியில் நீ
தூக்கவா தினமே ஏ…

காதல் கனவே
தள்ளி போகாதே போகாதே

செதராம சிறுமொழி பேசும்
சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி
பதிச்சாலே பரவசமானேன் சுகமா

சிருநூலாய் துணியில் இருந்து

தனியாக விலகி நின்னு
மனமெங்கும் எலகிப்போச்சு மெதுவா

இறகாலே படகா நீந்தி
காத்தில் நானும் மிதந்தேனே
கடிவாள குதிரையாக
எனதாய் நீயும் இழுத்தாயே
மாறாதே மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே

காதல் கனவே…

பருவத்தில் பனியோ செஞ்சேன்
பதுங்காம மெதுவா மிஞ்சேன்
புதுவேகம் எடுத்தே நடந்தேன் தனியே

உருவத்த நிழலா பிடிச்சேன்
உறவாக கனவுல பதிச்சேன்
உனக்காக நிசமா துடிச்சேன் மானே

இரவோடு பகலாய் சேர
மாலை தேடி இருந்தேனே
கண்ணாடி தொட்டில்மீனாய்
நானும் உன்னை பார்த்தேனே

மாறாதே மனமே மானே
மடிமேல விழுந்தேன் நானே…

காதல் கனவே

ஆசை மறச்சு…

காதல் கனவே…

கனியே உன்னை
காண காத்துருக்கேன்

அடியேய் வழி நானும்
பாத்துருக்கேன்…

தேனாழியில் நீராடுதே மனமே
பூவாளியில் நீ தூக்கவா தினமே..

.

இனிய பாடலுடன் மீண்டும் சந்திக்கலாம் !