நீ வந்து போனது நேற்று மாலை – யான்

இசை வணக்கம்

ஹாரிஸ் ஜெயராஜ் பாடலுடன் இன்று உங்களை சந்திக்கிறோம். யான் ஓடத்தில் வந்த நெஞ்சே நெஞ்சே பாடல், ஏற்கனவே இசைப்பாவில் வெளிவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒரு துள்ளலான பாடல். கேகே-வின் குரல் உற்சாக பிழம்பாக குதிக்கிறது, இசைக் கோர்வை அதி வேகத்தில் மோகம் கொள்ளச் செய்கிறது. நடு நடுவே என்.எஸ்.கே ராம்மியாவின் இடைக்குரல் பாடலுக்கு ஒரு முழுமையை தருகிறது.

பாடலைக் கேட்டுக் கொண்டே வரிகளை எழுத முற்பட்டேன். சுத்தமான தமிழில், செமையான கவிதை என்றே சொல்ல வேண்டும். தாமரையின் தனி அடையாளம் ! குந்தக பூமியில், கற்கண்டு மாமழை என்று அழகான வெளிப்பாடுகள். நுதரும், கமரும் என்ற சொற்களை இதுவரை கேட்டதில்லை, பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.

படம் : யான்
பாடல் : நீ வந்து போனது…
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமரை 
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ, கே கே,
என் எஸ் கே ரம்யா

நீ வந்து போனது
நேற்று மாலை
நான் என்னை தேடியும்
காணவில்லை
வெண்பனி மூடத்தின்
போர்வையாக
எங்கும் வெள்ளை….

என் மனம் தேடிய
வானவில்லை
என் காது ஏங்கிய
வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட
அசை வில்லை….

சொப்பனம் கண்ட பின்
கண்ணைக் காணோம்
சொல்லிய வார்த்தையில்
மொழியை காணோம்
கற்பனை செய்த பின்
காண நீயில்லையே

குந்தக பூமியில்
மேகமானாய்
கற்கண்டு மாமழை
தந்து போனாய்
என் உயிர் வாழ்ந்திடும்
நேரம் உன் கையிலே

நீ வந்து போனது….

திங்கள் செவ்வாய்
இன்றே நகரும்
என்நாளென்று
இன்பம் நுதரும்
நான் கண்டேன்…
என் மரணம்

நெஞ்சை உண்ணும்
தொண்டை கமரும்
பஞ்சை பற்றி
செந்தீ பரவும்
ஓ எங்கே…
என் அமுதம் ?

திரை சீலைகள்
இல்லாத
என் ஜன்னல் ஊடாக
தேடினேன்

வெளி ஓசைகள இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல்
பாடினேன்…

என்னை உன்
உள்ளம்கை மீது
நீ தாங்கி தாலாட்டு,
ஆடினேன் !

சாகாவரம்…
நீ தந்தால்
நான் வாழ்கிறேன்

நீ வந்து போனது…

விண்ணை விட்டு
செல்லும் நிலவே
பெண்ணை கண்டு
நின்றால் நலமே
ஓ இங்கே…
நான் தனியே

முன்னும் பின்னும்
முட்டும் அலையே
எங்கே எங்கே
எந்தன் கரையே
நீ சொன்னால்…
சேர்த்திடுவேன்

கடல் கண்ணாலே
நீ பார்த்த
பார்வைகள் போதாமல்
ஏங்கினேன்

சிறு ஓசைகள்
கேட்டாலும்
நீ தானே என்றே
நான் தேங்கினேன்

வெறும் பிம்பத்தை
நீ என்று
கை நீட்டி ஏமாந்து
போகிறேன் !

கள்ளம் இல்ல
வெள்ளை நிலா
நீதானடி

நீ வந்து போனது…

இன்னுமொரு இனிய பாடலுடன் களம் காண்கிறோம். இசை எங்கும் இனிக்கட்டும், தமிழ் எங்கும் பரவட்டும்.

