கொட்டு கொட்டு மேளம் கொட்டு – கத்தி

பல புது இசையமைப்பாளர்களை, சமீபகாலமாக தமிழ் திரையுலகு  கண்டு வருகிறது. அதில் சிலர் மட்டுமே முதல் படத்திலேயே பெரிய அளவு பெருமையைத் தேடிக்கொண்டவர்கள். ஆம். கொலவெறி புகழ் அனிருத் பாடல் தான் இன்று.

இசைப்பா குழுவின் சார்பில், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மிஸ்டர் அனிருத். சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட படப்பாடல்கள் இரண்டு தான் : கத்தி, ஐ. கத்தி படத்திலிருந்து ஒரு வித்யாசமான பாடல் உங்களுக்கு.

கொட்டு கொட்டு மேளம் கொட்டு பாடல் ஒரு துள்ளல் இசைக் கலவை. Fusion என்று இதனை சொல்லுவர். கர்நாடிக், beats, band, rock, குத்து என எல்லா இசை வகைகளும் இதில் உள்ளது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கும் மாறும் போது வரும் இடையிசை நன்கு அமைந்துள்ளது. Transitions in Interlude. ஷங்கர் மஹாதேவன் குரல் மிகவும் உற்சாகமூட்டுகிறது. ஸ்வேதா மோகன் இலகுவாக பாடி கவர்ந்துள்ளார்.

கேள்வி பதில் போல இந்த பாடலை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. பாலம் என்பதைக் கருவாக கொண்டு அடுக்கியுள்ளார். தத்துவங்கள் தூவியுள்ளார். பொறப்பு இறப்பு என்று எல்லாம் வரும் போது, வைரமுத்துவின் (திரை) வரிகள் மனசில் பளிச்சிடுகிறது.

பாடலில் உள்ள பிறமொழிகளை தவிர்த்து இருக்கலாம். ஆரம்பமே ஹிந்தி! அதும் இரண்டு முறை ஒலிக்கிறது, இடையில் வரும் ஆங்கிலமே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு.

Anirudh

 

பாட்டு: கொட்டு கொட்டு மேளம் கொட்டு
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: ஷங்கர் மஹாதேவன், ஸ்வேதா மோகன்
படம்: கத்தி

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

ஏ கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்தை இதயத்துக்கு
இணைக்க பாலம் கட்டு

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

மார்ஸுல இவன் பொறந்தான்
வீனஸுல இவ பொறந்தா
கிரகங்க இரண்டுத்துக்கும்
இருக்கும் பாலம் எது ?

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

சொர்க்கத்துல மரமெடுத்து
கட்டுன பாலம்தான் !
முத்தத்துல கட்டி வச்ச
பாலம், காதல் தான்!
காதல் ஒரு மிதவை
மிதவை பாலம்

அது இல்லைனா
நெஞ்சுக்குள்ள மிருகம்
மிருகம் வாழும்!

காதல் ஒரு மிதவை
மிதவை பாலம்
அது இல்லைனா
நெஞ்சுக்குள்ள மிருகம்
மிருகம் வாழும்!

பேஷ்.. ! பேஷ்..!
ரொம்ப நல்லாயிருக்கு !

அண்டர் குல அதிபதி நீயே,
நமோ நமோ நாராயணாய.
தொண்டர் குலம் போற்றும் உன்னையே,
நமோ நமோ நாராயணாய.

துன்பம் இங்க ஒரு கரை தான்,
இன்பம் அங்கு மறுகரை தான்.
ரெண்டுக்கும் மத்தியில
ஓடும் பாலம் எது ?

கோவிலில கல் எடுத்து,
பக்தியில சொல் எடுத்து,
கட்டின பாலம் எது?
சாமி பாலம் அது!

பாவம் செஞ்ச கறை கழுவ
நினைக்கும் பூமிதான்,
பாவத்தை நீ உணர்ந்துபுட்டா
நீயும் சாமிதான்!

சாமி ஒரு குறுக்கு
குறுக்கு பாலம்.
அது இல்லன்னா பூமி இங்கு
கிறுக்கு கிறுக்கு கோலம்!

சாமி ஒரு குறுக்கு
குறுக்கு பாலம்
அது இல்லன்னா பூமி இங்கு
கிறுக்கு கிறுக்கு கோலம்!

