அன்பே அன்பே, எல்லாம் அன்பே….

வணக்கம்.

பாடல் இடம்பெற்ற படம் ’இது கதிர்வேலன் காதல்’. ஒரு மென்மையான சோக பாடல். வரிகளில் பெரும் அட்டகாசம் இல்லை என்றாலும்… இசையும் பாடிய விதமும், இழையோடும் சோக மெட்டும், மனதை வருடுகின்றன. ஹரிணியின் குரலில் இருக்கும் depth மிக அபூர்வம். அந்த உணர்வை, மெல்லிய இசையால் ஹாரிஸ் ஜெயராஜ் கை தூக்கி விட்டிருப்பது – நேர்த்தி. எங்கோ கேட்டு பழக்கம் உள்ள மெட்டாக இருந்தாலும் பாடல் ஈர்க்கிறது.

காதலன் காதலியின் பிரிவை, சின்ன சின்ன சம்பவங்களாக புது கவிதை (வசனம், கதை சொல்வது) போல சித்தரித்திருப்பது அழகு. வரிகள் ஒவ்வொன்றும் காட்சியை அழகாக காட்டுகிறது. இயக்குனருக்கு வேலை மிச்சம். தார தப்பட்டை எல்லாம் வைத்து கிழிக்காமல், இப்படி அமைதியாக சோகத்தை சொல்வது அலாதியான உணர்வலைகளை ஏற்படுத்துகின்றது. வைரமுத்து ராஜா/ரஹ்மான் போல – தாமரை + ஹாரிஸ் வலுவான வெற்றி கூட்டணி !

பல இசைகளை சார்ந்தது ஹாரிஸ் ஜெயராஜின் இசை என்பது பலரின் கருத்து (/குறை). என்னை பொருத்த மட்டில் கேட்க இனிமையாக இருந்தால், திரும்ப கேட்க முடியுமானால் பாடல் சூப்பர் தான் !

படம் : இது கதிர்வேலன் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமாரை
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி

(ஆண்)
அன்பே அன்பே
எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழைகாலம் மட்டும்
கண்ணில் வேணாடம் என்பேன்
பணிக்கலாம் போர்வைக்
கொண்டு வந்தேன்

ஓ அன்பே அன்பே….

(பெண்)
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாளரம் நீ தானே
என் இதயம் மெல்ல
சிதையில் தள்ள நீ தான்
நிலாவை காட்டி தேற்றினாய்

அன்பே அன்பே….

(பெண்)

தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழியில்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன்போல் தீயில்லி

(ஆண்)

மழை தரும் கார்முகிலே – நீ
மிதந்திடும் மயிலிறகே
இதம் தரும் இன்னிசையே – நீ
ஒளிதரும் இன்னிசையே

(பெண்)
இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரிகிரதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சரிகிறதே

அன்பே அன்பே….

(ஆண்)
உன்னை பார்க்க கூடாது
என் கண்ணி மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்

(பெண்)
உன்னிடம் சொல்வதற்கு என்
கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு ?

(ஆண்)
உடைகளின் நேர்த்தியினால் இந்த
உலகினை வென்றவள் நீ !
சிறு உதட்டின் புன்னகையினால் என்
இதயத்தில் நின்றவள் நீ !

அன்பே அன்பே….

மேலும் ஒரு இனிய பாடலுடன் விரைவில் வருகிறோம். இசை பூமியை ஆளட்டும் !