நெஞ்சே நெஞ்சே…. – யான்

இவர் தமிழ் உச்சரிப்பை பாராட்டாதவர்களே இல்லை. 90களில், பலபல மெலோடிகளின் சொந்தக்காரர் இவர்: உன்னி கிருஷ்ணன். இப்பொழுது யான் என்னும் படத்தில் ஒரு சோகமான காதல் கீதத்தில் பாடியுள்ளார். தொழிநுட்ப வளர்ச்சியா, அல்லது இவரது தனித்துவமான நேர்த்தியா என்று தெரியவில்லை, குரல் இன்னும் அப்படியே இருக்கிறது, ஈர்க்கிறது. பாந்தமான தாலாட்டு போல, அமைந்துள்ள பாடல். வரிகளுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுத்து, குரலில் உணர்ச்சியை குழைத்து, இசையை குறைத்து, வெகு சிறப்பாக வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். கேபா அவர்களின் கித்தார் எப்பொழுதும் போல் விளையாடியுள்ளது. இன்னும் ஒரு இனிய பாடல் நம்முடன் சேர்க்கிறது, காற்றோடு கனக்கிறது.


படம்: யான்
பாடல்: நெஞ்சே நெஞ்சே
பாடலாசிரியர்: கபிலன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சின்மயி

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?

பூமி இங்கே
மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும்
மழைதுளி எங்கே ?

தூரம் நின்று நீ
என்னை கொல்லாதே !
வேரும் பூவும்
வேறென்று சொல்லாத !

காதல் அருகேயில்லை
அதனால் தொல்லை
அறிவேனோ மனமே ?

உன்னை மறந்தாபோனேன் ?
இறந்தா போனேன் ?
வருவேன் ஓர் தினமே !

நெஞ்சே நெஞ்சே…

பூவை தொட்டு வந்தாலும்
கையில் வாசம்
விட்டு போகாதே !

உந்தன் மனம் தான்
மறப்பேனோ ?
அதை மறந்தால்
இறப்பேனோ ?

கண்ணை மூடி
தூங்க வேண்டும்
ஆடு பெண்ணை
அழகிய லாலி

காதல் கண்கள்
தூங்கும் போது
பூவே உந்தன்
புடவையே தூளி

என்னை விட்டு நான்
போனேன் தன்னாலே
கண்ணீரில் மீனானேன்
உன்னாலே !

பேச வழியேஇல்லை
மொழியே இல்லை
தவியாய் நான்
தவித்தேன்…

காதல் கனவே
உன்னை முழுதாய்
காண….
பிறையாய் நான்
இளைத்தேனே !

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?

பூமி இங்கே
மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும்
மழைதுளி எங்கே ?

இன்னமொரு பாடலுடன் இனிதே சந்திப்போம்.

லேசா லேசா…

கவிஞர் வாலி காற்றோடு கரைந்து சரியாக ஒரு வருடமாகிவிட்டது. இன்னுமின்னும் அவரது கடைசி பாடல்கள் வெளிவர உள்ளன. இசைப்பா அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வாலி வாரம் ஏற்படுத்துயது. பல பரிணாமங்கள் கொண்ட அவரது பாடல்கள், வரிசையாக இங்கு வெளிவந்தன. (சொடுக்கவும்) இன்றும் அவரது பாடல்கள் நம்மை இன்பம் கொள்ளசெய்கின்றன. கவிஞர் நெல்லை ஜெயந்தா அவரது பண்புகள் பற்றி எழுதி இருக்கிறார் -> வாசிக்கவும்

வாலியின் வாழ்வு
வாலியின் வாழ்வு

லேசா லேசா என்னும் படத்தில் வரும் அற்புதமான பாடல், படத்தில் எங்கும் பெரிதாக பயன்படாமல், பல உணர்வுகளை குவிக்கும் பாடல். காதலன் வருகைக்காக நாயகி காத்திருக்கும் பாங்கில் அமைந்த வரிகள். அவனது வருகைக்காக ஏங்கி நிற்கும் மனதில், அவள் படும் பாடும், அவன் செய்ய வேண்டிய செயலும் ஒருங்கே நிற்கிறது. ரசிக்க வைக்கும் ஏக்கம் என்றே சொல்ல வேண்டும். சாக்ஸபோன் கொண்டு Intredules பல இந்த பாடலில் உள்ளன. மனதின் ஆழத்தின் அடிவாரத்தில் உள்ள சோகத்தை காற்றின் அலைகள் கொண்டு மேல் எழ செய்கிறது, இசை என்னும் சோம பானம். ஹாரிஸ் ஜெயராஜ், அனுராதா ஸ்ரீராமை சரியாக தெரிவு செய்துள்ளார். காணொளி, பாடலை கெடுக்காமல், அதே சமயம் மங்கையின் உணர்வை தொட்டு, திருமுகத்தை மறைத்து அமைந்துள்ளது. பெண்ணின் பொதுப்படையான வெளிபாடு போலும்.