Humpty dumpty அங்க falling down.
Jack and jill இங்க rolling down.
London bridge is ஐயோ falling down.
Ringa ringa all fall down.

நேத்து வெறும் இருள் மயம் தான்.
நாளை அது ஒளிமயம் தான்
நல்ல எதிர்காலத்துக்கு
போகும் பாலம் எது ?

குறும்பில இரும்பெடுத்து
அறிவுல நரம்பெடுத்து
எழுப்புன பாலம் எது?
குழந்தை பாலம் அது !

வானத்துல மீன் பிடித்து,
ரசிக்கும் வயசுதான்!
எல்லாருக்கும் வேணும்,
அந்த குழந்தை மனசுதான்!

குழைந்தைங்க கனவு
கனவு பாலம்!
அதில் பொன்னாலே கண்ணு
முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்!

குழைந்தைங்க கனவு
கனவு பாலம்
அதில் பொன்னாலே கண்ணு
முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்!

குத்துகல்லு போல நின்னானே,
முட்டித் தள்ளிப் போயேபுட்டானே,
எட்டு காலு பூச்சியாட்டம் தான்,
நாசமாயி நடந்து போனானே!

ஹேய் பொறப்பதும் ஒரு நொடிதான்
இறப்பதும் ஒரு நொடிதான்,
சொல்லடி ஞானபொண்ணு,
ரெண்டுக்கும் பாலம் எது ?

அன்புல பூ எடுத்து
நேரத்துல நாரெடுத்து
கட்டுன பாலம் எது?
வாழக்க பாலம் அது

பாதையில முள்ளிருக்கும்
குத்துனா கத்தாதே!
ஊரடிச்சு நின்னா கூட
அதுவும் பத்தாதே!
வாழ்க்க அது பூவுல காட்டுன பாலம்
நீ செத்தாலும் சேத்து வச்ச
புண்ணியம் என்னைக்கும் வாழும்!

வாழ்க்க அது பூவுல காட்டுன பாலம்
நீ செத்தாலும் சேத்து வச்ச
புண்ணியம் என்னைக்கும் வாழும்!

மீண்டும் ஒரு இனிய பாடலுடன் விரைவில் இணைவோம்.

யாருமில்லா தனியரங்கில்… – காவியத்தலைவன்

காவியத்தலைவன் படத்தின் அடுத்த ஒரு பாடல் (மட்டும்) வெளியாகியுள்ளது. நாடக சாபகள் கொடிக் கட்ட பறந்த காலத்தை அடிப்டையாகக் கொண்ட கதை. இசையும் அதை துள்ளியமாக பிரதிபலிக்கிறது, ரஹ்மான் மிளிர்கிறார் என்றால் மிகையாகாது, Interludes அனைத்தும் அலாதி சுகம். பாரம்பரிய கருவிகளின் கலவையான படையல் இந்த பாடல். ஒரு வகை சோக ரசம் ததும்புகிறது ! நாயகி தலைவனுக்குகாக ஏங்கி, தனது ஆசைகளை வெளிப்படுத்தும் மிருதுவான வரிகலுக்கு சொந்தக்காரர் பா விஜய். காற்று பறக்கும் லாவகதுடன், தேன் ததும்ப ஒலி : ஸ்வேதா மோகனின் பரிச்சியமான குரல். ஃபேஸ்புக்-கில் Trending ஆகி, இன்று அதிகம் பேசப்படும் செய்தியாக இந்த பாடல் மாறியுள்ளது என்றால் மக்களின் விருபம் தானாகவே தெரிகிறது!

yaarumilaa

படம்: காவியத்தலைவன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடல்: யாருமில்லா தனியரங்கில்
பாடியவர்கள்: ஸ்வேதா மோகன், ஸ்ரீநிவாஸ்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே,
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தனிமும் தேடும்
என் பேச்சை கேடக்காமல்
உன்னை தேடும்

யாருமில்லா தனியரங்கில்…

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான்
மட்டும் இருப்போம் !

கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான்
என்றும் நிஜமாய்

ஓ… அது ஒரு
ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்

இதழ்கள் என்னும் படிவழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில்…

என்ன சொல்வேன்…

யாருமில்லா தனியரங்கில் !….

பேச மொழி தேவையில்லை
பார்த்துக் கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா ?
மணிக்குயில் நானுமே !

சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா – சொல்
யாருமில்லா தனியரங்கில்…

என்ன சொல்வேன்…

காவியத்தலைவன் படத்தில் வந்த, வாங்க மக்கா வாங்க பாடல் கேட்க சொடுக்கவும். சீக்கிரம் ஒரு புதிய பாடலுடன் உங்களை சந்திக்கிறோம். பார்வைகளால் எங்களை உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.

பேஞ்சாக்கா மழத் துளியோ…

கங்காரு என்னும் படத்தில் , பாடகர் ஸ்ரீனிவாஸ், இசையமைப்பாளராக வளர்ந்து, பரிணமித்துள்ளார். பாடல்கள் அனைத்தும் சுகம். ஏ.ஆர்.ரஹ்மான்-னிடம் வேலை பார்த்த அனுபவம் மிளிர்கிறது.

பாடலை பற்றி கவிஞர் : அந்த ஊரில் ஒரு முரடன், அவனை ஒருத்தி காதலிக்கிறாள். புனிதமே வடிவானவள் காதலி; அவளுடைய தாய் ஒரு விலைமகள். இந்த விலைமகள் பெற்ற திருமகளை அவன் காதலிக்க மறுக்கிறான். அவ : வாழ்ந்தா உன் கூட தான், இல்லைனா எனக்கு வாழ்கை இல்ல! என்னை ஏன் நிராகரிக்கிறாய் ? என்று  கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் பாடுகிற பாடல்

இதற்கு மேல் வைரமுத்துவே மெட்டைப் பாடி, அதற்கு தான் எழுதிய பாடலையும் பாடுகிறார். மனிதர் ஏன் பாடல்களைப் பாடுவதில்லை என்று யோசிக்க வைக்கிறது குரல்.

kangaroo release

இந்த காணொளி சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் வந்த போதே பாடல் பிடித்தது. பாடல் வெளியான பின் முதலில் கேட்டதும் இதுவே. ஸ்வேதா மோகன் அவர்களின் ஏக்கம் நிறைந்த குரல் துள்ளல். வைரமுத்துவே சொல்கிறார் : இத்தனை இளம் வயதில், இனிய முதிர்ச்சி வாய்ந்த சிறப்பான குரல். உங்களுக்கும் கேட்டவுடனே பிடிக்கும்.

படம் : கங்காரு
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ்
பாடல் : பேஞ்சாக்கா மழ துளியோ…
பாடியவர் : ஸ்வேதா மோகன்

பேஞ்சாக்கா மழத் துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாய்ஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஒய்ஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு
என் ஏத்ததுக்கும்… ஏறக்கத்துக்கும்… என்ன கொற ?
நான் சேத்துக்குள்ள பூத்து வந்த செந்தாமர!

உன்ன ஒரு தலையா காதலிச்சா
தருதலையா சொல்லு தொற ?

சொத்து பத்து வேணுமுனு ஒன்ன கேட்டாளா ?
பத்து காசு நெத்தி பொட்டு போதும் கண்ணாளா!
காத்து மழக் குளிருக்கு ஒரு கம்பளி கேட்டாளா ?
கட்டிகிட்டு அணைக்கும் வெப்பம் போதும் கண்ணாளா
ஆள் வளர்ந்த ஆம்பளையே என்ன கண்ணெடுத்து பாரு
கண்ணுக்குள்ள நீரு – நான்
வெட்டி வச்ச கற்பு எல்லாம்
கொட்டி தாரேன், கூட இரு !

பேஞ்சாக்கா…

மூணு முடி கயிறு போட்டா
நான் உன் பொண்டாட்டி.
மூணு மொள கயிறு வேணும்
நீயும் இல்லாட்டி!
கட்டிகிட்டு காதல் பண்ண
எண்ணம் வராட்டி,
எட்டி நின்னு ரெண்டு
வார்த்த சொல்லு என்ன பாராட்டி!

அத்துவானக் காட்டுக்குள்ள
ஒத்தையில இருக்கேன்,
நான் ஒன்ன நம்பி இருக்கேன் !
உன் எச்சி சோத்த பிச்ச கேட்டு
ராப்பகலா நான் கிடக்கேன்

பேஞ்சாக்கா…

படத்தில் உள்ள மீதி பாடல்களை கேட்டு ரசிக்கவும். வரிகள் விரைவில் இசைப்பாவில் வெளிவரும். இசை என்னும் இன்பம் எங்கும் பரவட்டும்