உன் விழிகளில் விழுந்த நாட்களில்..

நண்பர்களுக்கு இசையுடன் கூடிய வணக்ம்,

வளர்ந்து வரும் போட்டிக்கு நடுவில், இசை அமைத்த சில படங்களே கேட்போரின் மனதில் இடம் பிடித்த இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். அவர்களுக்கு இசைப்பாவின் அறிமுகம் இன்று, வாழ்த்துக்களை. இடம்பெற இருக்கும் பாடல் உன்விழிகளில் விழுந்த நாட்களில், வெளிவந்த படம் மான் கராத்தே. பாடல் வடிவமைத்த விதமும் அருமை. பாடலின் பலமாக இசை + குரல் அசத்தல்.

நாயகன் தன் காதலியில் விழிகள் கண்ட பின் அவன் தொலைந்ததாகவும்… தன் கனவில் தேவதையாகவும் அவளை கண்டு, மனம் கரைந்து அவனை முழுவதாக கொடுத்துவிட்டதாகவும் பாடல் ஆரம்பிகின்றது… வரிகள் விறு விறுவென வேகத்தில் நகர்ந்தாலும் இதமான பாடல். பாடலை ரசிக்கலாம் வாருங்களேன்…

mankarate

 

படம் : மான்கராத்தே
பாடல் : உன்விழிகளில் விழுந்த நாட்களில்
இசை : அனிருத்
பாடல் ஆசிரியர் : R.D.ராஜா
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்திரன் ,ஷ்ருதிஹாசன்

உன் விழிகளில்
விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது
அதுவே போதுமே
வேறதுவும் வேண்டாமே
பெண்ணே…!

உன் உயிரினில்
கலந்த நாட்களில்
நான் கரைந்தது
அதுவே போதுமே
வேறதுவும் வேண்டாமே
பெண்ணே…!

என் கனவில்
வந்த காதலியே !
கண் விழிபதற்க்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடி
தேடிதான் அளஞ்சுட்டேன்
என் தேவதைய
கண்டு பிடிச்சுட்டேன்
நா முழுசா
என்னதான் குடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

நீ தினம்
சிரிச்சா போதுமே

வேறதுவும் வேணாமே
நான் வாழவே

வாழுவேன்…. வாழுவேன்….

நா உன்ன
ரசிச்சா போதுமே

வேறெதுவும் வேணாமே
நான் வாழவே !

வாழுவேன் வாழுவேன்

காற்றில் வீசும்
திசையெல்லாம்

நீ பேசும்
சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி
போவேனே அன்பே

அன்பே அன்பே அன்பே

உன் கைவிரல் தீண்டிச்
சென்றாலே என் இரவுகள்

நீளும் தன்னாலே
நான் பகலை
விரும்ப மாட்டேனே அன்பே

அன்பே அன்பே

அழகான இந்த காதல்
அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உணர்வாக
நம் காதல் கலந்தாச்சு

ஓஹோஓஹா..ஓ

நீ தினம்
சிரிச்சா போதுமே
வேறதுவும் வேணாமே
நான் வாழவே

வாழுவேன் வாழுவேன்

நா உன்ன
ரசிச்சா போதுமே

வேறெதுவும் வேணாமே
நான் வாழவே

வாழவே வாழவே

உன் விழிகளில்
விழுந்த நாட்களில்…

மற்றும் ஒரு இனிய இசையுடன், தமிழ் வரிகளுடன் இணையலாம், சீக்கிரம்.