படம் : லேசா லேசா
பாடல் : லேசா லேசா
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
பாடலாசிரியர் : வாலிப வாலி  
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

லேசா லேசா – நீ
இல்லாமல் வாழ்வது
லேசா லேசா…

லேசா லேசா…
நீண்ட கால உறவிது
லேசா ?

காதல் தேவன்
கோவில் தேடி
வருகிறதே…
விரைவினிலே…
கலர்கலர் கனவுகள்
விழிகளிலே…
உனக்கெனவே…
உலகினிலே…
பிறந்தவளே !

லேசா லேசா…

நான் தூங்கி நாளாச்சு
நாளெல்லாம் பாலாச்சு
கொல்லாமல் என்னை
கொன்று வதைக்கிறதே

சொல்லாமல் ஏக்கம்
என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன்
வண்ணம் தெரிகிறதே…
விரிகிறதே…

தனிமையில் இருக்கையில்
எரிகிறதே..
பனி இரவும்
அனல் மழையை
பொழிகிறதே…

லேசா லேசா…

வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுகாற்று
உனைதல்லவா !

உன் தேகம்
ஓடும் ரத்தம்
எனதல்லவா !

வெவ்வேறு…

நீ என்றால்
நான் தானென்று
உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரில்
உயிர் கரைய
உடனடியாய்…
உதடுகளால்…
உயிலெழுது…

லேசா லேசா…

இன்னும் இன்னும் இனிய பாடல்கள், வலம் வர காத்துக்கொண்ட்டே இருக்கிறது. விரைவில் சந்திப்போம், தமிழை சிந்திப்போம்.

isaipaa vaali

குல்முகர் மலரே…

இசை வணக்கங்கள் ,

                   கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்தநாளை ஒட்டி  தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவரின் பாடல்கள் இசைப்பாவில் இடம்பெற உள்ளது..இன்று காணவிருக்கும் பாடல் பெரும்பாலானோரால் ரசிக்கப்பட்ட- ரசித்து கொண்டே இருக்கும் பாடல் . பாடல் இடம் பெற்ற படம் “மஜ்னு” – பாடல் “குல்முகர் மலரே..குல்முகர் மலரே..” ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. வரிகளில் உள்ள உணர்வுகள் பாடல்களை மெருகேற்றி அழகாக்கியுள்ளது. பாடியவர்கள் குரலும் மனதை வருடுகிறது.

vairamuthu 60

                  என் இசைபட்டியலில் பெரும்பாலான பாடல்கள் வைரமுத்து அவர்களில் பாடல்கள் இடம் பெறுவது வழக்கம்.மிகவும் அழகான வரிகளில் காதல் என்னும் மாலையை  வார்த்தைகள் என்னும் பூக்களால் தொடுத்துள்ளார் கவிஞர்.

                    மலர்கள் மென்மையாக இருப்பது வழக்கம். மென்மை கொண்ட மலர் தன்னை கொலை செய்வதாக தன் காதலியை கூறுகிறான்.  தன் இரவை மை இட்டுக்கொல்கிறாள் என்றும் தன்னை கவிஞன் ஆக்க வேண்டாம் என்றும் அழகிய வரிகளில் காதல் ததும்ப வரிகள் அமைத்து இருக்கிறார் கவிஞர். வாருங்களேன் இசை கொண்டு வரிகளில் நனையலாம்..

படம்:மஜ்னு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன் ,டிம்மி ,அனுபமா
பாடலாசிரியர் : வைரமுத்து

மலரே மலரே மலரே
மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில்
மனதில் முகவரி என்ன
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோ

குல்முகர் மலரே
குல்முகர் மலரே
கொல்ல பாக்காதே
உன் துப்பட்டாவில் என்னை
கட்டி தூக்கில் போடாதே

(குல்முகர் மலரே குல்முகர் மலரே …)

தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே ….
மலரின் தொழிலே
உயிரை கொல்லுவதில்லையடி
மனிதன் உயிரை கொன்றால்
அதன் பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி

குல்முகர் மலரே…மலரே மலரே

உயிரைத் திருகி உந்தன்
கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு
உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே
விண்மீன் பறிக்க விழியில்லை
என்று கண்களை பறிக்காதே
என் இரவை எடுத்துக் குழைத்துக்
குழைத்து கண் மை பூசாதே

என்னை விடவும் என்னை அறிந்தும்
யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆகாதே(2)…

குல்முகர் மலரே….

உடைந்த வார்த்தையில்
உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில்
புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில்
கல்லை எரிந்து கலகம் மூட்டுகிராய்
இன்று ஐந்தரை மணிக்குள்
காதல் வருமென அறிகுறி காட்டுகிறாய்

மௌனம் என்பது உறவா பகையா
வயது தீயில் வாட்டுகிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே
ஏனடி பெட்ரோல் ஊத்துகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..

மலரே மலரே…..

மலரே மலரே குல்முகர் மலரே…….

வைரமுத்து வாரம் தொடர்கிறது. நாளையொரு முத்தான பாடலுடன், இணைவோம். இசை எங்கும் பரவட்டும்.

vairamuthu click

என் காதல் தீ….

இசை வணக்கம் நண்பர்களுக்கு,

               ஒரே புதிய பாடல்களாக வருகிறதே என்ற நண்பர்களின் கருத்துக்கு இணங்க. கொஞ்சம் பின்நோக்கி செல்வோம். இன்று பாடல் இடம்பெற்ற படம் இரண்டாம் உலகம்.நீண்ட நாள் இடைவேளைக்கு பின்னர் எனக்கு மிகவும் பிடித்த பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடல். அனைவரையும்  மிகவும் கவர்ந்த மெலடி என்றும் கூறலாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், வைரமுத்து அவர்களின் வரிகளுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட தேனாகவே இனித்து உள்ளத்தைக் கரைக்கும் பாடல்.

            இரண்டு உலகம் இருப்பினும் மிகவும் நேர்த்தியாக காதல் இரு மனங்களை அழகுற சேர்ப்பதையும், எல்லா நிலங்களிலும் பூத்துக்குலுங்கும் பூவென காதலை அழகாக வடிவம் கொடுத்து இருக்கிறார் கவிஞர்.உடலிலும் உயிரிலுமாகக் காதல் எப்படி கலக்கிறது என்றும் வரிகள் பாடப்பட்டு இருக்கிறது இல்லை இல்லை காற்றில் கரைவது போல அமைத்து இருக்கிறது. பாடலை ரசிப்போம் வாருங்களேன்.

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்

என் காதல் தீ…தீ வாசம் நீ
கண்பார்த்தோமா கைசேர்ப்போமா
பல உயிர்கள் ஏரியும் உடல்கள் மாறியும்
பயணப்படுவது காதல்

காதல் சாதல்

காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்னில் விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும்
வேண்டும் கண்ணே உண்மையடி

காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்னில் விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும்
வேண்டுமடி

என் காதல் தீ… தீ வாசம் நீ…..
கண்பார்த்தோமா கைசேர்ப்போமா

உடல்கள் இரண்டும் சேருமுன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வடிவில்
உயிரை தொடுவது காதலே

இதயம் இரண்டும் தூரம் தான்
இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே
இதயம் தொடுவது காதலே

ஊசி போடும் ரெண்டு கண்களில்
உயிரை குடித்தவள் நீ
உயரங்காட்டும் காட்டும் பூக்கள்
இரண்டினில் உலகை உடைப்பவள் நீ

காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்னில் விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும்
வேண்டும் கண்ணே உண்மையடி

(பெண்கள் கோரஸ்…)
காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும்
வேண்டுமடி

(ஆண்)
உலகில் காதல் பழையது
உற்றபொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா
பொழுதும் நிகழ்வது

உலகின் நெருப்பு காதலே
உயிரில் நெருப்பு காதலே
உண்மை காதல்
உலகைவிடவும் பெரியது
குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தலில்

குலுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும்
கானல் வெளியிலும்
படரும் நிழல் இதுவே
கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி

பின்னே பிறந்து முன்னே வளர்த்தது
என்னே செழுமையடி

அதை முத்தம் எடுத்து
சித்தம் துடிக்குதடி
பெண் பாவாய் வா
கண் பாவாய் வா
செங்கோதாய் வா
செந்தேனாய் வா


 
இயக்குனர் செல்வராகவன் உடனான ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம். மேலும் இனிய பாடல்களுடன் சாந்திப்போம்.

மேலே மேலே தன்னாலே…

நாயகியை பலத்த எதிர்பார்ப்புடன் காணும், நாயகனின் உணர்வுகளை பதிவு செய்யும் பாடல். அவள பாத்துடாதடா.. பாத்தா அப்படியே (காதல்ல) விழுந்திடுவ – என அனைவரும் சூளுரைக்க, சும்மா இருப்பாரா நம்ம வாரிசு. நான் எல்லாம் அனுமார் பக்தர்…. எங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது, என்ற ஏத்தத்துடன் கண்டு, மேலே மேலே போறார்… காதல் வானில் விழுந்த தேனியாய், மயங்கி, கிறங்கி, ஆட்டம் போடுகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளல் இசை இனிமையாக உள்ளது. பல நாட்களுக்கு பின் ஒலிக்கும் கார்த்திக்கின் குரல், இன்னுமும் அதே வசீகரத்துடன் உள்ளது. தாமரையின் எளிய வரிகள், எதுகை மொவனை எல்லாம் மிகவும் பொருத்தமாக வந்துள்ளது : தூறல், சாரல், ஈசல், ஆவல், மோதல், ஏஞ்சல் ! இன்னும் ஒன்று : கொடும, அரும, பெரும, இனிம, பொறும, தெறம !

பாடல் : மேலே மேலே தன்னாலே
படம்: இது கதிர்வேலன் காதல்
பாடியவர் : கார்த்திக்
பாடலாசிரியர் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டு போனாளே
அந்த புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாள்

மேலே மேலே….

ஆள திண்ணு போனாளே,
ஆட்டம் போடா வச்சாளே,
அந்தரத்தில் என்ன தான்
பத்த வச்சுட்டாளே !

அவன் தூர நின்னா தூறலு,
என் பக்கம் வந்தா சாரலு,
அவளாலே நான் ஆனா ஈசலு !

அவ மேலே ரொம்ப ஆவலே,
அதனாலே உள்ளே மோதலு,
அவன என்னோட காதல் ஏஞ்சலு !

வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
பாடாதே நீயும் லூசா லூசா

அவ ஒரு அழகிய கொடும,
அத பொலம்பிட பொலம்பிட அரும,
நிதம் என்ன பாத்ததும் ஏறிப்போச்சு பெரும!

அவ ஒரு வகையில இனிமை,
அத அறிஞ்ஜிட அறிஞ்ஜிட புதும,
என்ன தொட்டு பேசிட கூடிப் போச்சு திறம !

அவ நேருல வந்தா போதும்,
தெருவெல்லாம் தேரடியாகும்,
அவ கண்ணாலே பேசும் தீபம் !

மேலே.. மேலே….

கடவுள துதிப்பவன் இருப்பான்,
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்,
அட அவல பாத்திட எல்லாத்தையும் மறப்பான் !

ஒலகத்த ரசிப்பவன் இருப்பான்,
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்,
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான் !

அவ ஒரு முற வச்ச காரம்,
என் உசுருல நித்தம் ஊரும்,

அவ தீராத நீராகாரம் !

மேலே… மேலே…
வா ராசா ராசா…

நல்ல பாடல். படத்தை ஒரு முறை பார்க்கலாம். இசை எங்கும் பரவட்டும். இனிமை எங்கும் பொங்கட்டும். வாழ்த்துக்கள்

கனிமொழியே….

இசை வணக்கம் நண்பர்களுக்கு,

                                         வைரமுத்து  அவர்களின் பாடலுடன் இப்பதிவில் சந்திப்பது மகிழ்ச்சி.  என் பாடல் பட்டியலில் பெரும்பாலும் வைரமுத்து அவர்கள் எழுதிய பல பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். வரிகளை ரசிக்க பாடல் கேட்பது  தனி இன்பமே !  பாடலை ரசிப்பது பல வகை உண்டு நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பது பொறுத்து பாடல்வரிகளையும் ரசிப்போம்.

                                        இரண்டாம் உலகம் படத்தில் இடம் பெற்ற பாடல்  அண்மையில் ரொம்பவும் பிரபலமான பாடலும் கூட. கார்த்திக் குரலில் ரிங்காரம் போல் நம்மையும் பாட வைக்கும் பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் , அனிருத் ரவிச்சந்திரன்  இசையை பாராட்டியே ஆகவேன்டும். பாடலின் பேக்கிரவுண்ட் கரோக்கேவும் அருமை. இசை வடிவமைத்த விதமும் அழகு ,சினிமாட்டோகிராபியும் அருமை.

                                       கதாநாயகன் தன் காதலை ஏற்றுக்கொள்ள நாயகியை சுற்றி சுற்றி வருகிறான். நாயகி அவன் மீது காதல் கொண்டும்  அவள் அழகுற மறைத்து இருப்பதை நாயகன் கூறுகிறான். அவள் காதல் வேண்டும் என்பதற்காக அவள் மனதை இலகச் செய்ய கடைக்கண் பார்வை போதும் என்றும்….ஒரு சிறு பார்வை போதும் என்று மன்றாடி உருகுகிறான். பாடலை ரசித்த வண்ணம் வரிகளையும் ரசிப்போம் வாருங்களேன் !…

படம்: இரண்டாம் உலகம்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: கார்த்திக்,ஹரிணி ராமசந்திரன்

கனிமொழியே என்னை
கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை
தின்று போகிறாய்

கனிமொழியே என்னை ….

இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்

ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்
மறு பாதி கண்ணில்
ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா..

நான் எட்டு திக்கும் அலைகிறேன்…

ஊ….ஊ…ஊ….. ஹா..ஹ ஹ ஹ…..ஹா

உந்தன் கன்னத்தோடு எந்தன்
கன்னம் வைத்தால்
நானும் மண்ணில்
கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்

அடி உந்தன் கன்னக்குழியில்
என்னை புதைத்து வைத்தாய்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்..

ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
(ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…)
சிறு காதல் பேசு ஊமைத் திமிரே..
(சிறு காதல் பேசு ஊமைத் திமிரே..)

நான் தேடித் திரியும்
வான்மீன் நீதானே தென்றலே….
வா முன்னே முத்தமா கேட்கிறேன்?
உருவம்தான் கேட்கிறேன்

கனிமொழியே…ம்குமும்ம்ம்
கடைவிழியாய்…ம்குமும்ம்ம்

ம்ம்ம்ம்முஹு ஹே ஹே…

பறவை பறக்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவைமீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என்கண்கள் உந்தன் மீதே விழிந்திருக்கும்

என்னைக் கட்டிப்போடும் காந்தச்சிமிழே…
ஓ..ஹோ..
ஒரு பாட்டுப் பாடும் காட்டுக்குயிலே
ஹா…ஹா..ஹ ஆ
என் காலை கனவின் ஈரம் நீதானே
வாழலாம் வா பெண்ணே
வலதுகால் எடுத்துவை
வாழ்க்கையை காட்டவை

கனிமொழியே என்னை
கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை
தின்று போகிறாய்

(பெண்…)

இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்

(ஆண்…)

ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்
மறுப் பாதி கண்ணில்
ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

இயக்குனர் செல்வராகவன் உடனான ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம். மேலும் இனிய பாடல்களுடன் விரைவில் வருகிறோம். இசையுடன் ஆனந்தம் பெருகட்டும்.